26 வழிபாடு

757 54 5
                                    

26 வழிபாடு

நற்கிள்ளியின் இல்லம் விருந்தினர்களால் நிரம்பி வழிந்தது. உறவுக்கார சிண்டு வாண்டுகள் எப்பொழுதும் இலக்கியாவை மொய்த்துக்கொண்டே இருந்தனர். முகிலனுக்கு ஃபோன் செய்ய அவளுக்கு நேரமே கிடைக்கவில்லை. அவனுக்கு அவள் ஃபோன் செய்ய மாட்டேன் என்று கூறினாள் தான். ஆனால் அது உண்மை இல்லை. அதை அவள் விளையாட்டுக்காக தான் கூறினாள். ஆனால் அவள் கூறியது உண்மையாக மாறியது.

இப்பொழுதும் அவள் சொந்தக்காரப் பிள்ளைகளால் சூழப்பட்டு தான் இருந்தாள்.

"அக்கா, உங்களுக்கு வரப்போற ஹஸ்பெண்ட் எப்படி இருப்பார்?" என்றால் அவளது உறவுக்கார பெண் இனியா.

"கிரேக்க கடவுளைப் பத்தி நீ கேள்விப்பட்டிருக்கியா?" என்றாள் தன் புருவத்தை உயர்த்தி.

ஆம் என்று தலையசைத்தாள் இனியா.

"முகிலன் அத்தான் அப்படித்தான் இருப்பாரு. நாளைக்கு நீ அவரை பார்க்கும் போது, நீயே அதை சொல்லுவ பாரு"

"ஆனா அவர் வைஃபை அவர் கொன்னுட்டதா கேள்விப்பட்டோமே..." என்றாள் மற்றொருத்தி. ஆம் என்று தலையசைத்த இலக்கியா,

"ஆமாம். அவருடைய வைஃபை அவர் கொன்னாரு. ஏன்னா, அவங்க அவரை ஏமாத்திட்டாங்க. நம்ம இதைப் பத்தி எல்லாம் பேச வேண்டாம்னு நினைக்கிறேன்" என்று அவள் கண்டிப்பான குரலில் கூறியவுடன் அந்த பெண்கள் சரி என்று தலையசைத்தார்கள்.

"இப்போ எல்லாரும் போய் படுத்து தூங்குங்க. டைம் ஆகுது" என்றாள்.

முகிலன் இல்லம்

கட்டிலில் அமர்ந்திருந்த முகிலன், தன் கைபேசியை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். அடுத்த நான்கு நாட்களுக்கு நான் உங்களுக்கு ஃபோன் செய்ய மாட்டேன் என்று இலக்கியா கூறிவிட்ட போதிலும் அவள் அவனுக்கு ஃபோன் செய்வாள் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் அவள் ஃபோன் செய்யவில்லை. அவளுடைய சூழ்நிலை அவளை ஃபோன் செய்ய விடவில்லை. நாளை பூவாடைகாரி வழிபாடு. அவள் நிச்சயம் அவர்கள் வீட்டிற்கு வருவாள். வந்தால் நிச்சயம் அவனிடம் பேசுவாள் என்று எண்ணியபடி கைபேசியை பக்கத்தில் வைத்துக் கொண்டு உறங்கிப் போனான்.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now