முன்னோட்டம்

220 32 37
                                    

எங்களின் முயற்சிக்கு தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் அளித்து வரும் வாசகர்களுக்கு நன்றிகளைதெரிவித்து கொள்கிறோம். எங்களின் அடுத்த கட்ட முயற்சியாக விருதுகளை வழங்கும் முனைப்பில் உள்ளோம்.

மற்றுமொரு விருதா..? இதிலென்ன மாறுபாடு இருக்கிறது என்று உங்களுக்கு தோணலாம். அதிர்ஷ்டவசமாக இதற்கு எங்களிடம் பதிலும் உள்ளது. இதுவரை பல்வேறு விருது வழங்கும் அக்கவுண்டுகளை பார்த்திருப்பீர்கள், அவை பெரும்பாலும் தமிழ் கதைகளுக்கு வழங்குவது இல்லை என்பது ஒருபுறமிருக்கட்டும். அப்படியே வழங்கினாலும் கதைக்கு தான் விருது வழங்குவர். எங்களின் இந்த விருதுகள் கதைக்கு அல்ல, கதை மாந்தர்களாம் கதாபாத்திரங்களுக்கு.. சிறிது மாறுபட்ட முயற்சி தானே.. !

நீங்கள் வாசித்த பல்வேறு கதைகளின் மாந்தர்கள் இப்போது உங்களால் விருது பெறப் போகின்றனர். கேட்கையில் சிறிது உற்சாகம் எனக்கே ஏற்படுகிறது. சரி இந்த விருதுகளுக்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தானே கேட்கிறீர்கள், நீங்கள் தான் பிரதான காரியமே செய்ய போகிறீர்கள். உங்கள் மனதை கவர்ந்த கதாபாத்திரங்களை நீங்கள் தானே பரிந்துரைக்க வேண்டும்.

இந்த விருதுகளுக்கு தாங்கள் தங்களுக்கு விருப்பமான கதைகளின் கதாபாத்திரங்களை பரிந்துரைக்க மூன்று விதிகள் உள்ளன.

1) வாசகர்கள் தாங்கள் வாசித்த கதாபாத்திரங்களை பாரிந்துரைக்க விரும்பினால் தாராளமாக எத்தனை கதாபாத்திரங்களையும் பரிந்துரைக்கலாம், உங்களுக்கு கட்டுப்பாடு இல்லை, அதே சமயம் எழுத்தாளர் அவருடைய கதையின் கதாபாத்திரத்தை பரிந்துரைக்க வேண்டும், என்றால் தன் கதையோடு சேர்த்து,
தான் வாசித்த மற்றொரு எழுத்தாளரின் கதாபாத்திரத்தையும் சேர்த்து
பரிந்துரைக்க வேண்டும்.

எதற்காக இந்த விதி : ஒரு எழுத்தாளன் நல்ல வாசகனாய் இருப்பது அவசியமென நாங்கள் கருதுகிறோம், எனவே எழுத்தாளனிடம் இருக்கும் வாசகனை வளர்க்க இந்த விதி.

2) இந்த விதி எழுத்தாளர், வாசகர் அனைவருக்கும் பொருந்தும், உங்கள் பரிந்துரைக்கு பின்னர், இந்த விருது அறிவிப்பினால் பயன் பெறுவரென நீங்கள் எண்ணும் உங்கள் தோழர்/தோழிகளில் மூவரை கமெண்டில் TAG செய்ய வேண்டும்.

எதற்காக இந்த விதி : எங்களின் முயற்சி விரைவாக பலரை சென்றடையவே இந்த முயற்சி, இதை விதியாக எண்ணாமல் உதவியாக எண்ண வேண்டுகிறோம்.

3)நீங்கள் பரிந்துரைக்கும் கதைகள்/சிறுகதைகள் எந்த GENRE ஆக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கதை/சிறுகதை முடிவடைந்திருக்க வேண்டும்.

எதற்காக இந்த விதி : கதாபாத்திரம் கதையின் போக்கில் மாறக் கூடியது, எனவே அதனை முழுமையாக ஆராய முடிவடைந்த கதைகள் வேண்டும் எனவே இந்த விதி.

கடைசியாக இது விதி அல்ல, வேண்டுகோள், கடந்த வாரம் முதலாக எங்கள் முயற்சிகளை நீங்கள் கண்டிருப்பீர்கள், எங்கள் முயற்சி மேலும் வளர இன்னும் பலரை சென்றடைய, எங்கள் அக்கவுண்டை நீங்கள் FOLLOW செய்வதன் மூலம் எங்கள் முயற்சி நம் முயற்சியாக மாறலாம், உங்கள் கரங்களை கோர்க்க எங்கள் கரங்கள் செந்தாமரை இதழ்களை போல விரிந்துள்ளன. எங்களுடன் கை கோர்க்கும் முடிவு உங்களிடமே, இதனை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டுமென்பது இல்லை. முன்பு சொன்னது போல இது வேண்டுகோள் மட்டுமே.

என்னென்ன விருதுகள் எப்படி பரிந்துரைப்பது குறித்த விவரங்கள் விரைவில்.

வள்ளுவன் விருதுகள்Where stories live. Discover now