மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seid...

By _meera99

339K 13.1K 6.5K

சக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு.... More

❤ 1 ❤
❤ 2 ❤
❤ 3 ❤
❤ 4 ❤
❤ 5 ❤
❤ 6 ❤
❤ 8 ❤
❤ 9 ❤
❤ 10 ❤
❤ 11 ❤
❤ 12 ❤
❤ 13 ❤
❤ 14 ❤
❤ 15 ❤
❤ 16 ❤
❤ 17 ❤
❤ 18 ❤
❤ 19 ❤
❤ 20 ❤
❤ 21 ❤
❤ 22 ❤
❤ 23 ❤
❤ 24 ❤
❤ 25 ❤
❤ 26 ❤
❤ 27 ❤
❤ 28 ❤
❤ 29 ❤
❤ 30 ❤
❤ 31 ❤
❤ 32 ❤
❤ 33 ❤
❤ 34 ❤
❤ 35 ❤
❤ 36 ❤
❤ 37 ❤
❤ 38 ❤
❤ 39 ❤
❤ 40 ❤
❤ 41 ❤
❤ 42 ❤
❤ 43 ❤
❤ 44 ❤
❤ 45 ❤
❤ 46 ❤
❤ 47 ❤
❤ 48 ❤
❤ 49 ❤
❤ 50 ❤
❤ 51 ❤
❤ 52 ❤
❤ 53 ❤
❤ 54 ❤
❤ 55 ❤
❤ 56 ❤
❤ 57 ❤
❤ 58 ❤
❤ 59 ❤
❤ 60 ❤
❤ மாயவள் அவள் ❤
Thanks for your love and support ❤
♥️

❤ 7 ❤

5.8K 219 70
By _meera99

காரிருள் வானில்
நிலா செய்திடும்
மாயம்..
உன் கனாவில்
உன் மதியாய்
நான் செய்கிறேனடா

வானம் இருளை விட்டு கரு நீலத்தில் வண்ணம் தீட்ட ஆரம்பிக்க அதில் வழமையாய் மனதை கொள்ளை கொண்டிடும் சாருவோ இன்று மகிழ்ச்சி ஒரு பக்கம் துக்கம் ஒரு பக்கம் என அறிய முடியா மனநிலையில் கைகளில் பைகளுடன் ஊர் மக்களிடம் விடைபெற்றுக்கொண்டிருந்தாள் தன் பயணத்திற்காய்.

அழக்கூடாது என கொண்ட உறுதியையும் தாண்டி கண்கள் குளமாகிட இருந்தும் புன்னகையோடு அனைவரிடமும் விடை பெற்றவள் பாலுவை நோக்கிட..அவன் அழுகையில் கண்கள் சிவக்க தலைகுனிந்து நின்று கொண்டிருந்தான். இவள் அவனருகே சென்று அவன் உயரத்திற்கு குனிந்து தலையை நிமிர்த்த..பாலு விம்மியவாரே

"அக்கா மன்னிச்சிடுக்கா நான் சாக்லேட்டு தரலன்னு தான் நீ சாக்கலேட்டு வாங்க எங்க எல்லாரையும் விட்டு போறியா..நான் உனக்கு இனிமே அண்ணா அனுப்புற எல்லாமே தந்துடுறேன்க்கா போகாதேயேன்."
அவன் பேச்சில் தன்னை மறந்து சில துளி கண்ணீரை கீழே விட்டவள் சட்டென சுதாரித்துக்கொண்டு..

"என்னடா பல்லு இது இப்பிடி அழுதுட்டு இருக்க..உனக்கு சபதம் விட்டேனே மறந்துட்டுதா பிரியாணி சாப்பிட வேணா அதா போறேன்..என்ன அக்கா சொல்லிட்டயே சரி உனக்கும் ஒரு பொட்டளம் இருக்கு பிரியாணி..அக்கா வந்துடுறேன்..அழ கூடாது..சரியா"
அவன் கண்ணை துடைத்துவிட்டு பெரிய ஐயாவிம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டவள்..காரில் ஏறப்போக..மீண்டும் திரும்பி ஒரு முறை தன் பெற்றோரை பார்த்து விட்டு வந்த அழுகையை  அடக்கியவாறு ஓர் கையசைப்புடன் ஏறிக்கொண்டாள்.

கார் போக ஆரம்பிக்க..ஊரே அவளை வழியனுப்பிட இனிதே ஆரம்பமானது அவள் பயணம்.

சோகமே உருவாய் கண்மூடி  அமர்ந்திருந்தாள். கார் பாதையில் ஒரு குழியில் விழுந்து தன்னை மீட்டிட தன்னை சூழ்ந்திருந்த அந்த இறுகிய நிலையில் இருந்து விடுபட்டாள் சாரு. அப்போதுதான் சுற்றி பார்க்க கார் நகர்வதே அப்போதுதான் அவள் கருத்தில் பதிந்தது. தனக்கு பிடித்த கார் தனது கனவுகளில் ஒன்று இந்த கார் பயணம்..எண்ணியவள் மனநிலை கொஞ்சம் கொஞ்சமாய் குதூகலமாய் மாற ஆரம்பிக்க..

ஜன்னலோடு ஒட்டிக்கொண்டு வெளியில் இவளை கடந்து பின்னால் பயணிக்க ஆரம்பித்த பாதை, மரங்கள்..தன்னோடு தன்னை பிரிய மனமின்றி காரை சுற்றியே வந்த வானம், மேகம் என ஒவ்வொன்றாய் ஆவல் மேலோங்க கண்களில் நிரப்ப தொடங்கினாள் அவள்.

*****************

அதிகாலைத்தென்றலின் குளிர்ச்சியில் குளித்து அனைவரையும் ஆவலாய்க்காண உதித்தெழும் ஆதவன் முகம் பார்த்திட அதிலும் கடற்கரை உவர் காற்றும் சேர்ந்து குளிர்விக்க கடலிலும் பிரதிபலிப்பாய் வர்ணஜாலம். பார்க்க பார்க்க தெவிட்டாத காலைப்பொழுதை வழமைபோல் இன்றும் கையில் காபி கப்புடன் கண்களில் நிரப்பிவண்ணம் சாய்வாய் கதிரையில் அமர்ந்திருந்தான் சக்தி. ஆங்காங்கே ஈரம் அப்பொழுதுதான் குளித்ததன் அடையாளமாய் அவனை விட்டுப்பிரிய மனமின்றி ஒட்டிக்கொண்டிருக்க இன்று அவனுள் ஏதோ ஓர் இனம்புரியா உணர்வு...என்னவென்று தெரியாவிட்டாலும் அதனை கண்மூடி உணரமுயன்று கொண்டிருந்தவனைக் களைத்தது அவனது செல்போன் ஒலி.

"ஹ்ம் ஓகே டேவிட்" ஒற்றைப்பதிலோடே அழைப்பைத்துண்டித்தான்.

அன்று வருடத்தின் சிறந்த ஆடை வடிவமைப்பாளரை தெரிவு செய்வது தொடர்பான நிகழ்வு பற்றிய முக்கிய மீடிங் இருக்க என்றும் எதிலும் நேரம் தவறாத சக்தி இன்றும் அதே போல் தயாராகிக்கொண்டிருந்தான்

சக்தி இவ்வாறு இருக்க வீட்டில் மற்றையவர்கள் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர். நிலா அதிகாலையோடே சுற்றுலா கிளம்பி போயிருக்க சதீஷோ சக்தியை எவ்வாறு சமாளிப்பது என திட்டம் தீட்டிக்கொண்டிருந்தான்.
வாயிலில் சாவித்ரி தன் கணவன் வருகைக்காக முக்கியமாக அவர் போனில் சாரு பற்றி கூறியவையினால் அவளைப்பார்க்கும் ஆவலிலும் காத்துக்கொண்டிருந்தார்.

கார் வந்து வாயிலில் நிற்கவும் கதவைத்திறந்து கொண்டு இறங்கிய சிவா பின் கதவைத்திறந்து "வாம்மா சாரு" வரவேற்க..தயங்கி தயங்கி மெதுவாக எட்டிப்பார்த்தவள்..தன்னைப்பார்த்து புன்முறுவல் செய்த சாவித்ரியை கண்கள் விரித்துப்பார்த்தவாறே பைகளுடன் இறங்கினாள்.

பாவாடை தாவணியில் அழகோவியமாய் கண்களில் சிறு பயம் கலந்த பதற்றம் இருந்தும் மறைத்துக்கொண்டு சிறு முறுவலுடன் இறங்கி நெளிந்து கொண்டே நின்றவளைப்பார்ததுமே சாவித்ரியிற்குப்பிடித்துவிட்டது..சிறு வயதில் தன்னைப்பார்ப்பது போலே இருக்க சிவாவைப்பார்த்தவர் அவர் கண்களால் ஏதோ கூற..முன்னே சென்று சாருவின் கைபற்றி "உள்ள வாடாம்மா" என அழைத்தார்.

அவரை இன்னும் விழிவிரித்து நோக்கியவள்
" அம்மா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அதோடு ரொம்ப அழகா பேசுரீங்க"

அவள் பேச்சில் சிரித்தவர்.
"நன்றிடா நீயும் துரு துரு ன்னு ரொம்பவே அழகா இருக்க. சரி வா உனக்கு களைப்பா இருக்கும் வந்து குளிச்சிட்டு சாப்பிடு"

உள்ளே செல்லப்போனவள் ஒரு நிமிடம் நின்று அங்கு கேட்டுக்கொண்டே இருந்த பெரிய இரைச்சல் ஓசை கேட்டு பயம் எட்டிப்பார்க்க மெதுவாக திரும்பி சுற்றிப்பார்த்தவள் அவர்களுடனே சேர்ந்து கொண்டாள்.

உள்ளே நுழைந்து படிக்கட்டுகளில் ஏறி கடைசி அறைக்கு எதிர் அறையை சாவித்ரி திறந்து விடும் வரை கண்களை எவ்வளவு விரிக்க முடியுமோ அவ்வளவு விரிந்து வியந்து கொண்டே வந்தாள் சாரு.
குடிசை மண் வீட்டில் இருந்தவளுக்கு இங்கு எல்லாமே பிரம்மிப்பாய் தான் இருந்தது. சுற்றி சுற்றி அண்ணாந்து பார்த்துக்கொண்டே வந்தவள் எதிலோ மோத நெற்றியைத்தேய்த்துவிட்டுக்கொண்டே பார்க்க அங்கு சாவித்ரி திறந்திருந்த கதவிற்கு எதிர் கதவில் மோதியிருந்தாள். சாவித்ரி உள்ளே சென்றிருக்க இவளும் நெற்றியேத்தேய்த்து விட்டவாறே கதவா இது இப்படி இருக்கு முணுமுணுத்தவாறு அந்த கதவிற்கு எதிரே இருந்த அறையினுள் சென்றாள்.

இவள் உள்ளே சென்ற மறுநிமிடம் சாவித்ரி வெளியில் வந்து கதவை அடைக்க..அவர் பின்னால்.."ம்மா கூப்டிங்களா?" வினவியவாரே கதவைத்திறந்து கொண்டு நின்றான் சக்தி.

"இல்லையேப்பா ஏன்"

"இல்ல யாரோ தட்டினது போல இருந்தது. ஓகேம்மா எனக்கு இன்னக்கி முக்கியமான மீடிங் இருக்கு about 10"

"சரிப்பா வா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்."
என்றவாறு கீழே செல்ல சக்தியும் பின்னால் சென்றான்.

சாப்பிட அமர்ந்த சக்தி என்றுமில்லா அதிசயமாய்.."நிலா எங்க" கேட்க திரு திரு என விழித்த சதீஷ்.."நில்லாக்கு எர்ர்லி மார்னிங்ங் extra class சோ போய்டா ஆமா."

"அதுக்கு எதுக்கு நீ இவ்வளோ பம்முற"
அவனை ஒரு மார்க்கமாய் பார்த்தவாறே சக்தி வினவ..

கடன்காரா எல்லாத்தையும் நோண்டிட்டே இருப்பான்.."அது இட்லி ரொம்ப காரமா இருக்கு அண்ணா"

அவன் பதிலில் சமயலரையில் இருந்த சாவித்ரி தலையிலே அடித்துக்கொள்ள..சக்தி குழம்பியவண்ணம் அடுத்த கேள்வியை கேட்க முன் சுதாரித்த சதீஷ் வராத கோலை "ஹலோ" என பேசியவாறே நகர்ந்தான்.

****************

கம்பனிக்கு சாருவை அழைத்துச் சென்று கொண்டிருந்த சிவாவிற்கு அவசரமாய் ஓர் அழைப்பு வர அதனை எடுத்துப்பேசியவர்..
"சாரு என் நண்பன் ஒருத்தனுக்கு ஆக்சிடேன்ட்..யாருமே ஹாஸ்பிடல் போக கூட முன்ன வரல..நான் போகனும் அவசரமா..கம்பனி இங்க பக்கம் தான்.. இங்க இறங்கி நேரா போய் வவது பக்கம் திரும்பு..அங்க RK designers என்று இருக்கும்."
அவளிடம் கூறிவிட்டு அவளை இறக்கிவிட்டு பறந்தது கார்.

முன்னே நடந்தவள் ஒரு இடத்தில் பாதையைக்கடக்க நின்று கொண்டு வாகனம்  வராத வேளையை எதிர்பார்த்து இருக்க..சரியாக இருபக்கமும் பார்த்து விட்டு அவள் கடக்கவும் வேகமாய் வந்த ஒரு கார் ஹான்னை அழுத்தியவாறே வந்து சடன் பிரேக் போட்டது.
பதட்டத்தில் கீழே விழுந்து விட்டவள்..தான் கடந்தது பாதசாரிகள் கடவைதானே பின்ன என்ன இவனுக்கு என்ற எரிச்சலில் நிமிரவும்..

"இடியட் பார்த்து வர மாட்ட..இப்படிதான் நடுவுல வந்து பாயிறதா..காலங்காத்தால வந்துட வேண்டியது. எந்திரி"
காரிலிருந்து இறங்கி அவன் திட்ட ஆரம்பிக்கவும் சுரு சுரு என கோபம் தலைக்கேற பதில் பேச போனவள் "ஹ்ம் இல்ல இவனெல்லா வேற முறையில தான் கவனிக்கனும்..பெரிய பணக்காரன்னு திமிரு..எல்லாரும் சிவா ஐயா போல இருப்பாங்கலா என்ன."

"உனக்கு காது கேக்கல.. எனக்கு டைம் ஆச்சி. எந்திரி முதல்ல ஹ்ம் கம் ஆன்."
அதிகாரத்தொனியில் அவன் ஏவவும் சாருவோ சுற்றி கூடியிருந்த கூட்டத்தை ஒரு கண்ணால் பார்த்து விட்டு..அந்த சிடுமூஞ்சியையும் ஒரு பார்வை பார்த்தவள்.. சட்டென தன் வலது காலைப்பற்றிக்கொண்டு...
"அய்யோ அம்மா கால்.. கால் வலிக்கிதே..கால்ல்"

அவள் திடீரென காலைப்பற்றிக்கொண்டு சத்தமிடவும்..
"ஏய் ஏய் நடிக்காத..நான் பிரேக் போட்டுட்டன். அதோட பார்க்காம வந்தது உன்னோட பிழை. என்ன பணம் பறிக்கலாம் பார்க்குரியா.."
அவன் பல்லைக்கடித்துக்கொண்டு பேச கூட்டத்தில் இருந்த ஒருவர்.."தம்பி அந்த பொண்ணு கடந்தது கடக்க வேண்டிய இடத்தில தான்..நீ தான் பார்த்து வந்திருக்கனும். முதல்ல ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ கால்ல எழும்பு ஏதாவது முறிஞ்சி இருக்க போகுது."
அவர் கூற கூட்டத்தில் இருந்த அனைவரையும் அவள் பக்கமே பேசி அவர் கூற்றை ஆமோதிக்க..அதனைக்கண்டு மெல்லியதாய் சாருவின் முகத்தில் தோன்றிய கேலிச்சிரிப்பும் அவன் கண்களில் தப்பாமல் பட்டுவிட்டது.

நெருப்பை கண்களால் கக்கியவாறே அவளருகில் வந்தவன் வா என்க..சாருவோ "வா ன்னா எப்படி வாரது அதா கால்ல அடிபட்டிருக்கில்ல கூட்டத்துல யாரவது" அவள் முழுதாய் கூறி முடிக்கும் முன்னே பட்டென குனிந்து அவளைக்கையில் ஏந்தியிருந்தான் அவன்.
சாருவோ இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை. தன் மேல் தவறும் இன்றி இருக்க அவன் அதிகாரமாய் வேறு பேசவும்..அவன் எதற்கோ அவசரமாய் செல்வது புரிய.
அந்த தலை போகிற வேலையில் கொஞ்சம் சீண்டிப்பார்க்கலாம் என்றே இப்படி செய்தாள்..

"ஏய் விடு விடு" அவள் கையிலிருந்து இறங்க திமிர...
"ஷட் அப்" அவன் அதட்டலிலும் முறைப்பிலும் வாயை மூடிக்கொண்டவளை காரில் ஏற்றிவிட்டு வந்து காரை ஸ்டார்ட் செய்தவன் ஒரு வார்த்தை பேசாது காரை அதிவேகத்தில் செலுத்தினான்.

காரை மருத்துவமனை முன் நிறுத்தியவன் நேரம் பார்க்க அது மீடிங் ஆரம்பித்து பதினைந்து நிமிடங்கள் கடந்திருப்பதைக்காட்டியது.. கோபம் முழுவதையும் காட்டி சீட்டில் அடித்தவன் இறங்கி வந்து அவள் பக்க கதவைத்திறந்து மீண்டும் அவளை கையில் தூக்கிக்கொண்டு நேராக உள்ளே சென்று.. டாக்டர் அறையையே திறந்து.. அவளை பொத்தென அங்கிருந்த நாட்காலியில் போட்டு விட்டு திரும்பிப்பார்க்காது அவன் வெளியேறினான்.

டாக்டர் அதிர்ந்து நோக்க இவன் பின்னால் வந்த நர்ஸும் புரியாது வாசலில் இருந்து விழிக்க இவர்களுக்கு மேலாய் விழித்துக்கொண்டிருந்தாள் சாரு.

Continue Reading

You'll Also Like

23.1K 672 14
"நீ என்ன லவ் பண்ணலனாலும் பரவால்ல. இருக்க ஒன் இயர எனக்கே குடுத்திரு. அது போதும்." அவன் கூற... அவள் அவனை உற்று நோக்கினாள். "ஏன் அப்டி பாக்குற?" அவன் பு...
355K 11.2K 48
"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாத...
107K 3.3K 40
Mull methu vizhuntha panni thuzhi udaiuma karaiuma??? aduthu enna nadakum yennru theriyamal payanikum eru thuruvangal:-) onnru seruma???
18.7K 464 8
காதல் கொண்டு மனம் புரிந்த கணவன் திடீரென்று இறக்க கயல்விழிக்கு ஏற்படும் திகில் நிறைந்த நிகழ்வுகளே இக்கதை.