செந்தூரா(காதல் செய்வோம்) - 4

1.4K 88 23
                                    

ஷர்மினி தாய்மாமனின் வீட்டிற்குள் நுழையும்பொழுது கை கட்டி தூணில் சாய்ந்து நின்றவனை பார்த்தபொழுது..

"அம்மாடியோ யாருமா இது முகத்துல முள்ளை கட்டிட்டு நிக்கிறது" என்றுதான் பார்த்தாள்.

அதன்பிறகு அவளின் அம்மா அவன் அருகே போய்..

"நல்லா இருக்கீகளா தம்பி?"என்றதும் யாரென விளங்கி போனது அவளுக்கு.

"அட இதுதான் என் மச்சானா??"என்று வியப்பாய் பார்த்தபோதுதான் அவனை மேலிருந்து கீழாக கவனிக்க தோன்றியது அவளுக்கு.

உயரத்திற்கேற்ற உடற்க்கட்டுடன் கம்பீரமாய் இருந்தவனை பார்த்து..

"அட ஆள்கூட அம்சமாய்தான் இருக்கான்.. என்னா இந்த முகரையில மட்டும் கொஞ்சூண்டு சிரிப்பிறிந்தா இன்னும் சூப்பரா இருக்கும்."

என்று அவளே அவனுக்கு மார்க்கும் போட்டாள்.

ஆனால் பார்க்க பார்க்க அவளின் ரசனையும் மீறி கோபம் வந்து உட்கார்ந்துக் கொண்டது.

காரணம் அவள் அம்மா வந்து அவனை விசாரித்தபோது பதிலேதும் சொல்லாமல் நகர்ந்து போனதுதான்.அவருக்கு மட்டுமல்ல அவன் அங்கிருந்த யாரிடமும் பேசவில்லை.

யார் வந்து பேசினாலும் முகம் கொடுக்கவில்லை.இறுதியாய் அவன் அவனுடைய அன்னையின் முகத்தையே முறித்தபோது அவளால் பார்த்துக் கொண்டு நிற்க முடியவில்லை.

அவள் குணம் தலைத்தூக்க... நேராய் அவன் முன் சென்று நின்றாள்.

அவன் அவனுடைய அம்மாவிடமே பேசவில்லை. அவளிடமா பேசிவிட போகிறான்??

அவள் வந்து அவன் குறுக்கே நின்றபோது... ஒரு பக்க புருவத்தை மட்டும் தூக்கி பார்த்தவன் அவளை காணாதது போல நகர்ந்து போனான்.

"அட கொப்புரானே.. சரியான திமிர் பிடிச்சவனா இருக்கான்... பேச வரேன்னு தெரியாமலா இருக்கும்.. திமிர் பிடிச்சவன்.."என்று அவன் போன திசையில் காலை வைத்தபோது... அவளை தேடிக் கொண்டு அவள் அம்மா வந்துவிட்டார்.

செந்தூரா (காதல் செய்வோம்)Where stories live. Discover now