சிரியா

65 3 2
                                    

தன் சின்ன சிறிய கண்களை மூடி
        துயில் கொண்ட தேவதை
இன்று இரத்த கண்ணீர்
          வடிக்கின்றது

தன் சின்ன சிறிய கரங்களால்
        வண்ணத்துப் பூச்சியுடன் விளையாட ஆசைப்பட்ட மனம்
இன்று சிவப்பு நிற இரத்தத்தை
             தழுவியது

தன் சின்ன சிறிய சுவாச கமலத்தால்
         வாசம் நிறைந்த மலர்களை
சுவாசித்த தேவதை
இன்று புகையும் உறைந்துப் போன
         இரத்தத்தையும் சுவாசித்தது

தன்னை சுற்றி நடப்பது அறியாது
       தன் சிறிய விழிகளால்
வழி மேல் விழி வைத்து
     இதழில் சிறிய புன்னகையுடன்
இறந்தப் பெற்றோருக்கு காத்துக் கொண்டிருக்கும்
                சின்ன சிறி(ரி)ய தேவதை!

கவிதைகள்Where stories live. Discover now