முள்ளும் மலரும் 11

6.8K 225 73
                                    

கனவுலகத்தில் இருந்தவளை உலுக்கினான் ராம் " அக்கா நாம அங்க போக வேணாம் "என்றான் கோபமாக,
" சரி நீ வராத.. நானும் மீராவும் போய் ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வரோம். இந்த நிலாவுக்கு ஏத்த சூரியன் அங்க கிடைக்காமலா போவான் " என்று சிரித்துக் கொண்டு கூறியதும் திடுக்கிட்டவன் " அடிச்சேனா பல்லெலாம் தெரிச்சிடும்.. பார்த்து பேசு நிலா.. அக்கா நீ என்னக்கா பண்ற. இவ பேசறத கூடக் கேட்காம.. என்னமோ பண்ணித் தொலைங்க " என்று கத்திவிட்டுச் சென்றான்..

நாம விளையாட்டா சொன்னதுக்கு இவ ஏன் இந்த குதி குதிக்குறான். எரும.. கடவுளே.. முதல்ல இவனுக்கு ஜோடி சேர்த்து விடனும்.அப்போதான் மீராவ தொல்லை பண்ணமாட்டான் என மனதில் நினைத்த நிலா அதை சத்தமாக சொல்லிவிட,

அவள்மீது கொலைவெறியில் இருந்தவன் இதைக்கேட்டு ஓடிவந்து நங்கு நங்கென்று தனது கோபம் தீரும் வரை கொட்டிச் சென்றான்.
பாவம் மீராவிற்கு இது எதுவும் தெரிய வாய்ப்பில்லை..
"""""""""""""""""""""""""""""""""""""""""""
" மம்மி கண்டிப்பா மீரா வருவால்ல... எங்காவது சொதப்புனா அவ்ளோதான். கடைசி வரைக்கும் உன்பையன் தேவதாஸ் தான் " என்று வாசலைப் பார்த்தபடியே கீதாவிடம் புலம்பிக் கொண்டிருந்தான் கிருஷ்.

" ஏன்டா அவ்ளோ அக்கறை இருக்கறவன் அவள வீட்டுக்கு போய் அழைச்சிட்டு வரவேண்டியது தான " என சளித்துக் கொண்டவரிடம்

" ஆமா உம்மருமக அப்டியே நான் கூப்ட உடனே ஓடி வந்திடப் போறா.. போ மம்மி கடுப்ப கிளப்பிக்கிட்டு " என்றான்.

" இப்பவே அப்படினா கல்யாணத்துக்கு எப்படி சம்மதிக்க வைப்பிங்க தம்பி " என்று கேட்ட தனது அண்ணியிடம்

" அதுக்குத்தான இங்க வரவெச்சிருக்கோம்.. அவ சாமி கும்பிட எப்படினாலும் கண்ண மூடுவா.. அந்த சமயத்துல நான் தாலி கட்டிடரேன்.. எனக்கும் நம்ப குடும்பம் முன்னாடி என் கல்யாணம் நடந்துச்சுனு ஒரு திருப்தி இருக்கும்ல " என்று புன்னகையுடன் சொன்னவனின் காதைத் திருகிய தனது பாட்டி ரங்கம்மாவிடம் " ஐயோ சும்மா சொன்னேன் ரங்ஸ்.. நான் மட்டும் அப்படி பண்ணா என்மேல கேஷ்  கூட அந்த ராட்சசி போட்ருவா. அவள இங்க வரவெக்கிறதுக்கு உண்மையான காரணம் இன்னைக்கே
அவளுக்கு தெரியாத எல்லா உண்மையும் எடுத்துச் சொல்லி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்குற மிஸ்அன்டர்ஷ்டேன்டிங்க தீர்க்கனும்னு தான்..
இன்னைக்கு என்னோட டே.. சோ நான் நினைச்சது நடக்கும்னு நினைக்கிறேன் " என்று காதைத் தடவியபடியே கூறி முடித்தான்.

முள்ளும் மலரும் (முடிவுற்றது)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin