பூவே: 7

124 11 24
                                    


மாற்றம் ஒன்றே நம் வளர்ச்சியின் அடையாளம். மாறுதல் என்பது இல்லாமல் போயிருந்தால் பூமிமீது நடக்க இயலாமல் தரை மீது தவழ்ந்தே வாழ்ந்திருப்போம். அதே சமயம், மாற்றம் என்பது சாதகம் மட்டும் இல்லை. பாதகத்திற்கும் உரியது. பாதகம் அதை சாதகமாய் மாறுவது தனிமனிதனின் சாதுரியம் பொறுத்தது.

கவிதீனாவின் வாழ்வில் பெரிதாக மாறுதல்  ஏற்படவில்லை ஒன்றை தவிர. முன்பு வேலைக்கு போனான். இப்போது வேலை தேடினான்.

சில நிறுவனங்களில் விண்ணப்பித்து நேர்முக தேர்வுகளுக்கு சென்று வந்தான். திறமைகள் பலவிதம். அவற்றுள் நடக்கும் போட்டிகள் அதிகம். போட்டிகள் ஊடே அரசியல் ஆதிக்கம். இவற்றில் மிச்சமான இக்கால இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பு தான். கவிதீனாவிற்கு வேலைக்கு பதிலாய் வேலை பற்றிய சில புரிதல்கள் ஏற்பட்டது.

வேலை என்பது அறிவின் தேடலாக பார்ப்பது ஒரு கூட்டம். எந்த வேலை பார்த்தாலும் பிடித்த வேலை தேடுவது மற்றொரு கூட்டம். கிடைக்கும் வேலையை பிடித்த வேலையாய் மாற்றி கொள்வது வேறொரு கூட்டம். இந்த வகையான பல கூட்டங்களில் தான் எந்த கூட்டம் சார்ந்தவன் எனும் சுய அலசலில் ஈடுபட்டான் கவிதீனா. 

இரண்டு வருடம் வேலை பார்த்ததில் வாழ்க்கைக்காக என்ன செய்தான் எனும் யோசனையில் 'இதை செய்திருக்கலாம்! அதை முடித்திருக்கலாம்! காலத்தை வீணடித்துவிட்டோமோ?' என்ற வினாக்களே விடையாய் கிடைத்தது.

இனி இழப்பதற்கு எதுவும் இல்லை எனும் நிலை மனிதனுக்கு வந்தால், இறங்கி செயல்பட துணிந்து விடுவான். அதுவே அவனது அடுத்த அடியின் பற்றுக்கோலான ஊன்றுகோல்!

அன்று நண்பனின் வீட்டிலே தூங்கி எழுந்த அஜய் மறுநாள் தன் வீட்டிற்கு கிளம்புகையில் அவனிடம் பணம் கொடுத்தான் கவிதீனா.

அஜய் மறுக்கவில்லை. மாறாக "உன்கிட்ட பணம் இருக்குல்ல" என கேட்டு உறுதிப்படுத்தியே வாங்கி சென்றான்.

இரண்டு நாள் சென்று ப்ரீத்தி 'மாத கடைசி. கையில் பணம் இருக்கிறதோ... என்ன செய்வானோ' என அஜய்க்கு வங்கி மூலமாக பணம் போட்டு விட்டிருந்தாள். நேரில் சென்று பேசவோ கைபேசி மூலம் பேசவோ ஏன் ஒரு குறுஞ்செய்தி கூட பரிமாறிக்கொள்ளவில்லை. ப்ரீத்தி போட்டுவிட்டாள். அஜய்க்கு தேவை வரும்போது  எடுத்து கொள்ளட்டும் என.

இன்ப பூவே !!! பட்டு போகாதே !!!Wo Geschichten leben. Entdecke jetzt