54 முழுமை

1K 58 7
                                    

54 முழுமை

"உனக்கு சுய கட்டுப்பாடு ரொம்ப அதிகம். நாலு வருஷமா மனசுல இருக்குற உணர்வுகளை கட்டுப்படுத்தி வைக்கிறது அவ்வளவு சுலபம் இல்லை. அது எனக்கு தெரியும். நான் அதை எப்படி தெரிஞ்சிட்டேன் தெரியுமா?"

இலக்கியா அதற்கு பதில் கூறவும் இல்லை, தலையசைக்கவும் இல்லை. கண்ணிமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஏன்னா, கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே என்னோட மனச கட்டுப்படுத்த நான் ரொம்ப திணறிப் போயிட்டேன்..."

அவளை நோக்கி குனிந்த அவன் அவள் நெற்றியில் அழுத்தமாய் இதழ் ஒற்றினான்.

"ஒருவேளை, நான் ரொம்ப வேகமாக போறதா உனக்கு தோணுச்சுன்னா, உனக்கு இந்த உறவை ஏத்துக்க கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும்னு தோணுச்சுன்னா, நான் காத்திருக்க தயாராக இருக்கேன்"

இலக்கியா ஒன்றும் கூறாமல் இருக்கவே, அவளிடமிருந்து பிரிந்து சென்று படித்துக் கொண்டான் முகிலன். அவனது அந்த செயல், அவளுக்கு ஏமாற்றம் அளித்தது என்று தான் கூற வேண்டும். அவனை நோக்கி உருண்டு, அவன் நெஞ்சில் தலை சாய்த்தாள் இலக்கியா, முகிலனை திகைக்க செய்து.

தலை நிமிர்த்தி அவனைப் பார்த்த இலக்கியா,

"நான் ஏற்கனவே நிறைய காத்திருந்துட்டேன்" என்றாள் அவன் கண்களை படித்தவாறு.

"அதனால?" என்றான் அவள் தோள்களை சுற்றி வளைத்தவாறு.

"நான் இன்னிக்கு உங்களை ரசிக்கலாம்னு இருக்கேன்..."

"அதை நீ ஏற்கனவே செஞ்சுகிட்டு தானே இருக்க, உன் மனசால?"

"எனக்கும் சுயக்கட்டுப்பாடு எல்லாம் கிடையாது. உங்களை பார்க்கிற வரைக்கும் என் மனசை என்னால கட்டுப்படுத்தி வைக்க முடிஞ்சிது. ஆனா கல்யாணத்துக்கு பிறகு, நான் அதை செய்ய ரொம்பவே தவிச்சு போயிட்டேன்"

"ஏன் அப்படி?" என்றான் தாழ்ந்த குரலில்.

"நீங்க என் பக்கத்துல இல்ல. அதனால என்னால திடமா இருக்க முடிஞ்சது. ஆனா கல்யாணத்துக்கு பிறகு, நம்ம ரெண்டு பேரும் ஒரே ரூம்ல, ஒண்ணா, பக்கத்துல இருந்தோம்"

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now