மரியாதை

489 84 94
                                    

நெஞ்சம் பேசுதே

Part 5

      கதிர் சென்ற பின்பு கஸ்தூரியும் பார்வதியிடம் பேசிவிட்டு சென்று விட்டார். முருகன் கதிர் கொடுத்த பணத்தோடு ஜெகா கொடுத்த பணத்தையும் சேர்த்து எடுத்து கொண்டு போய் கடன் கொடுத்தவரிடம் கொடுத்து விட்டு,  வீட்டு பத்திரத்தை மீட்டு வந்தார்...

      பார்வதி முல்லையின் வாழ்க்கையை பற்றி யோசித்து கொண்டிருந்தார்,  இப்போதைக்கு அவர்கள் தங்கி இருந்த வீடும்,  இப்போது கடனிலிருந்து மீட்ட வீடும்,  25 பவுன் நகை மட்டும் இருந்தது,  இது போதுமானதாக இருந்தாலும் கல்யாண செலவிற்கு தேவைப்படும் அளவு பணம் இப்போதைக்கு இல்லை,  அதோடு பொங்கல் சீசன் என்பதால் mill நன்றாக போகிறது என்றாலும்,  பொங்கல் முடிந்த பின்பு சொல்லும் அளவு லாபம் ஒன்றும் இருக்காது, உடனே கல்யாணம் என்றால் மறுபடியும் கடன் வாங்க வேண்டும், அதோடு முல்லை சம்மதம் அதை விட முக்கியம் என எண்ணி கொண்டிருந்தார்...

     மறுபுறம் முருகன் ஒரு வித அமைதியை உணர்ந்தார். அதற்கு முக்கிய காரணம் முல்லையின் முகம்,  கதிர் பேசிவிட்டு சென்ற பின்பு ஏதோ யோசித்து கொண்டும் ஆர்வத்துடனும் வேலைகளை செய்து கொண்டிருந்தாள்...

     முல்லை ஓரளவு என்ன செய்யலாம் என ஒரு முடிவுக்கு வந்தார். அதை முருகன் பார்வதியிடம் சொல்ல அவர்களும் உன் விருப்பம் என சொல்லிவிட்டனர். பார்வதி சரி என சொல்லும் முன்பு கல்யாணத்தை பற்றி கேட்க,  இப்போதைக்கு வேண்டாம் பின்பு உங்கள் விருப்பப்படி செய்து கொள்கிறேன் என சொல்லி விட்டாள்...

     இரண்டு நாள் கழிந்த பின்பு ஒரு நாள் முல்லை மார்க்கெட்டில் ஏதோ வாங்கி கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள்.  கதிர் delivery முடித்து விட்டு அதே வழியாக வந்தார்,  கதிரை பார்த்த முல்லை சட்டெனெ குறுக்கே வந்து நிற்க...

K: ai அறிவு இல்ல,  இப்படி தான் குறுக்கே வந்து நிற்பாயா

M: கதிரு கதிரு நீயும் காது குத்துக்கு  தானே போறே,  நானும் வரேன் என்னையும் கூட்டிட்டு போ

நெஞ்சம் பேசுதே Where stories live. Discover now