32

3.7K 126 10
                                    

"ஹலோ"-நான்

"யாரு??"-விக்கி.

"விக்கி தானே??"

"ஆமா.. நீங்க யாரு??"

"நான் உங்கள லவ் பண்றேன்"

"யாரு நீங்க??"-விக்கி.

"கண்டுபிடிக்க முடிலையா??"

"யார் நீ?"

"சாரதா."

"என்ன வேண்டும் உனக்கு??"

"நான் உங்கள லவ் பண்றேன்."

"இது எப்பல இருந்து?? நல்லாதானே இருந்த??"

"தாத்தா இறந்தப்ப உங்கள பார்த்தேன்ல அப்ப இருந்து உங்களை பிடிச்சிருக்கு."

"லூசு மாரி பேசாம ஃபோன வைக்கிறியா??"

"நான் விளையாட்டா சொல்லுறதா நினைக்காதீங்க .. சீரியஸா பேசுறேன். "

"திடீர்னு சொன்னா என்ன சொல்றது சாரதா??"

"நான் உங்கள இப்பவே சொல்ல சொல்லல. யோசிச்சு பொறுமையாவே சொல்லுங்க"

"சரி.. ஃபோன வச்சிரவா??"-விக்கி

"ஹே!! இருங்க.. நாளைக்கு இதே டைம்க்கு கால் பண்றேன் .. "

"சரி "ன்னு சொல்லிட்டு ஃபோன வேகமா வச்சிட்டான்.

இதவிட கேவளமா யாராலும் ப்ரபோஸ் பண்ண முடியாது. எனக்கு என்ன பேசுறதுன்னே புரியாம தான் பேசினேன்.

நான் 10த் படிச்சிட்டு இருந்ததால ஃப்ரீ டைம் நிறையா இருக்காது. பிரேக்ல பேசினா தான் உண்டு. அதும் தம்பி பார்க்காம வேற பேசனும்.

நெகஸ்ட் டே கால் பண்ணா ஸ்விச்சுடு ஆஃப். யதார்த்தமா இருக்கும்னு விட்டுட்டேன். அடுத்த ரெண்டு நாளும் கால் பண்ணேன். எடுக்கல. வெள்ளிக்கிழமை மதியம் திரும்ப கால் பண்ணேன். நோ யூஸ். அன்னைக்கு ஈவ்னிங் திரும்ப என் கிளாஸ்மௌட் வீட்டுல இருந்து ஃபோன் பண்ணேன்.

எடுத்தான். எவ்ளோ காண்டு ஆகும் .

"நான் சாரதா பேசுறேன்."-நான்

"அஅ.. என்ன சொல்லு"-விக்கி

"ஏன் ஃபோன் எடுக்கல இவ்ளோ நாளா??"

காதலில் விழுந்தேன்!!Dove le storie prendono vita. Scoprilo ora