அத்தியாயம் 36

Start from the beginning
                                    

கௌசிக் கொஞ்ச தூரத்தில் தன் கார் கீயால் காரை unlock செய்ய, அது கியா கியா என்று கூவி அடங்கியது.

அந்த காரை பார்த்தவுடன் சிவா வும் , மீரா வும் கண்களை விரித்தனர்.

அக்கா...B..BMW வா.... இது மாமா கார் ரா???

இல்ல ,கௌசிக் கோடது, Aura தான்..

அப்போ இது யாரோடது??

தெரியலையே...

இவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு இருக்க...

கௌசிக் மீராவின் bag கை கொண்டு போய் டிக்கியில் வெய்த்து விட்டு , சிவா வின் ட்ராலிக்காக கை நீட்டினான்.

இது உங்க கார் ரா மாமா?

Dickey யை மூடியபடியே சிவா வை பார்த்து தலை ஆட்டி விட்டு டிரைவிங் சீட்டில் போய் அமர்ந்தான்.

மீரா வும், சிவாவும் பின்னால் அமர வண்டி கிளம்பியது

இது மாமா கார் தானமா அக்கா..

Oh...

BMW வாங்கும் அளவு கௌசிக் வசதி பட்டவனா? என்ற எண்ணம் இருவர் மனதிலும் வலம் வந்தது.

நீங்க வேற கார் வெச்சிருக்கரதா அக்கா சொன்னா??

ம்ம்... அதும் இருக்கு...

Oh...ரெண்டு கார் வெச்சிருக்கீங்களா???

ம்ம்...

அவனிடம் அவர்களுக்கு தெரிந்த இரண்டு கார்கள் தவிர்த்து இன்னும் மூன்று கார்கள் இருப்பது அவர்கள் அறிய வாய்ப்பில்லை,அதை அவனும் அவர்களுக்கு சொல்லவில்லை.

மாமா...

ம்ம்... நீங்க இங்க என்ன work பண்றீங்க ???

என்று ஆரம்பித்தவள் அவனது ஸ்கூல், காலேஜ் அவனது தாய் தந்தை என்று கேள்விகள் மேல் கேள்விகள் கேட்டுக் கொண்டே வர..  அவனும் ஓரிரு வரிகளிலும், ஒரு சில கேள்விகளுக்கு ஒரு தலை அசைப்புமாய் தன் பதில்களை சொல்லிக் கொண்டு வந்தான்.

இப்பொழுது தான் கௌசிக் கை பற்றி கொஞ்சமாது மீரா தெரிந்து கொண்டாள்.

தன்னை விட சிறு பெண்... ஒரே சந்திப்பில் அவனை பற்றி எத்தனை  விஷயங்களை தெரிந்து கொண்டு விட்டாள் ... ஆனால் நான் .....,

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now