பூவே: 1

411 18 64
                                    

பூவே: 1

சென்னை.

பெண் பார்க்கும் வைபவம்!

காலை ஒன்பது மணி. கடிகாரம் கூவி தெரிவித்தது.

"ஷார்ப்பா ஒன்பது மணிக்கு வந்துடுறதா சொன்னாளே. இன்னும் வரல" என சொல்லி கொண்டே வாசல் வந்த அழகர் கேட்டது, பக்கவாட்டில் ஸ்கூட்டி ஒன்று நிற்கும் சத்தத்தை  தான்.

அதில் இருந்து தங்கை இறங்கி வர, அழகர் முகத்தில் பளீர் புன்னகை.

"குட்டிமா"

"அழகரு" அழைத்தாள் புன்னகையோடு.

"எப்படி சொன்ன மாதிரி ஷார்ப்பா வந்துட்டேனா" சாதாரணமாய் கேட்டாலும் நிமிர்வு தொனிக்கும் பாணி அவளது.

அழகர் "ஹ்ம் ஹ்ம் அதான் தெரியுமே என் தங்கச்சி ஷார்ப்னு" குரலில் கிண்டல்  என்றாலும் அவனது கை அவள் தலையை தடவியது.

"தலைல கை வைக்காத அழகரு. முடி ஏற்கனவே பறக்குது"

நடுமுதுகு தொட்ட முடியை க்ளிப்பில் அடக்கியிருக்க, தலை குளித்ததின் அடையாளமாய் அங்கங்கு பறந்து அடங்கவே இல்லை அவளது சிகைகள். அவள் சொன்னது போலவே!

வாசற்படியோடு காலணியை கழட்டி விட்டு தமயனோடு பேசிகொண்டிருந்தாள் அவள். ரதிநந்தனா!

"நல்லா ஐஸ் வைக்கிற அழகரு நீ" என்றவள் சிரித்து, அழகரை ஆராய்ந்தாள்.

"சரி நீ என்ன புது சட்ட புது வேஷ்டி கட்டி பளபளக்குற. அபர்ணாவ தான பொண்ணு பாக்க வராங்க. இல்ல எனக்கு தெரியாம உன்ன மாப்பிள்ளை பாக்க வாரங்களா?"

"வாயி வாயி! பேச்ச  பாரு அதெல்லாம் அபர்ணா கல்யாணம் முடிச்சி உனக்கும் ஆனதுக்கு அப்பறம் தான் எனக்கு. இப்போ வா உள்ள போகலாம். அப்பா அப்பவே கேட்டாங்க ஏன் இன்னும் வரலன்னு" என வேக வேகமாக கூறி உள்ள சென்றவனின் முகத்தில் வெட்கத்தின் சாயல்! மறைத்துக்கொண்டான்.

ரதிநந்தனா வீட்டின் உள்ளே சென்றாள். வீடு வாழ்வதற்கே அன்றி விளம்பரம் படுத்த அல்ல என்பதற்கு எடுத்துக்காட்டாய் அடக்கமான வீடு அது. ரயில்வேயில் நல்ல பணியில் இருக்கிறார் கண்ணன், குடும்ப தலைவர்.

இன்ப பூவே !!! பட்டு போகாதே !!!Waar verhalen tot leven komen. Ontdek het nu