அத்தியாயம் 11

Start from the beginning
                                    

நான் கூட பையன் எப்படியோ என்னவோ , வயசுப்புள்ள வேற எதிர்த்தாப்புல இருக்கேன்னு கவலை பட்டுட்டு இருந்தேன்... நீங்க சொல்றது பார்த்த நல்ல பையனாட்டம் தான் தோன்றது ... ஏதும் பிரச்சனைகள் வராமல் இருந்த சரி தான் எனக்கு என்று முடித்துக் கொண்டார் லலிதா.

லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்த கௌஸிக்கை வீட்டு காலிங்பெல் இசை கலைத்தது.

யாரென்று பார்க்க கதவை திறந்தவனின் கண்களில் மொபைலை நோண்டிக்கொண்டிருந்த மீரா பட்டாள்.

ஹாய்..

ஹாய் கௌ....... சிக் என்றவள் வெள்ளை நிற பைஜாமாவில் குளித்ததால் கலைந்திருந்த தலைமுடி நெற்றியில் புரள ஆணழகனாய் தன் முன் இரண்டு எட்டில் நின்றிருந்த கௌசிக்கை கண்டவள் ஒரு நிமிடம் திணறித்தான் போனாள்🤩🥳.

எத்தனையோ பெண்கள் தன்னை கண்களால் பருகுவதை போல காண்பதை கண்டிருந்தாலும் இன்று மீராவின் பார்வையால் தன் அழகின் மீது கௌஸிகிற்கே கர்வம் உண்டானது ஏனோ அவனே உணரவில்லை.

கௌசிக் நீங்க போர்மல்ஸ்ல விட இதுல சூப்பரா இருக்கீங்க...

மிகவும் கஷ்டப்பட்டு தன் முகத்தில் அவளது வெளிப்படையான வார்த்தைகளால் தோன்றிய புன்னகையை அடக்கியவன் ...

நன்றி என்று மென்மையாக உச்சரித்தான்.

அகல புன்னகைத்தவள் , இந்தாங்க லலித்தா ஆண்ட்டி உங்களுக்கு கொடுக்க சொல்லி தந்தாங்க .

என்ன இது ?

கேசரி🥘, இப்போ தான் செஞ்சாங்களாம், ஆண்ட்டிக்கு கால் வலி அதான் மேல ஏற முடியலை அண்ட் அங்கில் வெளிய போய் இருக்காராம் , அதான் சூட சாப்பிட்டா நல்ல இருக்குன்னு என்னிடம் கொடுத்து அனுப்புச்சாங்க...

அதை அவன் வாங்க தயங்க ... பாத்திரத்தை அவன் கையில் தினித்தவள் , சாப்பிடுங்க கௌசிக், ஆண்ட்டி சமயல் சூப்பரா இருக்கும்.

ம்ம்..

அப்புறம் ஆண்ட்டி உங்களுக்கு நன்றி சொல்லனும்னு சொல்லிட்டு இருந்தாங்க.

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now