அத்தியாயம் 27

Începe de la început
                                    

"என்ன பண்ணுவேன் நான்?"

அவனிடம் பேச வேண்டும், இன்று என் முகத்தை கூட பார்க்கவில்லையே... எப்படி போய் பேசுவது? எத்தனை முறை சொல்லியிருப்பான் அந்த ராகுலை பற்றி, இருந்தும் நான்...

கடவுளே ஏதேனும் பண்ணுங்க... கௌசிக் கின் கோவத்தை மாத்துங்க... என்னால் அவனிடம் பேசாமல் இருக்க முடியாது... பிளீஸ்... என்று கடைசியாய் கடவுளிடம் மனு போட ஆரம்பித்தாள்.
.
.

இரண்டு நாட்கள் ஆகிவிட்டது...

ஆனால் இன்னும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை...

அன்று கடைசியாய் மீரவிடம் காலையில் உணவிற்காக சொல்லிவிட்டு சென்றபோது கௌசிக் கை பார்த்தது... அதற்கு பின்பு எப்போது பார்த்தாலும் கதவு பூட்டியே இருக்கிறது... எப்பொழுது வருகிறான் , எப்பொழுது வேலைக்கு செல்கிறான் என்பதே தெரியாமல், அவனை பார்க்காமல் பைத்தியம் பிடிப்பது போல இருந்தது அவளுக்கு...

ஃபோனில் பேசலாம் என்றாலும் அவனிடம் இருந்த பயம் அதை செய்ய தடுத்தது.

இன்று வேலைக்கும் கிளம்பி விட்டாள்... கன்னத்தில் காயங்கள் எல்லாம் சரி ஆகிவிட்டது...
இருந்தும் ,
அங்கே அந்த ராகுலை பார்க்க வேண்டும் என்ற எண்ணமே, உடம்பில் நெருப்பு பட்டது போல எரிந்தது... ஆனால் வேறு வழி இல்லை ,வேலைக்கு சென்று தான் ஆகவேண்டும் என்று எண்ணம் தோன்ற ஒரு பெருமூச்சுடன் வீட்டின் கதவை திறந்து வெளியே வந்தவள் கண்களில்..
வீட்டை பூட்டி விட்டு திரும்பிய கௌசிக்  தென்பட்டான்..

கௌசி....

அவள் கூப்பிட்டது காதில் விழாததாய் அவளை கண்டும் காணதவனாய் அங்கிருந்து அகன்றான்.

அவனது விலகிய தன்மையில் அவளது கண்கள் கலங்கிட , உதடு கடித்து நின்றாள்.

மீராவை காணாதது போல கீழே இறங்கி வந்திருந்தாலும் ,  அவளின் ஒரு நொடி தரிசனமே அவனது புலம்பும் இதயத்தை சற்று சாந்தப் படுத்தியது.

இன்று என்னதான் வேகமாக கிளம்ப வேண்டும் என்று எண்ணி இருந்தாலும் , மீரா வை பார்க்க வேண்டும் என்ற எண்ணமே வெற்றி பெற்று , மெதுவாகவே கிளம்பினான்...எப்படியும் அவளை பார்த்து விடுவேன் நான் என்ற நம்பிக்கையில்.

எனக்காகவே பிறந்தவள்Unde poveștirile trăiesc. Descoperă acum