29 முதல் நாள்... முதல் இரவு...

958 62 10
                                    

29 முதல் நாள்... முதல் இரவு...

கட்டிலில் அமர்ந்து முகிலனுக்காக காத்திருந்தாள் இலக்கியா. அறைக்குள் நுழைந்த முகிலனை பார்த்து எழுந்து நின்றாள். அவன் கதவை சாத்தி தாளித்தவுடன் அவனை நோக்கி ஓடிச் சென்று,

"நமது அறைக்கு உங்களை வரவேற்கிறேன்" என்று அவனை தலை தாழ்த்தி வரவேற்றாள்.

அவள், தன் அறைக்குள் தன்னையே வரவேற்பாள் என்பதை எதிர்பார்க்காத முகிலன், அசந்து நின்றான்.

"ஆமாம், இது நம்ம ரூம். இங்க என்ன வேணாலும் செய்ய உனக்கு உரிமை இருக்கு" என்றான் அமைதியாய்.

"நீங்க சரியான கஞ்சா பிசினாரி, உங்களை விட அம்மா எவ்வளவோ மேல்" என்றாள் முகத்தை சோகமாய் வைத்துக்கொண்டு.

ஏன் என்று கேள்வி கேட்காமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். அவளே தொடருவாள் என்று அவனுக்கு தெரியும்.

"அம்மா சொன்னாங்க, இந்த வீடு முழுசும் என்னோடது, நான் இங்க என்ன வேணா செய்யலாம்னு... ஆனா நீங்க, இந்த ரூம்குள்ளயே என்னுடைய உரிமையை அடக்கிட்டிங்க" என்றாள் போலி வருத்தத்துடன்.

அதைக் கேட்டு சிரித்தான் முகிலன். இந்த மாமியாரும் மருமகளும் இருக்கிறார்களே...!  என்று எண்ணி.

"நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன். இந்த புடவை ரொம்ப வெயிட்டா இருக்கு" என்று குளியலறையை நோக்கி சென்றாள், தனது இரவு உடைகளை எடுத்துக் கொண்டு.

*இந்த புடவை வெயிட்டா இருக்கு* என்று அவள் கூறிய போது, தன் கன்னத்தில் விழுந்த கூந்தலை ஒதுக்கி விட்டாள். அப்பொழுது அவள் கையில் வரைந்திருந்த மருதாணி முகிலனுக்கு தெள்ளத் தெளிவாய் தெரிந்தது. அவள் கை முழுக்க *M* என்ற எழுத்தால் வரையப்பட்ட டிசைன் இருந்ததை பார்த்து அவன் மருகிப் போனான். இதைத்தான் அவள் தனக்கு செய்யும் உதவி என்று கூறினாளா? அவன், அவளது கையிலிருக்கும் அவனது பெயரை பார்க்க மாட்டான் என்ற முடிவுக்கு வந்து விட்டாளோ...! ஒவ்வொரு விஷயத்திலும், அவனை இந்த அளவிற்கு யாரும் இதுவரை ஆச்சரியப்படுத்தியதே இல்லை...!

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin