32 இலக்கியாவுடன்...

Start from the beginning
                                    

"நான் அப்படி கூப்பிட்டு பழகிட்டா, உங்க அக்கா வரும் போது என்னால அதை மாத்த முடியாது. வாய் தவறி நான் உங்க பேரை சொல்ல வாய்ப்பு இருக்கு..."

தன் இயலாமையை உணர்ந்தான் முகிலன்.

அப்பொழுது நற்கிள்ளி இலக்கியவை அழைத்தார்.

"இலக்கியா... வா, அம்மா காபி போட்டுட்டாங்க.  எடுத்துக்கிட்டு போ"

"இதோ வந்துட்டேன் பா" என்று வெளியே ஓடினாள் அவள்.

கட்டிலை விட்டு எழுந்த முகிலன், சுவற்றில் மாற்றப்பட்டிருந்த இலக்கியாவின் புகைப்படத்தின் அருகில் சென்றான், அதற்காகவே காத்திருந்தவன் போல. அந்த புகைப்படத்தில் மின்னிக்கொண்டிருந்த அவளது கன்னத்தை மெல்ல வருடினான். இலக்கியா வரும் அரவம் கேட்டு, மீண்டும் கட்டிலுக்கு சென்று அமர்ந்து கொண்டான். காபி குவளையுடன் உள்ளே வந்த இலக்கியா, அதை அவனிடம் கொடுத்தாள்.

"இந்தாங்க காபி"

அதை அவளிடம் இருந்து பெற்று, பருகினான் முகிலன்.

தனது அலமாரியில் இருந்து ஒரு ஆல்பத்தை எடுத்த அவள், அவன் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டு, அதிலிருந்த புகைப்படங்களை ஒவ்வொன்றாய் அவனுக்கு காட்டத் துவங்கினாள்.

"இது நான் தான்"

இரண்டு குதிரைவால் கொண்டையுடனும், புஸ் என்ற கன்னங்களுடனும் அழகாய் இருந்த, ஐந்து வயது குட்டி இலக்கியவை பார்த்து புன்னகைத்தான் முகிலன்.

"இந்த போட்டோ நான் செகண்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும்போது எடுத்தது" அதில் அவள் வெள்ளை நிற கவுன் அணிந்து, அனைத்து பற்களும் தெரியும்படி சிரித்துக் கொண்டிருந்தாள்.

"இது நான் லெவன்த் ஸ்டாண்டர்ட் படிக்கும்போது எடுத்தது. நான் எங்க ஸ்கூல் என்சிசி ல இருந்தேன்"

அதைக் கேட்டு அவன் வியப்புடன் புருவம் உயர்த்தினான்.

"இந்த போட்டோ, நான் எங்க ஸ்கூல் பேச்சு போட்டியில ஃபஸ்ட் பிரைஸ் வின் பண்ணும் போது எடுத்தது. என்னை தவிர வேற யாரு பேச்சுப் போட்டியில ஜெயிச்சிட முடியும்?" என்று சிரித்தாள் அவள்

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now