பூவே: 20

100 9 23
                                    

"எனக்கு ரொம்ப பதட்டமா இருக்குங்க" என்றாள் அபர்ணா.

எதிர்காற்று முகத்தில் வீச, துள்ளியாடும் முடிக்கற்றை போலவே, அவளது மனமும் அல்லாடியது. 

அஸ்வின் "எதுக்குடி பதட்டம்? இந்த தடவ இல்லனா நெஸ்ட் டைம் பாத்துக்கலாம். நமக்கு என்ன வயசா ஆகிட்டு?!" என சாதாரணமாக சொல்லிவிட்டாலும்
அவன் மனதிலும்
ஆசை இல்லாமல் இல்லை.

அபர்ணா "அய்யோ அதுக்கு இல்லங்க. நம்ம போற ஹாஸ்பிட்டல்..."

அஸ்வின் "உங்க அப்பாதானடி சொன்னாங்க...
தரணி மேடம்
நல்லா பாப்பாங்கனு.
அவங்க Gynaecologist டி. அங்கதான ரதியும் வேலை பாக்குறா"

அபர்ணா "ரதி அங்க
வேலை பாக்குறதுதான் எனக்கு பிரச்சனை.
ஊர்ல வேற ஹாஸ்பிட்டலே இல்லையா? அப்பா சொல்றங்கனு நீங்களும் அங்கேயே அழைச்சிட்டு போறீங்க" என அபர்ணா கூறவும் முன்பக்க
கண்ணாடி வழி
பைக்கின் பின்பக்கம்  அமர்ந்திருந்தவளை
உறுத்து பார்த்தவன்,
பின் சாலையில் கவனம் வைத்தான்.

அஸ்வின் "ம்ச் ரதி என்ன வேற்று கிரகவாசியா?
ஒதுங்கி ஒதுங்கி போக. அவளும் நம்மள மாதிரி
மனுஷி தான அபி"

அபர்ணா "அது இல்லங்க.
அவ என்கிட்ட ரொம்ப
காலம் பழகின
மாதிரி பேசுறா.
சட்டுனு எனக்கு அப்படி
வர மாட்டேங்குது.
நான் என்னமோ அவள
ஒதுக்கி வைக்கிற மாதிரி
'நீயா போய் பேசு'னு நீங்க சொல்றிங்க. எனக்கு வந்தாதான பேச முடியும்! அன்னைக்கு வீட்டுக்கு
வந்தப்ப ரதி என்ன சாப்பிடுவானு கூட
எனக்கு தெரியல.
அத்தை கேட்டப்போ முழிச்சிட்டு நின்னேன்..."
என அவள் சொல்லிக்கொண்டு போனாள்.

ஒரு இடம் அல்ல அங்குள்ள மனிதர்கள் தனக்கு சாதகமாக இல்லையெனில்  வரும் ஒவ்வாமையே, அபர்ணாவின் இப்போதைய பதட்டத்திற்கு காரணம் என புரிந்தது. அத்தோடு அவள் ரதியிடம் பழக முயல்கிறாள்
என்பதும் புரிந்தது.

அபர்ணா "இந்த வயசுக்கு மேல நான் அவகிட்ட புதுசா பழகி என்ன பண்ண போறேன்?
இத சொன்னா நீங்களும் புரிஞ்சிக்கிறது இல்ல"

இன்ப பூவே !!! பட்டு போகாதே !!!Where stories live. Discover now