அத்தியாயம் 5

4.1K 192 28
                                    

ஆத்திரத்தில் நின்ற அனுமித்ராவுக்கு அடுத்து என்ன ஆகும் என்று நல்லாவே தெரியும் ஜீவன்த்க்கு .  அதனால் அடிக்கும் அவள் கையை பிடித்துக்கொண்டு அவளை தன்னோடு அணைத்தான் ஒரு கையாள்.

அடங்கிவிடுவாள் என்று அவன் நினைத்தற்கு மாறாக அவளோ அழுது மயங்கிவிழுந்தாள். "அனு" என்று ஒரு கையில் குழந்தையோடு அவளை பிடிக்க குனிந்தான் ஜீவன்த்.  அதுவரை இவர்களை பார்த்துக்கொண்டு அண்ணனின் பிடியில் இருந்த சயூரி அவன் கையை விலக்கிவிட்டு ஜீவன்த்க்கு உதவி செய்ய ஓடினாள்.  அவள் அவன் கையில் இருந்த குழந்தையை வாங்க முயல அவன் கையை அவள் முகத்துக்கு நேராக நீட்டி தடுத்தான். 

"போதும், நீங்க செய்த உதவி வரை போதும்.  உலகத்துல எல்லாமே காதல், கண்றாவி மட்டும் இல்லை.  அதற்கு மேல் மனுஷனுக்கு எவ்வளவோ இருக்கு. வெளியே பார்க்க சாதாரண மனுசனாக தெரிந்தாலும் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ஒவ்வொருத்தருக்குள் ஆயிரம் பிரச்சனை இருக்கும்.  அதெல்லாம் வெளியே சொல்லிக்கிட்டு அலையணும் என்று எந்த அவசியமும் இல்லை.  நீங்க பார்க்க வந்ததை பார்த்தாச்சில்ல. எனக்கு இரண்டு குழந்தைகள்.  நான் அவர்களை பார்க்கனும் கிளம்புறிங்களா?" என்று கடுமையாக பேசியவன் வாசலை நோக்கி கையை காட்டினான். 

"ஜீது இப்போ ஆத்திரம் பெருசு இல்லை. காரியம்தான் பெருசு.  குழந்தையை தாங்க. அவளுக்கு என்னன்னு பாருங்க." என்ற சயூரி வலுகட்டாயமாக அவனிடம் குழந்தையை வாங்கினாள். 

"என்னண்ணா பார்த்துட்டு இருக்க? அந்த தண்ணியை எடுத்து அவள் முகத்தில் தெளி." என்றாள் சயூரி அமைதியாக நின்ற அவள் அண்ணனிடம்.

"நானா?" என்றான் அவன். 

"பின்ன யாரு? சிஐடி வேலை பார்த்த நீதான் இதெல்லாம் செய்யணும்.  நான் ஒரு முட்டாள் என்றால் எனக்கு முன்னே பிறந்த நீ அதுக்கும் மேல." என்றாள் சயூரி.

"ஓகே ஓகே பேபி டோன்ட் ப்ளேம் மீ." என்றவன் சமையல் அறைக்கு சென்று தண்ணீர் எடுத்துவந்தான். ஜீவன்த் மயங்கிய நிலையில் இருக்கும் அனுமித்ராவின் மேல் கவனமாக இருந்ததால் இவர்களை அவன் அப்போதைக்கு எதுவும் சொல்லவில்லை. 

கடிவாளம் அணியாத மேகம் Where stories live. Discover now