62 தன்வினை...

710 50 5
                                    


62 தன்வினை...

அரசு மருத்துவமனை

தேனிசையை மருத்துவமனையில் சேர்த்தனர் காவலர்கள். அவள் அறுவை சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டாள். அவளுக்கான சிகிச்சை துவங்கப்பட்டது. ஒன்றும் புரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்றான் திருக்குமரன். அவனது மூளை வேலை செய்யவில்லை.

சில மணி நேரத்திற்கு பிறகு, அறுவை சிகிச்சை அறையில் இருந்து மருத்துவர்கள் வெளியே வந்தார்கள். அவர்களிடம் சென்றார் ஆய்வாளர்.

"அவங்க எப்படி இருக்காங்க, டாக்டர்?"

"அவங்களோட முதுகெலும்பு ரொம்ப மோசமா பாதிக்கப்பட்டிருக்கு. அவங்களோட உடம்பு, இடுப்புக்கு கீழே செயலிழந்துடுச்சு..."

"அப்படின்னா, அவளால நடக்க முடியாதா டாக்டர்?" என்றான் திருக்குமரன் அதிர்ச்சியோடு.

"அவங்களால இனிமே நடக்க முடியாது... அவங்க இனி படுக்கையில தான் இருக்கணும்" என்றார் மருத்துவர்.

"என்ன சொல்றீங்க டாக்டர்?" என்று அரற்றினான் திருக்குமரன்.

"இனிமே அவங்களால எந்த வேலையும் செய்ய முடியாது. ஏன்னா, அவங்களோட காலை அவங்களால் அசைக்க முடியாது"

தன் முகத்தில் அறைந்து கொண்டு வெடித்து அழுதான் திருக்குமரன். ஏமாற்றத்தோடு பெருமூச்சு விட்டார் ஆய்வாளர். திருக்குமரனுக்கு எப்படி சமாதானம் கூறுவது என்றே அவர்களுக்கு புரியவில்லை.

"நீங்க அவங்ககிட்ட நாளைக்கு ஸ்டேட்மென்ட் வாங்கிக்கோங்க. இப்போதைக்கு அவங்கள டிஸ்டர்ப் பண்ணாதீங்க" என்று கேட்டுக்கொண்டார் மருத்துவர்.

சரி என்று தலையசைத்து விட்டு அங்கிருந்து சென்றார் ஆய்வாளர்.

"டாக்டர், இதுக்கு ட்ரீட்மெண்ட் கிடையாதா? அவளை குணப்படுத்தவே முடியாதா?" என்றான் திருக்குமரன்.

"முதுகெலும்பு மட்டும் உடைஞ்சிருந்தா நிச்சயம் அதை ட்ரீட் பண்ணிட முடியும். ஆனா, அந்த முதுகெலும்புக்கு சப்போட்டா இருக்கிற சவ்வு எல்லாமே கிழிஞ்சு, சிதைஞ்சி போச்சு. நீங்க வேணும்னா முயற்சி பண்ணி பார்க்கலாம். ஆனா எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அதனால் எந்த பிரயோஜனமும் இருக்காது"

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now