18 நிச்சயம்

Start from the beginning
                                    

"எனக்கு கொஞ்சம் தண்ணி கொடும்மா"

மேசை மீது வைக்கப்பட்டிருந்த பாட்டிலில் இருந்து ஒரு டம்ளரில் தண்ணீரை ஊற்றி அதை அவரிடம் நீட்டினாள் இலக்கியா.
அதை அவளிடமிருந்து பெற்றுக் கொண்ட படி தாரணி கேட்டார்,

"நீ முகிலனை பார்த்திருக்கியா?"

சற்று திகைத்து தான் போனாள் இலக்கியா. அவள் அவனை இரு முறை சந்தித்திருக்கிறாள். ஆனால் அதைப்பற்றி யாருக்கும் தெரியாது. அதிரையிடம் கூட அவள் அதைப்பற்றி கூறவில்லை. தன்னை சமாளித்துக் கொண்ட அவள், உண்மையை கூற தயாரானாள். ஆம் என்று தலையசைத்தாள்.

"அப்படியா?" எங்க?"

"கோவிலில் பார்த்தேன்"

"கோவில்லயா? ஆனா முகிலனுக்கு கோவிலுக்கு போற பழக்கமே இல்லையே" என்றார் நம்ப முடியாத முகபாவத்துடன்.

ஆம் என்று தலையசைத்து புன்னகைத்த இலக்கியா,

"அவரு சாமி கும்பிட கோவிலுக்கு வரல. நான் கோவிலுக்குள்ள நுழையிறதை பார்த்துட்டு வந்ததா சொன்னாரு"

அதைக் கேட்டு தாரணி விழி விரித்தார்.

"அவருக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லை அப்படிங்கிறதால, என் மனசை மாத்த கோவிலுக்கு வந்தாரு" என்று அவன் வந்த காரணத்தை விளக்கினாள் இலக்கியா.

"அவன் உன்கிட்ட என்ன சொன்னான்?"

"எல்லாத்தையும் சொன்னாரு"

"எல்லாத்தையும்னா?"
என்ற அவரது குரலில் நடுக்கம் தெரிந்தது

"எல்லாம் தான்"

"ஆனா..."

"அவர் என்கிட்ட சொல்றதுக்கு முன்னாடியே எனக்கு எல்லாம் தெரியும். உண்மைய சொல்லப் போனா, அவர் என்கிட்ட சொன்னதை விட அதிகமாவே தெரியும்"

"உனக்கு எப்படி தெரிஞ்சது?"

"எங்க அப்பாவும் அவங்க அப்பாவும் ஃபிரண்ட்ஸ்"

"ஓ... அப்படின்னா உங்க அப்பா அவனைப் பத்தி உன்கிட்ட சொன்னாரா."

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)Where stories live. Discover now