அத்தியாயம் 45

Start from the beginning
                                    

ஆனால் பார்வை மட்டும் , வேறுபுறம் தான் பார்த்தவுடன் திரும்பி விட்ட கௌஷிக் மீதே நிலைத்து நின்றிருந்தது. 

பேபி நம்ம இங்க இருக்க வேண்டாம் .... கொஞ்ச நேரத்துல உன்னை கொலைகாரி ஆக்கிடுவானுங்க ... வா எதுவா இருந்தாலும் தனியா போய் பேசிக்கலாம் என்றபடி தன்னை அடித்துக்கொண்டிருந்த  தான்வியை  இழுத்துக்கொண்டு டான்ஸ் ஆடுபவர்கள் இடையே சென்றான்.

தப்பிச்சுட்டான் டா ... என்று அங்கிருந்தவர்கள் சோகமாகினர்.

சரி இருந்த ஒரு என்டேர்டைன்மேன்ட்டும் டான்ஸ் பண்ண போய்டுச்சு...நாமளும் போய் ஜோதில கலந்துக்கலாம் என்றபடி அர்ஜுன் எந்திரிக்க...

பாருடா மனுஷன் பொண்டாட்டி கூட இல்லைன்றனால என்னம்மா குஷியா இருக்காரு என்று கலாய்த்தபடியே  சகோதரிகளையும் இழுத்துக் கொண்டு நண்பர்கள் கூட்டம் பார்ட்டிக்குள் கலந்தது.

கௌஷிக் மட்டும் அமைதியாய் அமர்ந்து மொபைலை பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் சிவா இழுத்த இழுப்புக்கு எல்லாம் ஆடிக் கொண்டிருந்த மீரா ,தான்வி இவர்களுடன் சேர்ந்தவுடன் ,சிவாவையும் தான்வியையும் விட்டு  விட்டு இவள் அங்கிருந்து கழண்டு கொண்டாள்.

ஒரு chairரை பார்த்து அமர்ந்தவள் கண்கள் கௌஷிக்கை தேடி அலைந்தது .

ஒரு இடத்தில் அவனை கண்டுவிடவும் பார்வை அவனிடம் நிலைத்து நின்றது.   அவன் வசுந்தராவுடன் ஏதோ மும்மரமாக பேசிக்கொண்டிருந்தான்.

முதல் முறை பார்க்கும் போது அவள் நெஞ்சில் இருந்த வலி இப்பொழுது ஏற்படவில்லை. கண்களில் காதல் மட்டுமே கசிய மெய்மறந்து அவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.

எதர்ச்சியாய் திரும்பிய கௌஷிக்கின் கண்களும் இவளை சந்தித்தது.அனால் இவளது பார்வையை கண்டவுடன் அவ்வளவு நேரம் மலர்ந்திருந்த அவனது முகம் கடுகடுப்புக்கு சென்றது. சட்டென்று பார்வையை வசுந்தராவிடம் திருப்பினான்.

ஆனால் காதல் கொண்ட மீராவின் கண்களுக்கு அவனது இறுகிய முகம் மூளைக்கு உரைக்கவில்லை. அதற்குள் ஆடிக்கொண்டிருந்தவர்கள் மீராக்கும் , கௌஷிக்கிர்க்கும் இடையில் வர , இவளது பார்வை தவம் கலைந்தது.

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now