56

4K 159 79
                                    

" என்ன ஆச்சு. "-நான்.

பஸ் எடுத்திட்டாங்க.

" இப்பவாச்சும் சொல்லுங்களேன். "

" ஒன்னுமில்லை டீ. அம்மாவ பார்க்கனும்னு சொன்னீல. அதான். "

" இத நான் கண்டிப்பா நம்பனுமா??"-நான்.

என்கிட்ட இருந்து ஏதோ மறைக்கிறார்.

" நிம்மதியா தூங்கு. காலையில சொல்றேன்."

" எனக்கு தூக்கம் வரல.. என்னன்னு சொல்லுங்க."-நான்.

"அது.. சாரா.. எமோஷன் ஆயிடாத. "

" இந்த பீடிகைலாம் போடாம...நேரா என்ன ஆச்சுன்னு சொல்லுங்க. ப்ளீஸ்."-நான்.

"ம்ம்.. மதி அம்மா இறந்திட்டாங்க."

" ஹே!! விளையாடாதீங்க."-நான்.

" நான் ஏன் டீ விளையாட போறேன். ஷங்கர் தான் ஃபோன் பண்ணார். அவரும் ராஜியும் வந்திட்டு இருக்காங்களாம். "
.
.
.
" சாரா.. அழாத. இதுக்குத்தான் நான் உன்கிட்ட சொல்ல மாட்டேன்னு சொன்னேன். "-சூர்யா.

எப்படிங்க அழாம இருக்கிறது?? அவங்க என்ன திட்டிருக்கலாம் பட்.. என்ன அவங்க பொண்ணு மாதிரி தானே பார்த்துகிட்டாங்க.

இறந்தவங்கள நினைச்ச புலம்ப ஒன்னுமில்லை.. ஆனா இப்ப.
.
.
மதியோட வாழ்க்கை??

கல்யாணம் பண்ணனும். அவ தனியா எப்படி இருப்பா இனிமே??!!

ஏன் அவளுக்கு இப்படி ஒரு கஷ்டம்.

" ஏங்க.. அவகிட்ட ஹார்ஷா பேசிராதீங்க.. ப்ளீஸ்!!!மதன் வேற கூட இருப்பான்."-நான்.

"ம்ம்.. "

அவரோட ம்ம் தான் எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. பட் இப்படி ஒரு நிலைமையில தப்பா எதும் பேசிரமாட்டார்னு ஒரு நம்பிக்கை!!

மதி யோட வாழ்க்கை!!???

இந்த கேள்விக்குறிக்கான விடை என்னங்குறத நோக்கி எங்க பயணம் தெடர்ந்திச்சு. பஸ் ஸ்டான்டுல இருந்து ஆட்டோல தான் போனோம்.

அப்ப தான் நான் அவங்க அம்மா முகத்துல முழிக்கனும்னு எனக்கு நியாபகம் வந்துச்சு.

காதலில் விழுந்தேன்!!Where stories live. Discover now