29 முதல் நாள்... முதல் இரவு...

Start from the beginning
                                    

முகிலனும் தனது உடையை மாற்றிக் கொண்டான். தன் உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்த இலக்கியா, அவன் ஒரு தலையனையுடன் சோபாவில் அமர்ந்திருப்பதை கண்டாள். அந்தக் கட்டிலில் வசதியாய் அமர்ந்து கொண்ட அவள்,

"அப்படின்னா, இன்னைல இருந்து இந்த பெட்டு எனக்கு மட்டும் தானா?" என்றாள் கிண்டலாய்.

"கொஞ்ச நாளைக்கு..." என்றான்.

"கொஞ்ச நாளைக்கா? அதுக்கு என்ன காரணம்ணு கொஞ்சம் சொல்ல முடியுமா?"

தன் கைகளை கட்டிக்கொண்டு, சோபாவில் சாய்ந்து, அவளுக்கு பதில் அளிக்காமல் அவளை பார்த்தான் முகிலன்.

"நான் உங்களை ஏதாவது செஞ்சுடுவேன்னு நினைக்கிறீங்களா?" என்றாள் கண்களை சுருக்கிக் கொண்டு. அதை கேட்டு சிரித்த அவன்,

"குட் நைட்" என்று கண்களை மூடிக்கொண்டான்.

அதைப் பார்த்து வாயைப் பிளந்த அவள்,

"ஒருவேளை நான் உங்களை ஏதாவது செஞ்சுடுவேன்னு நினைச்சா, அதை நீங்க சோபாவுல தூங்கினாலும் செய்ய முடியும்" என்று எச்சரித்தாள்.

கண்களைத் திறக்காமல் சிரித்தான் முகிலன்.

"இதுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும் மிஸ்டர் முகிலன்..."

கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான்.

"நாளைக்கு காலையில, உங்க சோபாவுல, உங்க பக்கத்துல இருக்கிற அந்த குட்டி இடத்துல என்னை பார்த்தா, என்னை நீங்க குறை சொல்லக்கூடாது" என்றாள் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு.

"குட் நைட்" என்று மீண்டும் கூறிவிட்டு கண்களை மூடினான் முகிலன்.

தன் பை வைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கி சென்ற அவள், அதிலிருந்து தன் டைரியை எடுத்தாள். மீண்டும் கட்டிலுக்கு வந்து அமர்ந்து கொண்டாள். அவளது மெல்லிய கொலுசொலியை கேட்ட அவன், திரும்பிப் பார்த்து அவள் கட்டிலில் அமர்ந்து எதையோ எழுதிக் கொண்டிருப்பதை பார்த்தான்.

"என்ன செய்ற?" என்றான்.

"டைரி எழுதுறேன்"

அவனுக்கு அவள் என்ன எழுதுகிறாள் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், ஒன்றும் கேட்காமல் கண்களை மூடிக்கொண்டான். அவன் உறங்க முற்படுவதை பார்த்த இலக்கியா, சத்தமாய் கூறியபடி  எழுதினாள்.

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now