அத்தியாயம் 25

Start from the beginning
                                    

ம்ம்...  அப்பறம் இந்தாங்க, என்று தான் வாங்கி வந்த பரிசை அவனிடம் நீட்டினாள்..

அட...இது எல்லாம் எதுக்கு... நீ வந்ததே பெரிய கிப்ட் தான் ...

அவனது பேச்சில் நெளிந்தவள் அவனிடம் பரிசை தந்தாள்..

வாங்கிக்கோ டா  ,அவங்க வந்தது பெரிய கிப்ட் என்றால், இதை சின்ன கிப்ட் ஆ வெச்சுக்க, என்று ஒருவன் ராகுலின் அருகில் வந்து நிற்க... கூடவே இன்னும் இருவர் வந்து நின்றனர்..

மீரா அவர்களை மிரட்சியோடு பார்த்து விட்டு ராகுலை கேள்வியாய் நோக்கினாள்...

இவங்க என்னோட கிளாஸ் ஃப்ரெண்ட்ஸ் மீரா.. யாரை கூப்பிட வில்லை என்றாலும் இவங்க இல்லாம என்னால இருக்க முடியாது...

இது ஏதோ சரியில்லை என்று பெண்மைக்கே உரித்தான உள்ளுணர்வு எச்சரித்தாலும் தலையை மட்டும் ஆட்டி வைத்ததாள்..

உங்க அம்மா அப்பாவை காணோமே? என்று தன் பார்வையை வீட்டை சுற்றி அவள் சுழட்ட..

அவங்க கோவிலுக்கு போயிருக்காங்க... நீங்க உட்காருங்க ,கொஞ்ச நேரத்தில் வந்துடுவாங்க...

ஓ... சரி என்று ஹாலில் போட்டிருந்த சோபாவில போய் அமர்ந்தாள்.

இதோ வந்துவிடுகிறேன் என்று ராகுல் இவளை அங்கே அமர வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

ஆனால் மற்றவர்களோ கையில் பியர் பாட்டில் களை வைத்துக்கொண்டு அவளுக்கு எதிரிலும் ,பக்கவாட்டில் இருந்த சோஃபாக்களில்  அமர்ந்தனர் .

அவர்களது பார்வை தன் மேல் தான் இருக்கிறது என்று நன்கு அவளால் உணர முடிந்தது.

இங்கு இருப்பது ஆபத்து ,கிளம்பி விடு என்று அவளது உள்மனம் திரும்ப சொல்ல அங்கிருந்து ஹேன்ட் பாக்கை மாட்டிக்கொண்டு கிளம்பினாள்..

என்ன மீரா , என்னாச்சு என்ற படி கையில் ஜூஸ் தம்ளரோடு அங்கு வந்தான் ராகுல்.

அ..அது சார், எனக்கு டைம் ஆச்சு... நான் கிளம்பறேன்..

என்னங்க மீரா, வந்தவுடன் கிளம்பரீங்க?

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now