ஆனந்தமே... ஆரம்பமே... (Comple...

By jothiramar

117K 1.3K 288

விதி வசத்தால் குடும்பத்தை பிரிந்த நாயகி...... தந்தை மற்றும் தம்பியின் இறப்பில் உள்ள மர்மத்தை அறிந்து கொள்ள து... More

ஆரம்பம் -2
ஆரம்பம் -3
ஆரம்பம்-4
ஆரம்பம்-5
ஆரம்பம்-6
ஆரம்பம்-7
ஆரம்பம்-8
ஆரம்பம்-9
ஆரம்பம் -10
அறிவிப்பு
அறிவிப்பு
hi friends
friends

ஆரம்பம் -1

9.3K 173 52
By jothiramar

கரையை கடக்க துடிக்கும் அலைகள் ஒன்றை ஒன்று முந்தி கொண்டும் கரையை தொட்ட அலைகள் தன்னை பூமிதாயின் பாதத்தை உடன் கொண்டு வரும் நுரைபூக்களால் வணங்கி வந்த சுவடு தெரியாமல் ஆழ்கடலுக்குள் சென்று விடும் ....

கடல் அலைகளையே பார்த்த வண்ணம் அமர்ந்து இருந்தாள் அவள்(நம் கதையின் நாயகி).

மம்மி ப்ளீஸ் ஒரு டைம் தண்ணில கால வச்சுக்கவா ....மகள்

நோ பேபி மா உங்களுக்கு ஒத்துக்காது ஃபிவர் வந்து விடும்-அம்மா

அப்புறம் ஏன் என்னை பீச்சுக்கு அழைத்து கொண்டு வந்தீங்க இப்படி இருக்க வீட்டில் டிவியை பார்த்து கொண்டு இருந்து இருக்கலாம் போ மா உன் பேச்சு கா.....

செல்லம் ஏன் கோபத்துடன் இருக்கீங்க ஐஸ்கிரீம் வாங்கி கொண்டு வந்த அப்பாவை பார்த்ததும் வாயெல்லாம் புன்னகையுடன்.....

தேங்க்ஸ் டாடி யூ ஆர் சோ ஸ்வீட்.மம்மி நோ ஸ்வீட் என்று முகத்தை சுருக்கிக் கண்ணை விரித்து கூறும் ஐந்து வயது குழந்தையை பார்த்ததும்......

தன்னையும் அறியாமல் வரும் பழைய ஞாபகங்களினால் ஏக்கமும் தவிப்பும் அதிகமானதே தவிர குறையவில்லை...

நோ ....நோ...சங்கவை நீ இப்படி தவிப்பு ஏக்கம் எல்லாவற்றையும் மனசில் இருந்து அழித்துவிடு அதுதான் அப்பா அம்மாவுக்கு நல்லது இல்லைனா...
நினைத்து பார்க்கவே பயமாக இருக்கே ... உள்ளுக்குள் துடித்து கொண்டு இருந்தாள்.

திடிரென தன் தோல் மீது கை படவும் அதிர்ச்சியில் திரும்பியவள்

புன்னகையுடன் நின்ற தோழி வாணியை பார்த்ததும் சீராக மூச்சு விட்டாள்....

ஹ...ஹ...ஹ...என்னடி பயந்து விட்டாயா?😲😲😲

வாணி எரும ஏன் இப்படி பயமுறுத்துன போடி... கொஞ்சம் நேரத்தில் மூச்சே நின்றுருக்கும்.

சவி(சங்கவை) கண்ணு ஏன் கலங்கி இருக்கு ....அழுதியா கோபத்துடன் கேட்ட தோழியை பார்த்து தலை குனிந்தாள்.

அம்மா அப்பா ஞாபகம் வந்துவிட்டது என்று சொன்னவளின் நிலையை தெரிந்த காரணத்தால்...

என்னடி ஒன்றுமே சொல்லாமல் இருக்க -சவி

என்ன சொல்ல சொல்ற காட்டமாக கேட்டாள் வாணி

நொடியில் தன்னை சரி செய்தவள் முகத்தில் புன்னகையுடன் போதும் வாணி நீ சோகமாக இருக்கிறது மாதிரி நல்லா தான் ஆக்டிங் பண்ற சோ சீனை மாத்துப்பா ....

அடிங் சும்மா சந்தோசமாக வந்தவளை ஃபீல் பண்ண வச்சுட்டு ஓவறா பேசுற என்று துரத்த ஆரம்பித்தாள் வாணி....

எங்கிருந்தோ சங்கமித்ரா.... சங்கமித்ரா
என்று அழைக்கும் குரல் கேட்டதும் அப்படியே திக்பிரமை பிடித்து நின்றாள்.

சங்கமித்ரா அம்மா எத்தனை தடவை சொல்லியிருக்கேன் தண்ணில காலை வைக்காதே சளி பிடிக்கும் ஃபீவர் வரும் என்று சொல்லி அழைத்து போகவும் பின்னே செல்ல போன சவியை தடுத்தாள் வாணி.

எங்க போறா.....

அந்த அக்காட்ட போகனும் விடு வாணி என்று கெஞ்சினாள் சவி...

சவி ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ஃப்.

நோடி வாணி அவங்க கிட்ட முக்கியமான விசயம் மட்டும் சொல்லி விட்டு வந்து விடுகிறேன்...

வேண்டாம்... வேண்டாம் சவி இதுக்கு முன்னாடி நடந்தத நான் இன்னும் மறக்கல இங்கே இருந்து வரை போதும் வா போகலாம் என்று கையை பிடித்து இழுத்து கொண்டு வேகமாக போனாள் அன்று நடந்தது தானாகவே நினைவு வந்தது.

ஒருமுறை கடற்கரைக்கு வந்த சவியும் வாணியும் சந்தோசமாக விடுமுறையை கொண்டாடினர் வீட்டுக்கு கிளம்பும் நேரத்தில்.....

சங்கமித்ரா ....சங்கமித்ரா ...என்று ஒரு பெண்ணின் அம்மா அழைக்கவும் அருகில் சென்றவள் ..

ஆன்ட்டி என்று அழைக்கும் குரல் கேட்டு திரும்பியவர் சவியை பார்த்து என்னம்மா....

ஆன்ட்டி இப்ப சங்கமித்ரானு கூப்பிட்டது....

ஆமாம் மா என் மக தான் சங்கமித்ரா என்றதும்...

ஆன்ட்டி இந்த பெயர் வேண்டாம் மாத்திடுங்க வேண்டாம் ஆன்ட்டி அப்புறம் நீங்க உங்க பெண்ணை விட்டு பிரிஞ்சிடுவீங்க ப்ளீஸ் ஆன்ட்டி இந்த பெயர் வேண்டாம் என்று மறுபடியும் அவர் தோலில் கையை வைத்து உலுக்கவும் வலியில் கத்தினார்.

சத்தத்தை கேட்டு அருகே வந்தவர்கள் சவியை அவரிடம் இருந்து பிரிக்க முயலவும் இன்னும் அழுத்தமாக பற்றிக் கொண்டு சொன்னதையே சொல்லிக் கொண்டு இருக்க அந்த பெண்மனியின் கணவர் இவளை அடிக்கவும் ஆரம்பித்து விட்டார் ....

அவர்களிடம் இருந்து சவியை காப்பாற்ற வாணிக்கு போராட்டமாக இருந்தது.

சவியின் சிவந்த மேனியில் ஆங்காங்கே இரத்தகட்டுகளும் வீக்கம் என இருக்கவும் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை கூட தடுக்காமல்

சவி....சவி... என்று அழைக்கவும் திரு திருவென முழித்தாள்

ஏன்டி இப்படி பண்ண பாருடி எப்படி அடிச்சிருக்காங்க என்றதும்...

அந்த பெயர் வேண்டாம் ...அந்த பெயர் வேண்டாம் ஒன்றை மட்டுமே சொல்லி கொண்டு இருந்தாள்.

ஹேய் இப்படி பண்ணாத உன்னை காப்பாற்ற தான் பைத்தியம் என்று சொல்ல வேண்டியதா போய்ட்டு.... இதுவே என்ன கொல்லுதுடி இப்படி புலம்புறத நிறுத்துமா....

இல்லடி அந்த அம்மாட்ட சொல்லி பெயரை......வாணியின் முறைப்பில் கடற்கரை மணலில் அமர்ந்தவள் முழங்காலை கட்டி கொண்டு அழுதாள்.

சவி ப்ளீஸ் அழாதடி....

எப்படி அழாம இருக்க முடியும் என்ன மாதிரியான தலைமறைவு வாழ்க்கை அந்த பெண்ணுக்கும் கிடைக்க கூடாதுடி ....இந்த நான்காண்டுகளில் அம்மா அப்பா உயிரோட இருக்காங்களா என்று கூட தெரியாமல் வாழுற இந்த வாழ்க்கையை நினைச்சா தாங்க முடியல வாணி என்று அழுதாள்.

வேண்டாம் சவி எல்லாம் சரியாகிவிடும் நீ கவலைப்படாதே

எப்படி சரியாகும் என் ஒருத்திய காப்பாற்ற இரண்டு உயிர் போயிடுச்சே அந்த நினைப்பே என்ன கொல்லுதே
அவங்க உயிர் போக காரணமே நான் தானேடி இப்படி எல்லாரையும் பலி கொடுத்து தான் நான் உயிர் வாழனுமா .....பதில் சொல்லு ஏன் இப்படி முழிக்கிற என்று இதுவரைக்கும் அழுதவள் கோபத்துடன் வீற்றிருக்கும் காளியை போல காட்சியளித்தாள் சவி.....

ப்ளீஸ் என்னோட இந்த கதை பிடித்து இருந்தால் படிங்க குறைகள் இருந்தால் மறக்காமல் சொல்லுங்க.....

Continue Reading

You'll Also Like

160K 5K 30
எல்லா ஆண்மகனின் வாழ்க்கையிலும் ஒரு பெண் இருப்பாள்.... அன்னையாக அக்கா தங்கையாக மனைவியாக தோழியாக... எந்த உறவுமுறையாக இருந்தாலும் அவளே அவனை வழிநடத்துகிற...
457K 15.1K 50
மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படிய...
22.3K 925 25
முதல் திருமணம் தோற்று போக இனி வாழ்க்கையே இல்லை என்று நினைக்கும் நாயகியை கரம் பிடிக்க துடிக்கும் நாயகன்
12.1K 615 23
பேதுவா நம்ம பார்க்கிர படத்துலயும் சரி கேக்குற கதையிலும் சரி எப்பவுமே காதல்னு‌ வரும் போது பெண்கள் தான் அதிகபட்சம் விட்டுட்டு போவாங்ககுர மாதிரி தான் கா...