அத்தியாயம் 39

Start from the beginning
                                    

அவன் புன்னகைக்கும் போது கன்னத்தில் ஏற்பட்ட குழியில் சிவா வின் இதயம் விழுந்து விட்டது என்பதே உண்மை.

"அகி" என்று தன் அருகில் தான்வியின் குரல் சற்று அதிகமாய் கேட்ட உடன் தான் நினைவுலகுக்கு திரும்பினாள் சிவா.

தங்களை நோக்கி trolly யை இழுத்துக் கொண்டு வந்தவனை தான்வி சென்று அணைத்துக் கொள்ள, அவனும் புன்னகையோடு அவளை அணைத்து அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

பாச பேச்சுக்களை அண்ணன் தங்கை இருவரும் முடித்தவுடன் தான்வி சகோதரிகளை அவனுக்கு அறிமுகப்படுத்தினாள்.

அகி... இது மீரா அண்ணி...

ஹாய் மீரா... How are you?? என்றவாறு அகி கை கொடுக்க... மீராவும் அவனோடு கை குலுக்கிவிட்டு சம்பிரதாய பேச்சுக்கள் பேசியவன், அடுத்து தன்னை தான் பார்த்து பேசப்போகிறான் என்பது புரிய சிவா மனம் படபடவென அடித்துக் கொண்டது.

இருந்தும் "அன்னிக்கு மாதிரி ஏதேனும் கண் அடிச்சோ, இல்லை குதர்க்கமாக பேசவோ செய்யட்டும் மூஞ்சிலயே ஒரு குத்து குத்தரேன் " என்று அவள் ஒரு பகுதி மனசு பொறுமிக் கொண்டிருந்தது.

தான்வி சிவாவை பார்த்துக் கைகாட்ட...

ஹாய் சிவா என்று கைகளை நீட்டினான்.

வேற ஏதேனும் சொல்லுவானா? இல்ல ஏதேனும் உணர்வு அவன் முகத்தில் தென்படுகிறதா ? என்று கூர்ந்து பார்த்துக் கொண்டே கைகளை நீட்ட... ஒரு அறிமுகப் புன்னகையை மட்டும் கொடுத்து கை குழுக்கிவிட்டு திரும்பிவிட்டான்.

இவ்வளவு நேரம் பொறுமிய மனது நெருப்பில் தண்ணீர் ஊற்றியது போல புஸ்சென்று ஆனது.

என்ன கண்டுக்கவே இல்லை ? ம்ம்... என்னை மறந்துட்டானா? ரெண்டு மூணு நாள்ல அது எப்படி மறக்கும்?

சந்தேகத்தோடு அவனை பார்க்க, அகிலன் முகுந்தோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான்.

அடி பைத்தியக்காரி அவன் உன்னிடம் வம்பு இழுக்க கூடாதுன்னு தானே நினைச்ச... அவனும் எதும் பண்ணலை ...இன்னும் என்ன.. அவனே உன்னை கண்டுக்காம திரும்பிட்டான்... நீ இன்னும் அவனை நினைச்ச புலம்பிட்டு இருக்க... சிவா... Sighting மட்டும் தான் ... அதுக்கு மேல எதும் நினைக்கக் கூடாது என்று முடிவு பண்ணிருக்கோம்... நியபகம் இருக்குல்ல?
என்று சிவா வின் மனசாட்சி கேள்வி கேட்க ..

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now