செந்தூரா(காதல் செய்வோம்) - 5

Start from the beginning
                                    

"ஏய் கிழவா.. என்னை பொண்டாட்டினு சொன்ன நாக்கை அறுத்து நாய்க்கு போட்டுடுவேன்..."

"நான் கிழவனா??? இன்னும் எனக்கு கல்யாணமே ஆகலடி ராஜாத்தி. என் அத்தை மவ ரத்தினம் நீ இன்னும் கண்ணாலம் கட்டிக்காம இருக்கையில உன் மாமன் எப்படி கிழவன் ஆவேன்??"

பேச்சு துள்ளலாய் வந்தது அர்ஜுனுக்கு.

பேச்சு துள்ளலாய் வந்தது அர்ஜுனுக்கு

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

அர்ஜுன் எம்பீஏ முடித்த பட்டதாரி. வெளிநாட்டு வேலை வாய்ப்பு வந்தும் விவசாயத்தின் மேல் நாட்டம் கொண்டு கிராமத்திலேயே தங்கி விட்டவன்.

அவனுக்கு ஷர்மினி என்றால் சின்ன வயதில் இருந்தே கொள்ளை பிரியம்.வாய் துடுக்காய் பேசுபவளை பதிலுக்கு பதில் பேசவிட்டு ரசிப்பான்.

இவளுக்கு இவன் தான் தோது என்று கூட வீட்டில் பெரும்பாலானோரின் எண்ணம்.

"சீ போடா..."என்று கத்த அங்கு அந்த நேரம் சரியாய் வந்து சேர்ந்த சௌபாக்கியவதி

"ஏய் என்ன பெரியவங்களை மட்டு மரியாதை இல்லாம பேசுறது??வர வர உனக்கு வாய் ரொம்பத்தான் நீளுது. இப்படியே பேசிட்டு இருந்தேன்னு வை நாக்கை அறுத்து நாய்க்கு போட்டுப்புடுவேன் பார்த்துக்க.."

அவள் சொன்னதையே அவர் திரும்ப படித்து விட்டு போக.. அர்ஜுன் வாய் விட்டு சிரிக்க... வருண் உதட்டில் கூட அடக்கப்பட்ட சிரிப்பு..

அர்ஜுன் சிரித்ததை விட வருண் சிரித்ததைதான் அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இந்த சிடுமூஞ்சிக்கு கூட காமடியனா போயிட்டேனா??

"அம்மா.."என்று அலறியவளை பாவம் கண்டுக்கொள்ளத்தான் யாருமே இல்லை.

"ஹஹஹா.... பொண்டாட்டி ஏன் இப்படி வாங்கிக் கட்டிக்கிற??"என்று சிரித்தான் அர்ஜுன்.

"பொண்டாட்டின்னு சொல்லாதடா..."என்று திரும்பவும் கத்தினாள்.

இவள் சத்தத்தை கேட்டு மாடியில் இருந்து இறங்கி வந்த ஆதிரா..

"ஆரம்பிச்சிட்டீங்களா உங்க சண்டையை?? ஏண்டி வந்தா நேரா அப்பாவை பார்த்துட்டு என்னை பார்க்க வர வேண்டியது தானே.. ஏன் அவன் கிட்ட வாயை கொடுக்குற??"என்று அவள் கையை பிடித்து கொண்டு மாடிக்கு ஏற

அவளின் இழுத்த இழுப்புக்கு போனாலும் திரும்பி வருணை பார்த்தாள் ஷர்மினி..

வருணின் பார்வையில் அப்பட்டமான பொறாமை கலந்த ஏக்கம்.. அவன் கண்கள் பிரதிபலித்த உணர்வில் தன்னையே தொலைத்து போனாள் ஷர்மினி.

ஆதிராவோடு சென்று அவளறையில் அமர்ந்தாலும் வருணின் பார்வை அவளை என்னவோ செய்தது.

"அவன் கண்ணுல என்ன இருந்தது? ஏன் என்னை அப்படி பார்த்தான்??"இதையே யோசித்து கொண்டிருந்தவளுக்கு அவனின் கடந்த காலம் தெரியாது.

வீரராகவனுக்கு இன்னொரு குடும்பம் இருப்பதும் அதனால் பிரச்சனை வந்ததும் தெரியுமே ஒழிய விரிவாய் அங்கே நடந்த பாச போராட்டம் அவளறியாதது. அதனால் அவர்கள் இழந்த இழப்பு அவளுக்கு தெரியாது.

ஊருக்குள்ள பல பேரு ரெண்டு பொண்டாட்டி வச்சிட்டு இருக்கானுங்க.. அதே வரிசைல என் மாமாவும் போய் சேர்ந்துட்டாரே இவருக்கு ஏன் இப்படி புத்தி போச்சி? என்ற சந்தேகம் இருந்தாலும் அவளின் வயதோ அல்லது அவளது விளையாட்டுத்தனமோ அதில் தீவரமாய் அவளை இறங்க விடவில்லை.

அவளுக்கும் அவள் அப்பாவை போல் வீரராகவன் மேல் கோபம் வருத்தம் இருந்தாலும் தன் மேல் உயிரையே வைத்திருக்கும் மாமனிடம் முகத்தை முறிக்க முடியவில்லை.

ஆனால் வருணின் பார்வை அவளுக்கு தெரிந்த மட்டும் அதில் தெரிந்த ஏக்கம் அவள் இதயத்தை பிசைந்ததை போல் இருந்தது.

"ஏன் உலகத்துல இருக்குற ஒட்டு மொத்த கவலையையும் குத்தகைக்கு எடுத்தாப்புல இருக்கான்?? யாரையும் கண்டுக்காம காலையில் இருந்து திமிரா திறிஞ்சவனுக்கு என்ன வருத்தம் இருக்கும்??

மாமா மேல வருத்தமோ?? ஆனா இப்ப எல்லோரும் சந்தோஷமாத்தானே இருக்காங்க??

ஏன் அவனுக்குனு யாருமே இல்லாத மாதிரி பார்த்தான்?? ஏன் நாங்கலாம் இல்லையா?? நாங்க அவன் குடும்பம்தானே என்ன கஷ்டம்னு எங்க கிட்ட சொல்ல கூடாதா???

என் கிட்ட சொல்ல கூடாதா??? ஏன் நான் இல்லையா??"

இவள் மனம் போகும் மாயை அவளுக்கு புரியுதா?? என்று விதி கை கட்டி வேடிக்கை பார்க்க தொடங்கியது.

செந்தூரா (காதல் செய்வோம்)Where stories live. Discover now