அத்தியாயம் 21

Start from the beginning
                                    

நான் வரலை ...நீ போ...

அட அன்னிக்கு பிறந்தப்போ பார்த்தது தானே நீ... இப்போ பாரு எவ்ளோ அழகா இருக்கான்னு...

நீ போ மீரா... Work இருக்கு...

உனக்கு என்னைக்கு தான் வேலை இல்லாம இருந்திருக்கு... நீ வா என்று அவனை கையை பிடித்து இழுத்து சென்றாள்...

வா மீரா... வாங்க தம்பி என்றவாறு லலிதா கதவை திறந்து விட்டார்...

அடி என் தங்கம் என்ன பண்ணுது? என்றவாறு பானுவின் மடியில் இருந்த குழந்தையை கொஞ்சி கொண்டே தூக்கினாள்...

இந்நேரம் வரைக்கும் அவங்க அப்பா கூட பேசிட்டு இருந்தாங்க... என்றார் பானு தன் மகளின் சார்பாய்...

அப்பாட்ட பேசினிங்களா டி தங்கம்... அம்மு குட்டி....அச்சோ... வெள்ளி கிண்ணம் .. என்று அவள் பாட்டுக்கு கொஞ்சிக் கொண்டிருந்தாள்..

எங்க ரெண்டு பேரையும் உன்னையும் தவிர அடுத்தவங்க யாரு தூக்கினாலும் ஒரே அழுகை தான் ... அவங்க தாத்தா ஒரே அப்செட்...

அச்சோ... அழுதீங்களா டி செல்லம்... இல்லையா டி அம்மு...

கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த மீரா வையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த கௌசிக்

காஃபி கொண்டுவரேன் தம்பி என்ற லலிதா வின் குரலில் கலந்தான்...

பரவாயில்லை... வேண்டாம்...

சும்மா இருங்க நான் போட்டுட்டு வரேன் என்று நகர்ந்தார்.

செல்ல குட்டி வாங்க நம்ம கௌசிக் மாமாவை பார்க்கலாம் என்று கௌசிக்கின் கையில்  குழந்தையை வைத்தாள்...

மீரா... அழுக போகுது என்றவாறு குழந்தையை  பிடிக்க தெரியாமல் அவன் திணற மீரா அதை பிடிக்க சொல்லிக்கொடுக்க... அவன் மடியில் வைத்தான்...

பூ போல தன் கைகளில் இருந்த அந்த குழந்தையை காண்கையில் காலையில் இருந்த சஞ்சலம் அடியோடு காணாமல் போனது...

குழந்தை கௌசிக் என்ற புதிய ஒருவனை பார்த்தவுடன் உதடு பிதுக்கா....

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now