அத்தியாயம் 23

3.8K 200 33
                                    

சாய்வேதனுடன் வந்த பெண் கட்டிலில் போதை மயக்கத்தில் நல்ல தூக்கத்தில் இருக்க அவளை அழைத்து செல்ல சாய்வேதன் அவன் உதவியாளனுக்கு போனை போட்டான்.  அதை கேட்டுக்கொண்டிருந்த அனுமித்ரா 

"இவன்தான் அந்த அங்கிளா? அண்ணி வரட்டும் இவனை என்ன செய்கிறேன் பார். அவன் வரும் போது வரட்டும். வாங்க நம்ம இரண்டு பேரும் இவங்களை கூட்டிட்டு போயிடலாம் யாருக்கும் தெரியாமல்." என்று அவள் ரகசியம் பேச மறுபடியும் அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.

"எப்படியும் நாளைக்கு இதே மாதிரி வேற ஒரு பெண்ணை தேடித்தான் போக போறிங்க. அதுக்கு எதுக்காக இவ்வளவு பீல் பண்ணுறிங்க?" என்றாள் அவன் முகத்தை பார்த்து. அவள் தலையை அழுத்தி பிடித்துக்கொண்டான் அவன். மரியாதையாக பேசினால் அவள் வேறு ஒரு ஆள். ஏகவசனத்தில் பேசினால் அவள் ஒரிஜினல் ஆள். குடிபோதையில் இவள் பேசிய எதுவும் அவனுக்கு நினைவு இல்லாமல் இருந்திருக்காலம். ஆனால் குடிக்காமலேயே போதை ஏறியது போல அவள் பேசியது அவளுக்கே நினைவு இல்லை. அவனுக்கு மது போதை, இவளுக்கு அவளின் மனம் கவர்ந்தவன் போதை. என் புருஷனை இன்னொருத்தி எப்படி தொடலாம் என்ற எண்ணம் அவளுக்கு அவ்வளவு ஆத்திரத்தையும் அழுகையையும் கொடுத்தது. ஆனாலும் அதை தடுக்க நினைக்காத அவளின் இன்னொரு மனமும் அவளிடமேதான் இருக்கிறது.

"இல்ல முத்தா. இனி இல்ல. இனி இன்னொரு பெண்ணை நான் தேடி போகவேமாட்டேன். இனி நீதான் எனக்கு எல்லாம். ஐ ப்ராமிஸ்." என்றவன் அவளின் நம்பாத கண்களை பார்த்து சிரித்தான். பிறகு "வா வேற ரூமுக்கு போகலாம்." என்றான்.

"இல்ல, யாருக்கும் தெரியாமல் இவங்களை அனுப்புறதுதான் இப்போ முக்கியம். பாட்டிக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தபடுவாங்க." என்றாள் அவள். அவன் மறுக்கவில்லை, அவளை அணைத்தப்படி சோபாவில் வந்து அமர்ந்தான். அவன் அவளுக்கு கொடுத்த சத்தியத்தில் அவன் மனதில் இருந்த முகம் தெரியாத ஒரு பெண்ணை  தொலைத்துவிட்டிருந்தான். அந்த வருத்தம் அவனுக்கு புண்ணாக வலித்தது. அதை மறைக்க தன் கையணைப்பில் இருந்தவளை தூக்கி தன் மடியில் வைத்து அணைத்து பிடித்திருந்தான். இவள் ஒருத்திதான் இவனின் காயத்திற்கு காரணம் கேளாமல், முகத்தை பார்த்தே இவனின் காயத்தின் அளவை தெரிந்துக்கொண்டு ஆறுதல் சொல்பவள். இதுநாள் வரை அவள் இவனின் எந்த விருப்பத்திற்கும் தடை போட்டதே இல்லை. இனியும் போட போவதில்லை. அதற்கு காரணம் இவன் மேல் அவளுக்கு எந்த ஆசையும் இல்லை என்று இல்லை. உயிர் வலியை அனுபவித்த ஒருத்திக்குதான் தெரியும் இன்னொருவரின் மனதின் வலி.

கடிவாளம் அணியாத மேகம் Where stories live. Discover now