ஆனந்தமே... ஆரம்பமே... (Comple...

By jothiramar

117K 1.3K 288

விதி வசத்தால் குடும்பத்தை பிரிந்த நாயகி...... தந்தை மற்றும் தம்பியின் இறப்பில் உள்ள மர்மத்தை அறிந்து கொள்ள து... More

ஆரம்பம் -1
ஆரம்பம் -2
ஆரம்பம் -3
ஆரம்பம்-4
ஆரம்பம்-5
ஆரம்பம்-6
ஆரம்பம்-8
ஆரம்பம்-9
ஆரம்பம் -10
அறிவிப்பு
அறிவிப்பு
hi friends
friends

ஆரம்பம்-7

1.9K 123 14
By jothiramar

அண்ணா...  அது...ஆ...ஆ...  க்ஸிடென்ட் இல்...லை உண்... மையிலேயே ம.... மர்டர் தான் என்று திக்கி தெனறி இருக்கி பிடித்த கழுத்தை சரி செய்தபடியே சந்திரன் சொல்ல

அவன் அருகில் விரைந்து வந்து  மண்டியிட்டவன் நீ சொல்றது உண்மையா சொல்லு....  சொல்லு.... என்று திரும்ப திரும்ப கேட்க

அன்னைக்கு மார்னிங்கே பைபாஸ் ல ஏதோ ஆக்ஸிடென்ட் ஆகியிருக்குனு போன் வந்தது

அங்கே போய் பார்க்கிற வரைக்கும் அது உங்க அப்பாவோடதுனோ இல்லை விஷ்னுவோடதுனோ நான் நினைக்கல ஏன் என்றால் அன்னைக்கு முதல் நாள் காலையில தான் என்னை மீட் பண்ணுனும் முக்கியமான விசயமா பேசனும் என்று சொன்னான்

என்ன  விசயம்  விஷ்னு சொல்லுன்னு சொன்னேன்

அதுக்கு அவன் இல்லைடா கான்பிடன்ஷியலான மேட்டர் நான் நேர்ல வந்து சொல்றேனு சொன்னான் என்றதும்....

என்ன முக்கியமான விசயம், எதை பற்றி,  யாரை பற்றி....  சொல்லு அதை என்று சிம்ம கர்ஜனையுடன் கேட்க

எனக்கு தெரியாது? "அவன் வர்ரேனு சொல்லிட்டு வரல.... நானும் அவனுக்கு வெயிட் பன்னி பார்த்து விட்டு நாம நாளைக்கு கேட்டுக்கலாம் என்று விட்டுவிட்டேன்..... 

ஆனால் அவனை இப்படி பார்ப்பேன் என்று நான் நினைக்கல அண்ணா சொல்லிவிட்டு அழுதவனை தேற்ற கூட முடியாத நிலமையில் சிவா இருக்க....

அது விஷ்னுவோட உடம்பு என்று தெரிந்ததும் எனக்கு ஒரே அதிர்ச்சி அப்புறமா பக்கத்துல இருக்கிற உடம்பு யாருனு பார்த்ததும் ஷாக் ஆகிட்டேன். ஏன்னா அது நம்ம சாரோட உடம்புனு தெரிஞ்சதும் ஏற்கனவே ஆம்புலன்ஸ்க்கு இன்பார்ம் பண்ணிருந்ததால உடனே ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்து விட்டோம் என்றவன் பாதியில் நிறுத்தி விட்டு சிவாவை பார்க்க

பிறகு என்ன நடந்தது.....  கண்களை மூடியபடியே  கோபமாய் கேட்க

நான்..... நான்...

என்னடா நான்... நான் என்று சொல்லிட்டு இருக்க...  முழுசா சொல்ல வந்ததை சொல்லிடு கோபக்குரலில் சிவா சொல்ல

நான் என்னோட சுப்பீரியருக்கு கால் பண்ணி சொன்னேன் அவங்களும் ஹாஸ்பிடலுக்கு வந்துட்டாங்க...

நான் அவங்க உடம்பை ஆக்சிடென்ட் ஸ்பாட்லேயே செக் பண்ணினேன் அப்பவே அவங்க இறந்துட்டாங்கனு நான் தெரிஞ்சிகிட்டேன்  டாக்டர்ஸும் அதை கன்பார்ம் பன்னாங்க ஆனால் போஸ்ட்மார்ட்டம் முடிந்து தான் நாங்க டிடெயில்ஸ் சொல்ல முடியும் என்று சொல்லிட்டாங்க அப்புறம்.... என்று நிறுத்த...

ம்ம் அப்புறம் என்று கோபத்தில்  கத்த

அய்யோ இவர் பல்லை கடிக்கிற  சத்தமே இப்படி கேட்குதே நான் அடுத்து நடந்ததை  சொன்னா..... என்னாகும் என்று தெரியலியே கருப்பா காப்பாத்து உம்மேல பாரத்தை போட்டு மீதி விசயத்தையும் நான் சொல்ல போறேன் என்று மனதிலேயே கடவுளிடம் மனு போட்டவன்  சிவாவை பார்க்க அவனோ

சந்திரன் கண்ணை மூடியபடி வாய்க்குள்ளேயே முனுமுனுத்து கொண்டு இருப்பதை பார்த்து கோபத்துடன்  முறைத்து கொண்டு இருந்தான் சிவா....

அய்யோ இவரு நம்மல தான் முறைக்கிறாரா என்று நினைத்தவன் முகத்தை அப்பாவியாக வைத்து கொண்டு அண்ணா...

ம்ம்....  என்றதிலேயே சிவாவின் கோபத்தை அறிந்தவன், தொடர்ந்து

டாக்டர்ஸ் போஸ்ட் மார்ட்டம் செய்து விட்டு எங்களை கூப்பிட்டாங்க

டாக்டர் இவங்க மரணம் ஆக்சிடென்ட் தானு கண்பார்ம் ஆகிட்டா... என்று கமிஷ்னர் கேட்க

நோ கமிஷ்னர் சார்.... இது க்ருட்டல் மர்டர் சார்.... அது மட்டும் இல்லாமல் இவங்க உடம்பில் இருந்து உடல் உறுப்புகளை எடுத்து இருக்காங்க இன்னும் நீங்க கேட்டா அதிர்ச்சி ஆகிடுவீங்க.....

என்ன டாக்டர் சொல்றீங்க இவங்க  இந்த ஊரிலேயே பெரிய பிஸினெஸ் மேன் என்றதும்....

நானும் இவங்களை ஒரு முறை மீட் பன்னிருக்கேன் இவங்க மருத்துவனையில ஏழை மக்களுக்கு என்று இலவசமாக டிரிட்மென்ட் கொடுக்கிறாங்க இவங்களுக்கு இந்த நிலமை என்று நினைக்கும் போது....  ஓகே கமிஷ்னர் லெட் மீ ஃபினிஷ்  என்றவர் சொல்ல ஆரம்பித்தார்

இவங்க உடம்பில இருந்து உடல்  உறுப்புகளை எடுக்கும் போது மயக்க மருந்து  கொடுக்காமலேயே எடுத்துருக்காங்க அதிக இரத்தம் வெளியேறி அவங்க இறந்து விட்டாங்க அதற்கு பிறகு இவங்க மேல வாகனத்தை ஏற்றி ஆக்சிடென்ட் மாதிரி கிரியேட் பன்னிருக்காங்க என்று சொல்லவும் சந்திரன்  உள்ளுக்குள் அதிர்ந்தாலும் வெளியே தன் உணர்வுகளை காட்டாமல் இருக்க பெரிதும் முயன்றான்....

டாக்டர் சொன்னதை கேட்ட பிறகு கமிஷ்னர் சந்திரனை அழைக்க

மிஸ்டர் சந்திரன்....

சார் என்று சல்யூட் அடிக்கவும் தலையசைப்புடன் ஏற்றவர்....

சந்திரன் இவங்க மரணம் ஆக்சிடென்ட் என்று ப்ரஸ்க்கு முதல்ல இன்பார்ம் பன்னிடுங்க என்றதும்....

சார் இப்ப தான டாக்டர் சொன்னாங்க மர்டர் என்று அப்புறம் ஏன்.... அதிர்ந்தவனை

இடைமறித்த கமிஷ்னர் நான் சொன்னதை செய்ங்க நீங்க போகலாம் என்று அனுப்பிவிட்டார்

அனைத்தையும் சொல்லி முடித்தவன் சிவாவை பார்க்க அவனோ

கண்கள் சிவக்க கையில் வைத்து இருந்த கிளாஸ் உடைந்து.... அவன் கைகளில் இரத்தம் சொட்ட வெறித்து நின்றவனை பார்த்ததும் அருகே நெருங்க பயந்து அமைதியாக நின்றான்

அண்ணா என்று சந்திரன் அழைக்க வெளியே போ... கார்ல போய் உட்கார் என்றதுமே சந்திரனுக்கு புரிந்தது.... நம்மை  கமிஷ்னரிடம் அழைத்து கொண்டு போகப்போறார்...

நம்மல அழைத்து கொண்டு கமிஷ்னர் அலுவலகத்து போறார் என்று நினைத்தவன் போய் சேர்ந்த இடத்தை பார்த்ததும் சிவாவை பார்க்க

கீழே இறங்கு என்று சொல்ல சந்திரன் வேகமாக இறங்கினான்

உள்ளே போனதும் அங்கே கமிஷ்னர் கை கால் கட்ட பட்டு கிடக்கவும் அதிர்ந்தவன் சிவாவை பார்க்க

சொல்லுங்க கமிஷ்னர் எதுக்கு என் அப்பா தம்பியோட கொலையை ஆக்ஸிடென்ட்னு... ஏன்  பொய்யான தகவலை  சொன்னீங்க கடுமை கலந்து கோபத்துடன் கேட்க கமிஷ்னரோ

இதுக்கெல்லாம் காரணம் நீ தானே என்று சந்திரனை முறைத்து கொண்டு இருக்க

கார்ட்ஸ் இன்னும் சாருக்கு டிரிட்மென்ட் ஸ்டார்ட் பன்னல தான என்றதும்

யெஸ் சார் என்று நால்வரும் சொல்ல

அவர்களை பார்த்த சந்திரனோ அடக்கடவுளே இந்த மலை மாடுகளை எங்கிருந்து இறக்குமதி பன்னாரு இந்த அண்ணன் என்று மனதில் நினைத்தபடியே வெளியே சொல்ல சிவாவின் ஒற்றை முறைப்பில் வாயை மூடினான்....

கமிஷ்னரோ சார் ப்ளீஸ் எனக்கு ஒன்றும் தெரியாது சந்திரன் எனக்கு போன் செய்த பிறகு வேற ஒரு போன் கால் வந்தது அதில் பேசினவன் இந்த கேஸை ஆக்சிடென்ட் என்று க்ளோஸ் பன்ன சொன்னான் நானும் பணத்திற்கு ஆசைப்பட்டு கேஸை ஆக்சிடென்ட் என்று சொல்லி க்ளோஸ் பன்னிட்டேன் என்றதும் மற்றொரு அறையில் இருந்து வெளியே வந்தவரை பார்த்த கமிஷ்னர் அதிர்ந்தார்...

இப்ப என்ன சொல்றீங்க அங்கிள் என்று ஐஜியை பார்த்து சிவா கேட்க

சாரி சிவா... எக்ஸ்டிரிமிலி சாரி ஒன்ஸ் அகைன் சாரி  "நீ சொன்னப்போ நான் நம்பல என்றவர் கமிஷ்னரை பார்த்து உன்மேல துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லிவிட்டு

சிவா இது ஆக்சிடென்ட் என்றே கேஸை மூடிவீடுவோம் என்றதும்

ஏன் உங்க டிபார்ட்மென்ட் அசிங்க படும் என்று மறைக்கறீங்களா கோபத்தில் கேட்க

நோ சிவா இப்படி அவசர படாத கொலை பன்னவன் யார்னு நாம இரகசியமாக தான் கண்டுபிடிக்கனும் அதற்கு நான் தனி டீமே ரெடி பன்னி விசாரணை செய்ய ஆரம்பிக்கிறேன்... மேலும் இதை  என்னோட பர்ஷனல் கேஸா கான்பிடன்சியலா நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன்.... சீக்கீரமே  கண்டுபிடிப்போம் என்றவர் சந்திரனை அழைத்து இதை நீ தான் கண்டுபிடிக்கிற என்னோட தலைமையில என்றதும்

எஸ் சார் என்று சல்யூட் செய்தான்....

ஆனால் அவர்கள் எடுத்த எல்லா  முயற்சியிலும் தோல்வியே.... இதுவரை  கொலைக்கான காரணமோ யார்...ஏன் எதற்கு  என்று நான்கு வருடமாக கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்

இவர்கள் விசாரணை செய்ததில் ஒரு பெண் சம்பந்தப்பட்டு இருக்கிறாள் என்று கண்டுபிடித்தவர்களால் அவளை பற்றின எந்த விசயமும் தெரியாமல் தந்தை மற்றும் தம்பியின் இறப்பில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க முடியாமல் இன்று கமிஷ்னர் அலுவலகத்தில் சந்திரன் விஷ்னுவை பற்றி  சொன்ன செய்தி அவனை நிலைகுலைய செய்யும்படி ஆனது...

Hi friends இதுவும் ஃப்ளாஷ் பேக் தான்.  கதை பிடிச்சிருக்கா....  ஏதேனும் தவறுகள் இருந்தால் மறக்காமல் சொல்லுங்க🙏🙏🙏🙏

Continue Reading

You'll Also Like

95.1K 4.2K 25
கடந்த காலத்தை மறந்து புது வாழ்க்கை தொடங்க போராடும் ஒரு பெண் முன் மீண்டும் கடந்த காலம் வந்தால் என்னாவாள்..
471K 12.6K 67
"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று...
45.8K 2K 26
யார் செய்தது குற்றம்.... என்று யாரும் புரிந்து கொள்வதில்லை..... பழி வாங்கும் எண்ணத்தில் அலைபவனை கைதி செய்யும் உலகம் அவனுக்கு நடந்த துன்பத்தை கேட்பத...
101K 5.2K 42
titleh solludhe vaanga ulla povom