அத்தியாயம் 5

Start from the beginning
                                    

தண்ணீரை முகத்தில் தெளித்தும், கன்னத்தை தட்டியும் அவள் தெளிந்தபாடில்லை. "ஓ காட்" என்று தலையில் கையைவைத்தவன் அவளை ஹாஸ்பிடல் கொண்டு செல்லவேண்டும் என்பதை உணர்ந்தான்.  இதைபோல சில நேரம் நடந்திருக்கிறது. 

அவளின் தலையை தூக்கி தரையில் மெதுவாக வைத்துவிட்டு தன் போனை எடுக்க சென்றான் ஜீவன்த்.

"என்னாச்சு?" என்று கேட்ட சாய்வேதன் குழந்தையை எப்படி பிடிக்கவேண்டும் என்று தெரியாவிட்டாலும் தன் தங்கையிடம் கையை நீட்டினான்.  அவள் புரிந்துக்கொண்டு அழும் குழந்தையை அவன் கையில் கொடுத்துவிட்டு அனுமித்ராவின் தலையை எடுத்து தன் மடியில் வைத்து அவளின் முகத்தை லேசாக வருடி கொடுத்துக்கொண்டு அவளின் உள்ளங்கையை அழுத்தமாக சூடு பறக்க தேய்த்துவிட்டாள். 

"அவ ட்ரெஸ் அவளுக்கு கம்பெர்டபிலா இல்ல.  கொஞ்சம் காற்று படும்படி முகத்தை வை." என்றவன் பக்கத்தில் இருந்த ஒரு புக்கை எடுத்து தங்கையிடம் நீட்டினான்.  குழந்தை அழ தொடங்கியது அவன் கையில் இருந்து. 

"இது ஏன் அழுது?" என்று குழந்தையை பார்த்தான் சாய்வேதன் கொஞ்சம் முக சுளிப்புடன்.

"பசிச்சிருக்கும்." என்ற சயூரி   மயக்கத்தில் இருந்தவளுக்கு உதவி செய்தாள். 

ஜீவன்த் ஆட்டோக்கு போன் செய்துவிட்டு, ஹாஸ்பிடலுக்கும் போன் செய்துவிட்டு வந்தான்.  அதற்குள் குழந்தை அழுதுகொண்டு இருப்பதை பார்த்தவனுக்கு பதட்டம் வந்தது.  தாய்பால் மட்டுமே குடிக்கும் குழந்தை.  இங்கோ தாய் மயங்கி கண்ணை திறக்காமல் இருக்கிறாள்.

சயூரி  அனுவின் கன்னத்தை லேசாக தட்டிக்கொண்டே இருக்க அவள் மெல்ல கண்ணை திறந்தாள். 

"ஊவுப்" என்று பெருமூச்சிவிட்ட ஜீவன்த் "ரொம்ப நன்றி." என்று அனுவை தன் மடிக்கு மாற்றினான்.  கண்ணை திறந்தவள் குழந்தை அழுவதை கூட கவனிக்காமல் தன் எதிரே தரையில் அமர்ந்திருக்கும் அந்த பணக்கார பெண்ணை பார்த்தாள். பிறகு மெல்ல கேட்டாள் "நீங்கதான் இவருடைய முதலாளியம்மவா?" என்று.

கடிவாளம் அணியாத மேகம் Where stories live. Discover now