அத்தியாயம் 26

Start from the beginning
                                    

என்று அவளிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்தான்..

அங்கே கீழே உட்கார்ந்திருந்த அவர்கள் நான்கு பேர்களையும் கண்டவுடன் அவனது அடிக்கி வைய்க்கப்பட்ட கோவம் பல மடங்கு பெருக அவர்களை நோக்கி நடந்தான்..

சட்டை இல்லாமல் வெறும் வெஸ்ட் மட்டும் அணிந்திருந்ததால் வெளிப்பட்டுக் கொண்டிருந்த அவனது வலிமையான புஜங்களும், சிவந்திருந்த அவனது கண்களையும் கண்டவர்கள் அவன் தங்களை நெருங்கி வர வர பயத்தில் நடுங்க ஆரம்பித்ததனர்...

சார் சார்... தெரியாம பண்ணிட்டோம் சார்... எங்களை விட்டுடுங்க சார்... என்று கை எடுத்து கும்பிட்டனர்...

கௌசிக் கின் கோவம் இதற்கு எல்லாம் அடங்குவதா என்ன?

அவர்களை  அவன் அடிக்க ஆரம்பிக்க, அவர்கள் வலியால் கத்த ஆரம்பித்தார்கள்...

ஆனால் போக போக கௌசிக் கின் வெறி அதிகம் தான் ஆகியதே தவிர குறையவில்லை...

அதற்கு வெளிப்பாடாய் ஒவ்வொருவரும் இரத்தத்தில் குளித்திரிந்தனர்... ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் ஒவ்வொருவரும் மயங்க ஆரம்பிக்க, கௌசிக் கோ மயங்கும்  நிலையில்  இருந்த ராகுல் லை மேலும்  அடிக்க ஆரம்பித்தான்..

சார் போதும் சார், அவன் இதுக்கு மேல தாங்க மாட்டான்... என்று வீர் மற்றும் ராஜ் சொன்னது கௌசிக் கின் காதிலேயே விழவில்லை.. அவன் மேலும் அந்த ராகுல் லை முகத்தில் குத்திக் கொண்டு இருந்தான்.

கௌசிக் கின் ட்டிசர்ட்டை மாட்டிக்கொண்டு வெளியே வந்தவள் கௌசிக் கின் செயலை பார்த்து அதிர்ந்து போய் நின்றாள்.. ராஜ் வீர் இருவரின் குரல் கேட்ட பின்பே உணர்வு பெற்றவள் , வேகமாய் போய் கௌசிக் கை தடுத்தாள்...

கௌசிக்... என்று அவன் தோள் தொட்டும் , அவன் அதை கண்டுகொள்ளவே இல்லை...
பின்பு , போதும் கௌசிக் அவனை விடு
என்று அவனை தன் பலம் கொண்ட மட்டும் இழுக்கவும்,

ஏன்... என்ற கத்தலோடு கௌசிக் திரும்ப , அதில் பயந்து அவனை விட்டு இரண்டடி பின்னால் நகர்ந்தாள்...

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now