அத்தியாயம் 19

3.7K 221 32
                                    

"ஏன் அண்ணி உங்க கல்யாணத்துக்கு பிறகு நீங்களும் இப்படித்தான் மாமாவை விட்டுட்டு பாரின் போவிங்களா?" என்று கேட்டாள் அனுமித்ரா  தன்னுடன் படுத்திருந்த சயூரியை பார்த்து. 

"ஊகூம், நான் தனியா போகமாட்டேன்.  அவரையும் கூட்டிட்டு போயிடுவேன்." என்றாள் சயூரி. 

"குழந்தை பிறந்த பிறகு?" என்று இவள் மறுபடியும் கேட்க 

"நான் இரண்டு வருஷத்துக்கு குழந்தை பெத்துக்கமாட்டேன்.  அப்புறம் குழந்தையையும் கூட்டிட்டுதான் போவேன்." என்றாள் சயூரி.

"இரண்டு வருஷம் குழந்தை பெத்துக்க மாட்டிங்களா? மாமா என்ன சொல்லுவார்?" என்று இவள் அதற்கு கவலைப்பட 

"அவர்தான் சொன்னார் இரண்டு வருஷம் கழிச்சு குழந்தை பெத்துக்கலாம் என்று. உன்னை  பார்த்து பயந்துட்டார் போல.  கொஞ்சம் மெச்சூட் வந்த பிறகு பார்க்கலாம் என்றார்." என்றாள் சயூரி.  

"மாமாவா அப்படி சொன்னார்.  இதெல்லாம் தெளிவா பேசுறவரு எதுக்கு கல்யாணத்தை மட்டும் சவ்வு மிட்டாய் மாதிரி இழுத்துட்டு இருக்காரு." என்றாள் அனுமித்ரா. 

சயூரி சிரித்துக்கொண்டாள்.  ஒரு பேச்சை ஆரம்பித்துவிட்டு அடுத்து அடுத்த பேச்சுக்கு மாறும் அவள் குணத்தை பார்த்து.  அவளுக்கு தெளிவான முடிவோ பேச்சோ இல்லை.  அவளின் தேவை அவளுக்கே புரியாமல் கூட இருக்கலாம். 

"ஏன் அனு நீ அண்ணனனை மிஸ் பண்ணுறியா?" என்று கேட்டாள் சயூரி அவள் மனதை படிக்க. 

"ம் பண்றேன்." என்று கண்ணை மூடிக்கொண்டாள் அவள். 

"இப்படி மொட்டையா சொல்லிட்டு கண்ணை மூடிகிட்டா எப்படி?" என்று சயூரி விடாமல் கேட்க. 

"என்ன மொட்டையா சொன்னேன்.  மிஸ் பண்றேன் என்றால் மிஸ் பண்றேன்." என்றாள் அனுமித்ரா கண்ணை திறந்துக்கொண்டு.

"தெளிவா சொல்லேன்.  அதான் டெய்லி வீடியோ கால் பேசுறியே ஒரு மணி நேரமாக." என்றாள் அவள். 

"வீடியோ காலில் பேசினா நேரில் பேசுனது போல வருமா? எனக்கு என் அம்மா அப்பாவை விட்டுட்டு வந்தப்போ எப்படி இருந்திச்சோ அப்படி இருக்கு இப்போ.  உங்க அண்ணன் ரொம்ப நல்லவர், என்னை ரொம்ப கேர் கொடுத்து பார்த்துப்பாரு. அப்படி ஒரு அக்கறையை நான் வேற எங்கேயும் உணர்ந்தது இல்லை.  இப்போ ஏதோ தனியா காட்டில் இருப்பது போல இருக்கு.  நீங்க எதுவும் தப்பா நினைக்காதிங்க சரியா." என்று அனுமித்ரா கூற 

கடிவாளம் அணியாத மேகம் Where stories live. Discover now