பூவே: 9

111 9 13
                                    

'அய்யோ!' என அவள் கீழே விழுந்ததும் அலறிய மனம், அடுத்த நொடிகளில் அவள் தலைக்கவசம் கழண்டதும் தெரிந்த முகத்தில், ஸ்கூட்டியில் வந்தது உமாராணி அல்ல என்பது புலப்பட்டது. 'சொதப்பிட்டோமே!!!' என்றுதான் தோன்றியது, பின்தொடர்ந்த குமார் கவிதீனா இருவருக்கும்.

பணிமுடிந்து செல்லும் உமாராணியை பின்தொடர்ந்து, அவள் வீடு இருக்கும் இடம் கண்டுபிடித்து அங்கு சென்றாவது பேசலாம் என கவிதீனா கூறியதையே  செயலாக்க எண்ணிய குமாருக்கு  தெரியாமல்  போனது உமாராணி தன் ஸ்கூட்டியை ரதிநந்தனாவிடம் கொடுத்த விஷயம்.

சிறிது நேரத்திலே தன்னை நிதானப்படுத்தி காயங்களோடு ரதிநந்தனா எழுந்து கொண்டாள்.

இடப்பக்க கை கால்களில் சிராய்ப்பு, இரவல் வாங்கிய ஸ்கூட்டி சில கீறல்கள் பெற்றிருந்தது.

குமாருக்கு 'உமா எங்கு போனாள்? இவள் எப்படி வந்தாள்?' என கோபம்! கவிதீனாவிற்கு 'அய்யோ இவளா? இவள் ஏன் வந்தாள்?' என பாவம்!

ஏற்கனவே கோபத்தில் கிளம்பி வந்தவள், சாலையில் ஒருவன் பின்தொடர்வதால் வந்த விளைவில் நடந்ததை நினைத்து அவனை சாடிய மனது தன்னையும் சேர்த்து சாடிக்கொண்டது 'உனக்கு எங்கே கவனம் போயிற்று?' என.

கோபத்தை காட்ட தோதாக, இருவரும் இவள் அருகில் வந்தனர்.

ரதிநந்தனா "யார் நீ? என்ன ஏன் பாலோவ் பண்ண?" கேட்டாள் குமாரிடம் கண்டன குரலில்.

அடுத்து கவிதீனாவை பார்த்தவள், "ஒஹ் நீங்களும் இதுல கூட்டா? எதுக்கு என்ன பாலோவ் பண்ணி வந்திங்க? இல்லனா நான் இந்நேரம் வீட்டுக்கு போயிருப்பேன்"

"நீங்க ஸ்பீடா வந்து கவனிக்காம மோதிட்டு எங்கமேலயே மொத்த தப்பும் சொல்லாதீங்க" என்றான் குமார். அவனுக்குள் எரிகிற கோபத்திற்கு எண்ணெய் வார்த்தது ரதியின் பேச்சு.

"ஓஹ்... முதல்ல பாலோவ் பண்ணது உங்க தப்பு. நீங்க பாலோவ் பண்ணலனா நான் நிதானமா போயிருப்பேன். பின்னால பாலோவ் பண்றது தெரிஞ்சி 'நான் மெதுவா போறேன் வாங்க வந்து பாலோவ் பண்ணுங்க'ன்னா சொல்ல முடியும். நியாயமெல்லாம் பேசுற நீங்க என்ன ஏன் பாலோவ் பண்ணனும்? உங்களுக்கும் எனக்கும் என்ன இருக்கு?" முதலில் கேள்வி மட்டும் கேட்டவள் குமாரின் பேச்சில் சண்டைக்கே வந்துவிட்டாள்.

இன்ப பூவே !!! பட்டு போகாதே !!!Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin