மாதா, பிதா, குரு, தெய்வம்

1.1K 13 24
                                    

° பத்து திங்களுக்கு சொர்கத்தை
விட பாதுகாப்பான இடத்தை
-கொடுத்தது யார்?
° மாசு படியாத காற்றை தனக்கு சுவாசிக்க கொடுத்து, தன் ரத்தத்தையும்
-கொடுத்தது யார்?
 ° பத்து மணி நேரம் உயிர் போகும் வலியை கூட சுகம் என்று நினைத்து நமக்கு உயிர்       
 - கொடுத்தது யார்?
° தன் கனவையும் அழித்து கொண்டு நம் கனவுக்கு
உயிர்
-கொடுத்தது யார்?
                               
அவள் பெயர் தான்~ மாதா!

° தன்னை பத்து திங்கள் கருவில் வைத்து பாதுகாக்க வில்லை என்றாலும் வாழ் நாள் முழுவதும் நெஞ்சில் வைத்து
-பாதுகாப்பது யார்?
 ° நாம் தவறான வழியில் செல்லும் போது சரியான வழியை காண்பித்து நம் வாழ்வை அழியாமல்
-பாதுகாப்பது யார்?
° வாழ்வில் செல்வம் மட்டும் முக்கியம் அல்ல அன்பான உறவுகளும், நட்பும் முக்கியம் என்று போதித்து நம் மதி ,செல்வதிடம் அடிமை பட்டு அழியாமல்
-பாதுகாப்பது யார்?
° நம் கனவு உயிர் பெற்று வர அல்லும் பகலும் தன் உயிரை கொடுத்து அழியாமல்
-பாதுகாப்பது யார்?
 அவரது பெயர் தான் ~பிதா!

° தான் பெற்று எடுக்கவில்லை என்றாலும் தன் குழந்தை போல் மதி என்னும் செல்வத்தை நமக்கு
-கொடுத்தது யார்?
° உலகில் நல்லது மட்டும் அல்ல தீயதும் உள்ளது என்று உணர்த்தி, அதை வெல்வதற்கான யுக்தியை நமக்கு
-கொடுத்தது யார்?
° நம் கனவு மெய் பெற நல் வழியை காட்டி நம் வாழ்வில் இன்பத்தை
-கொடுத்தது யார்?
அவரது பெயர் தான் ~குரு!

° நம்மை உருவாக்கி உலகில் ஆதியும் அந்தமுமாய்
-இருப்பது யார்?
° வாழ்வில் இருள் சூழுந்து இருக்கையில் ஒளியை கொடுத்து நம்மை காத்து கொண்டு
-இருப்பது யார்?
 ° உலகில் இருக்கும் அனைவரும் தம் குழந்தைகளாக எண்ணி இரட்சித்து கொண்டு
 -இருப்பது யார்?
 ° நம் கனவு உயிர் பெற நம் வாழ்வில் அன்பான மாதாவையும், குணம் மிகுந்த பிதாவையும், நல் குருவையும் கொடுத்து நம் வாழ்வில் ஒளி ஏற்றி கொண்டு
-இருப்பது யார்?
அவரது பெயர் தான்~ தெய்வம்!

Author notes:
இவ்வாறு நம் வாழ்க்கையில் நடமாடும்  தெய்வங்களாய் இருக்கும் மாதா பிதாவை உங்கள் எதிர் காலத்தில் முதியோர் இல்லத்தில் விடாதிர்கள் அது பாவ காரியம் ஆகும்! அவர்கள் எப்படி உங்களை கண்ணுக்குள் வைத்து பார்த்து கொண்டார்கலோ, அவ்வாறு அவர்களை பார்த்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் அது உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம்! அதனை பாக்கியமாக கருதி மன நிறைவோடு செய்யுங்கள்!
 உங்கள் குருவை மறவாமல் என்றும் நெஞ்சில் கோவில் கட்டி வழிபடுங்கள்!
உங்களுக்கு அனைத்து வரத்தையும் கொடுத்த இறைவனை தினமும் இரு கரங்களை கொண்டு தொழுவுங்கள்!
                              நன்றி💐

கவிதைகள்Where stories live. Discover now