அவன், அவள், மழை

33 1 2
                                    

அவள் மழையை ரசிப்பவள்,
அவன் அவளை ரசிப்பவன்.
அன்று போல் இன்றும் வேகமான மழை.

கண்களோ அவளை காண தவம் பூண்டன,
உள்ளமோ அவள் வரவை எதிர் பார்த்தன.

அவள் வரவை உணர்த்தும் வகையில்,
மழையுடன் இடியும் சேர்ந்து இசை பாடியது,
இவன் மனமோ அவளை கண்டு ஆடியது.

இருவரும் அவர்களது ரசனையில் மூழ்கினர்,
அவள் மழையில்,
இவன் அவளில்.

சிறிது நேரத்திற்கு பின் மழை நின்றது,
அவள் மீண்டுவிட்டால்,
இவனோ தொலைந்து விட்டான்…

கவிதை துளிகள்Where stories live. Discover now