அத்தியாயம் 28

Start from the beginning
                                    

மீரா ... நீ.... என்ன சொல்வது என்று தெரியாமல் கௌசிக் திணறினான்.

சின்ன வயசுல அப்பா போனதுக்கப்பரம் சித்தப்பா கூட்டிட்டு வந்தாங்க... அப்போ சித்தி வேலைக்கும் போய்ட்டு வீட்லயும் வேலை செஞ்சு கஷ்டபடரத பார்கரப்போ எனக்கு மனசு கஷ்டமாக இருக்கும்... அவங்களே காசு இல்லாம கஷ்டப்படற நிலைமையில் என்னை ஒரு பாரமாக நினைக்காமல் கூடவே வைத்துக்கொண்டவங்களுக்கு என்னால முடிஞ்ச உதவி செய்யணும்னு நினைச்சேன்... அதனால் வீட்டு வேலை எல்லாம் நான் பார்த்துக்க ஆரம்பிச்சேன்..

அதனால் படிக்கரது எல்லாம் ஸ்கூல் ல வைய்துகிட்டேன், நான் ஒன்னும் பிரில்லியன்ட் ஸ்டூடண்ட் கிடையாது கௌசி, ஒரு தடவைக்கு அஞ்சு ஆறு தடவை படிச்சாததான் என் மனசுல நிக்கும் , அதான் கூட படிக்கும் பிள்ளைகளோடு விளையாடாமல், அவர்களுடன் பேச கூட நேரம் இல்லாமல் படிக்க ஆரம்பிச்சேன்... பாஸ் ஆகனும்னு படிச்சேன்...  அதனால் எனக்கென்று  எந்த ஒரு நட்பும் இல்லாம போயிடுச்சு... கல்லூரியும் பார்ட் டைம் வேலை செஞ்சிட்டு படிச்சேன்...அப்பையும் நட்புண்ணு யாரும் இல்லை...

வேலைக்கு சேர்ந்தேன்... வசுந்தரா அக்கா என்னோடு முதல் முதல்ல நட்பானாங்க .. இருந்தாலும் அவங்களை தவிர்த்து என் வயது பெண்களும் ஆண்களும்  எல்லோரிடமும் சகஜமாய் பேசிக் கொள்வதை ,பழகுவதை , வெளியே சுத்துவதை பார்க்கும் போது ஏக்கமா இருந்துச்சு... ஆனா என்னால அவங்க கூட பழக முடியலை... எனக்கு அவங்க கூட பேசரப்போ எல்லாம் நான் ரொம்ப குறுகி போனேன் , இங்கிலீஷ் தெரியாம, எங்க எப்டி பேசணும்னு தெரியாம அவங்களுக்கு முன்னாடி நான் போகவே கூச்சப்பட்டேன் கௌசி...

அப்போ தான் அந்த ராகுலை பார்த்தேன்.. அவனுடன் எல்லாரும் பேச விரும்புவது , அவனோட டிரெஸ்ஸிங், ஹேர்ஸ்டைல் அப்படி இப்படின்னு எனக்கு அவன் மேல ஒரு விதமான கவர்ச்சி தோன்றுச்சு ... அவன் என்னை பார்த்து முதல் முறையா சிரித்தபோது என்னை நானே ஒரு ... ஒரு ஆளாய் நினைச்சேன் கௌசிக்... நான்..நான்...

"கௌஸிகிர்க்கு புரிந்தது அவள் சொல்ல வருவது... Inferiority complex இல் இருந்தவள், ஒரு ஹீரோவாய் அவளது சுற்றுப்புறத்தில் இருந்த ராகுல் இவளுடன் பேசியவுடன் இவள் வலிக்கு அது மருந்தாய் இருந்திருக்கிறது .. அதை அவன் தனக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொண்டுள்ளான்.."

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now