செந்தூரா(காதல் செய்வோம்) - 3

1.3K 99 31
                                    


ஷர்மினி காலையில் எழுந்ததில் இருந்து கீழே சத்தம் தடபுடவென்று இருந்தது.

"என்னடா இது... காலையிலேயே வீட்டிலே இவ்வளோ சத்தம்.. நேத்து நைட்தானே வானதி கல்யாணம் பத்தி பேசுனாங்கனு சொன்னா.. அதுக்குள்ளேவா அப்பா மாப்பிளை ரெடி பண்ணிட்டாரு?"

என்று ஒரு கணம் பயந்தவள்

"ச்சே ச்சே இருக்காது... இருக்காது.. ஒரு வேளை பாட்டிக்கு ஏதாவது??"

எண்ணம் தோன்றியதுமே வேக வேகமாய் கீழே இறங்கி ஓடினாள்.. முதல் படியில் நிற்கையில் அம்மாவின் அழுகை சத்தம் கேட்க பயம் கால் கட்டை விரலிருந்து அடிவயிறு வரை சுரீலென இழுத்தது.

"ஐயோ பாட்டி..." என்றுஓடியவளின் பார்வையில்

வழக்கமாய் அமரும் தூணில் சாய்ந்து காலை நீள விரித்து வைத்து அமர்ந்து இருந்த ஆச்சியை கண்டதும் இழுத்த மூச்சி சீராய் வெளியானது..

"ஹப்பா பாட்டிக்கு ஒண்ணுமில்ல.."என்று நிதானித்தவள்..

பழையபடி தன் குறும்பு தலை தூக்க

"அதானே இந்த கிழவியாவது மண்டையை போடுறதாவது... அப்புறம் ஏன் அம்மா அழுதுட்டு இருக்கு?"என்று திரும்ப ஹாலில் எல்லோரும் குழுமி இருந்தனர்..

"லிங்கம் இது நல்லா இல்ல சொல்லிட்டேன்.. சண்டை சச்சரவுனு ஆயிரம் இருக்கத்தான் செய்யும் அதுக்காக சொந்தத அத்துஉடுறாப்புல பேசுறது சரி இல்லப்பு. அங்க உன் பொஞ்சாதியை பாரு...

அவ கண்ணீரு கூட உன்ர மனசை கரைக்கலைனா இந்த அளவுக்கு என் லிங்கம் மனசு எப்ப கல்லாச்சி?"

ஆச்சி பேசுவது புரியாமல் அருகில் நின்றிருந்த கார்த்திக்கிடம் என்னவென்று கேட்க..

"மாமாக்கு நெஞ்சி வலியாம் காலையிலதான் கனகம் ஆத்தாங்கரைல செய்திய கேட்டுட்டு வந்து சொல்லுச்சி.. பெரியம்மா போகணும்னு அழறாங்க..

பெரியப்பா இப்ப கூட நமக்கு செய்திய சொல்லனும்னு அவங்களுக்கு தோணல.. அப்படிப்பட்ட உறவு எதுக்குன்னு பெரியம்மாவை போக கூடாதுன்னு சொல்றாரு.."

செந்தூரா (காதல் செய்வோம்)Where stories live. Discover now