அத்தியாயம்-01

7 4 2
                                    

• "டேய் சுந்தர் ,இந்த டிவியை கொஞ்சம் பாரேன்" என்று வீட்டை சுத்தம் செய்து கொண்டே , சுந்தரை அழைத்தாள் மேகலை.

• செய்தி தொலைக்காட்சி ஒன்றில் "மெரினா புரட்சி, உணர்வாய்...உயிராய்..." என்ற தலைப்பில் சென்ற வருடம் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த சிறப்பு தொகுப்பு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

• ஆம் , சென்ற வருடம் நிகழ்ந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சுந்தரும் அவனது நண்பர்களுடன் பங்கேற்றிருந்தான்.

• எந்தவித தலைமையோ, அரசியல் சார்பின்மையோ இல்லாமல் இளைஞர்கள், குழந்தைகள் ,முதியவர்கள் என அனைத்து வயதுபா பிரிவைச் சார்ந்த தமிழர்கள் அனைவரும் சாதி,இன,மத பேதமின்றி தமிழ்நாட்டின் பெருமைமிகு ஜல்லிக்கட்டை காக்க தாமே முன்வந்த, தன்னெழுச்சி தருணம் அது ‌.

• சமூக வலைத்தளங்களின் ஆற்றல் என்னவென்பதை  அரசியல்வாதிகளுக்கு ஆணியடித்தாற் போல் உணர்த்திய களம் அது.

• அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் தானும் வரலாற்று சிறப்பு மிக்க அந்நிகழ்வில் பங்கேற்றுள்ளோம் என்பதை நினைத்து பெருமிதம் அடைந்தான் சுந்தர்.

• "எப்பவும் போல ஏதாவது எழுதிக்கிட்டு இருக்காம, சீக்கிரமா போய் தூங்கு நாளைக்கு அதிகாலையில எந்திரிக்கனும், தோசை செஞ்சு வச்சிருக்கேன், சாப்பிட்டுவிட்டு தூங்கு" என்றாள் மேகலை.

• நாளை தைப்பொங்கல் என்பதால் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தாள் மேகலை. தோசையை சாப்பிட்டுவிட்டு தனது திறன்பேசியை எடுத்தான் சுந்தர்.

• அப்போதுதான் தன் நண்பன் பிரதீப் புலனத்தில் அனுப்பியிருந்த செய்தியை வாசித்தான்,"மச்சான் நாளைக்கு சாயங்காலமே அலங்காநல்லூர் கிளம்பிடலாம் camera,mic எல்லாம் நானே கொண்டு வந்துடுறேன்,good night"

• "போனை ரொம்ப நேரம் நோண்டாம போய் தூங்கு" என்றாள் மேகலை."சரி அம்மா, அதுக்கு ஏன் இப்படி கத்துறீங்க...good night"என்று கூறி விட்டு உறங்கச் சென்றான் சுந்தர்.
  
                                          தொடரும்...

You've reached the end of published parts.

⏰ Last updated: Jun 08, 2021 ⏰

Add this story to your Library to get notified about new parts!

குருவம்மாWhere stories live. Discover now