அத்தியாயம் 30

Beginne am Anfang
                                    

என்னதான் தனக்கு தானே சமாதானம் சொல்லி கொண்டாலும் , அவனை பார்க்காமல் இருக்க முடியாது தவித்தாள்.

எப்போ கௌசிக் வருவ?... கண்டிப்பா இன்னிக்கு உன்னை பார்த்து, நம்ம கல்யாணத்துக்கு எந்த பிரச்சனையும் இல்லை அப்டின்ற சந்தோஷமான விஷயத்தை சொல்லணும் ... அப்போ உன்னோட முகத்தில தெரியப் போகிற ஆனந்தத்தை பார்க்கணும் என்றவாறு அவனின் முகபாவத்தை கற்பனையில் காண ஆரம்பித்தாள்.

மாலை வீடு வரும் போதே தலை வலி கொன்றது...

கடவுளே !  ஏன் தான் இந்த தலை வலி வருதோ... போய் மொதலில் தூங்கனும்... ம்ம்...இந்நேரம் கௌசிக் இருந்திருந்தா கண்டிப்பா இஞ்சி டீ போட்டு கொடுப்பார்...அதை குடிச்சவுடன்  தலை வலி அப்படியே போய்டும் ... கௌசிக் கின் கை பக்குவம் அப்படி என்று தனக்கு தானே புன்னகைத்தவள்...  ம்ம்... ஆனா அவனை பார்த்தே  எவ்ளோ நாள் ஆச்சு... என்று வலியும் சோகமும் மிக மெதுவாய் படியேறி வந்தால் மீரா...

என்றும் போல கௌசிக் கின் வீட்டை ஒரு பார்வை பாவமாய் பார்த்துவிட்டு திரும்ப... அவள் மூளைக்கு அந்த செய்தி சட்டென்று பட்டது...

கௌசிக் வீட்டு கதவு பூட்டவில்லை...
அப்படினா கௌசிக் வீட்ல இருக்காரு... என்று புரிந்த நொடி அவள் கால்கள் அவனின் வீட்டை நோக்கி விரைந்தது...

எப்பொழுதும் போல ரெண்டு தட்டு கதவை தட்டி விட்டு கதவை வேகமாய் ஆவலாய் படீரென்று திறந்து கொண்டு உள்ளே போனவள் அதிர்ந்து நின்றாள்.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டவுடன், இந்நேரம் வருவது மீரா என்று கௌசிக் புரிந்து கொண்டு 'கதவிடம்  போகாதே' என்று கதவை திறக்க போகும் விஷ்ணுவை தடுபதற்குள் நடந்து முடிந்து விட்டது.

வேகமாக திடீரென திறக்கப்பட்ட கதவினால் மூக்கும்,தலையும் அடிபட
அம்மா என்ற முணங்களோடு சுவற்றில் மூக்கை பிடித்துக் கொண்டு சாய்ந்தான் விஷ்ணு.

அதே நேரம் , அங்கு நடந்த காரியத்தை எதிர்பாராத பாட்டியும், பேத்தியும் விஷ்ணு என்ற கூவலோடு அவனை நெருங்கினர். இப்படி தான் நடக்கும் என்று தெரிந்த கௌசிக் , உள்ளே 'கௌசி 'என்ற குஷியோடு நுழைந்த மீராவை நோக்கினான் .

எனக்காகவே பிறந்தவள்Wo Geschichten leben. Entdecke jetzt