தூக்கம் விற்று காதல் வாங்கினே...

By NiranjanaNepol

12.5K 1.2K 141

காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவ... More

1 காதல் என்பது...
2 அவள் வருகிறாள்!
3 அம்மாக்களின் விருப்பம்
4 வெறுப்பு வேதாந்தி
5 நினைவுகள்
6 பெண்களை வெறுப்பவனா?
7 உண்மை அன்பு
8 பிடித்தவனுக்காக
9 அவன் மாறி விட்டான்...!
10 நான் ஒட்ட வைப்பேன்
11 ஸ்டேட்டஸ் விளையாட்டு
12 சிறிய வயதில் நண்பன்
13 கசப்பான கடந்த காலம்
14 உடைந்த ஜாடி
15 ஊகத்திற்கு அப்பாற்பட்ட...
16 உண்மையில் நீ யார்?
17 காதல் காப்பாளன்...?
18 எதிர்பாராதது...
19 வேண்டுமென்றே...
20 எதிர்பாராத சம்பந்தம்
21 நடக்க விடமாட்டேன்
22 ஒரு வழியாய்...
24 ஒருவருக்கொருவர்
25 பிடிவாதம்
26 அழகான ராட்சசன்
27 புதியவன்
28 திருமணம்
29 சீண்டல்...
30 தெரியாத அர்னவ்
31 சாக்லேட் கணவன்
32 முடிவுக்கு வந்த சீண்டல்
33 நான் உன்னை காதலிக்கிறேன்

23 குஷியின் மறுப்பு

288 39 4
By NiranjanaNepol

23 குஷியின் மறுப்பு

அரவிந்தனும் ரத்னாவும் கோவிலுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்த அதேநேரம், நந்தாவும் லாவண்யாவும் சினிமாவிற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள், அர்னவ் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதை கொண்டாட. என்றும் இல்லாத அளவிற்கு சந்தோஷத்துடன் இருந்த ரத்னாவைக் கண்ட லாவண்யா,

"யாரோ பயங்கர ஹாப்பியா இருக்கிற மாதிரி தெரியுது???" என்றாள்.

"ஏன் இருக்காது? குஷி தனக்கு மருமகளா வரணுங்குற அவங்க ஆசை நிறைவேற போகுதே..." என்றான் நந்தா.

ஆம் என்று தலையசைத்தாள் லாவண்யா.

"மா, இந்த சந்தோஷத்தை கொண்டாட நாங்க சினிமாவுக்கு போயிட்டு, அப்படியே வெளியில சாப்பிட்டு வரலாம்னு இருக்கோம். எங்களுக்காக வெயிட் பண்ணாதீங்க. நாங்க வர லேட் ஆகும்" என்றான் நந்தா.

"நீங்க கிளம்புங்க. உங்க ப்ரோக்ராம்ல ஏதாவது மாற்றம் இருந்தா சொல்லுங்க, உங்களுக்கும் சேர்த்து டின்னர் சமைச்சு வைக்கிறேன்"

"சரி மா, நாங்க கிளம்பறோம"

"பை..."

அரவிந்தனும் ரத்னாவும் கோவிலுக்கு கிளம்பி சென்றார்கள்.

வீட்டில் யாரும் இல்லாததால் வரவேற்பறையில் அமர்ந்து, டிவியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தான் அர்னவ். அப்பொழுது, அழைப்பு மணியின் ஓசையை கேட்டு சென்று கதவை திறந்தான். அங்கு குஷி நின்று கொண்டிருப்பதை பார்த்து வியந்தான். அவனுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியவில்லை.

"வீட்ல யாரும் இல்ல..." என்றான்.

"அப்படின்னா கதவை திறந்தது யாரு?" என்றாள் சாதாரணமாய்.

"அதுக்கு சொல்லல. நீ அம்மா இல்ல லாவண்யாவை பார்க்கத்தான்..." அவன் முழுதாய் கூறி முடிக்கும் முன்,

"நான் உன்கிட்ட பேச தான் வந்தேன்" என்றாள்.

அவளுக்கு உள்ளே வர வழி கொடுத்து கதவை சாத்தாமல் விட்டான்.

"நீ சொன்னதை வாபஸ் வாங்கிக்கோ" என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.

"நான் சொன்ன எதைப்பத்தி நீ பேசிகிட்டு இருக்கேன்னு எனக்கு புரியல"

அவள் ஏதோ சொல்ல முயல, தன் கையை காட்டி அவளை அமர்த்தி விட்டு,

"நான் ஒரு தடவை சொன்னா சொன்னது தான். அதை திரும்பி வாங்குற பழக்கம் எல்லாம் எனக்கு கிடையாது" என்றான்.

"மத்தவங்களுக்காக ஒண்ணும் நீ என்னை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். உன்னை பத்தி எனக்கு தெரியும்"

"உனக்கு என்னை பத்தி தெரியாது. அப்படி தெரிஞ்சிருந்தா, நான் சொன்னதை வாபஸ் வாங்க சொல்லி நீ நிச்சயம் சொல்லியிருக்க மாட்ட. ஏன்னா, உயிரே போனாலும் நான் அதை செய்ய மாட்டேன்"

"இங்க பாரு, இது ஒன்னும் விளையாட்டு இல்ல... வாழ்க்கை. முரண்பட்ட ரெண்டு பேர் ஒன்னா சேந்து சந்தோஷமா வாழவே முடியாது"

"முரண்பட்ட ரெண்டு பேரா? நீ யாரைப் பத்தி பேசுற?" என்றான் முகத்தை சுருக்கி.

"இதெல்லாம் உனக்கு கிண்டலா தெரியுதா?"

"நான் கிண்டல் பண்றேன்னு நினைக்கிறியா? நீ என்ன சொன்ன, இது விளையாட்டு இல்லன்னு தானே? விளையாட்டோ, வாழ்க்கையோ... என்னை பொறுத்த வரைக்கும் எல்லாத்தையும் ஒரே மாதிரி தான் டீல் பண்ணுவேன்... ரொம்ப சீரியஸா...! விளையாட்டா இருந்தாலும் சரி, வாழ்க்கையா இருந்தாலும் சரி, என்னோட எண்ணமெல்லாம் ஒன்னே ஒன்னு தான்... ஜெயிக்கணும்!"

"அது உன் கூட ஆடுறவங்களையும் பொறுத்த விஷயம். அதை மறந்துடாத"

"நம்ம ரெண்டு பேரும் எதிர்ல நின்னு ஆட போறதில்ல... ஒரே பக்கம் தானே நின்னு ஆட போறோம்"

"அதுக்கு புரிதல் தேவை. அது நம்மகிட்ட கிடையாது"

தன் கைகளை கட்டிக் கொண்ட அவன்,

"தெளிவா சொல்லு, இப்போ உனக்கு என்ன வேணும்?" என்றான்

"எல்லாத்தையும் நிறுத்து... இந்த கல்யாணத்தை நிறுத்து"

"மாட்டேன்" என்றான் தெளிவாய்.

"ஆனா ஏன்?"

"முன்வச்ச காலை பின் வைக்கிறது என் வரலாறுலயே கிடையாது. உனக்கு அதுல சம்மதமா இல்லையான்னு எனக்கு கவலை இல்ல. இந்த கல்யாணத்தை யாராலையும் நிறுத்த முடியாது (என்று சற்று நிறுத்திய அவன்) நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னப்போ, எதுக்காக நீ சும்மா இருந்த? அப்பவே எல்லார்கிட்டயும் சொல்லிட வேண்டியது தானே...? ஏன் அமைதியா இருந்த?" என்றான்.

"உன்னோட திடீர் முடிவு என்னை வாயடைக்க வச்சது. அதனால அமைதியா இருந்தேன். ஆனா இனிமே நான் அப்படி இருக்க மாட்டேன். எனக்கு விருப்பமில்லன்னு எல்லார்கிட்டயும் சொல்ல போறேன்"

"அப்படி செய்யாத குஷி..." என்றான் அமைதியாய்.

"நானும் உன்னை அதையே தான் செய்ய சொல்றேன்... இப்படி செய்யாத. இந்த கல்யாணத்தை நிறுத்து"

"முடியாது"

"ஏன்?"

"எங்க அம்மாவோட விருப்பத்தை நிறைவேத்தணும்னு நான் நினைக்கிறேன். நீ அவங்க மருமகளா வரணும்னு அவங்க எந்த அளவுக்கு விருப்பப்பட்டாங்கன்னு உனக்கு தெரியாது?"

அதைக் கேட்ட அவள் கிண்டலாய்,

"ஓ... அப்படின்னா உங்க அம்மாவோட செல்ல பிள்ளையா அவங்க ஆசையை நிறைவேத்த தான் இதை செய்றியா? உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? இது உங்க அம்மாவோட விருப்பம் இல்ல... உன்னோட விருப்பத்தை பத்தின விஷயம்" என்றாள் எரிச்சலுடன்.

"எனக்குன்னு எந்த விருப்பமும் கிடையாது"

"ஆனா எனக்கு இருக்கு. உங்க அம்மாவுக்கு வேணும் அப்படிங்கறதுக்காக உன்னை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. புரிஞ்சுதா?"

அவள் அங்கிருந்து செல்ல நினைத்தபோது,

"அப்படின்னா, நீ நந்தா மேலையும் லாவண்யா மேலையும் ரொம்ப அக்கறை இருக்கிற மாதிரி காட்டிகிட்டதெல்லாம் பொய் தான?"

பேச்சிழந்து நின்ற குஷி, அவனை திகைப்புடன் பார்த்தாள். தன்னை சமாளித்துக் கொண்டு,

"அவங்களுக்கு என்னை பத்தி நல்லா தெரியும். அவங்க என்னை புரிஞ்சுக்குவாங்க" என்றாள்.

அவள் கூறுவதும் சரி தான். அவன் தன் அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்ற தான் இந்த திருமணம் செய்து கொள்கிறேன் என்று அவர்களுக்கு தெரிந்தால், அவர்கள் நிச்சயம் அவள் பக்கம் தான் நிற்பார்கள்.

"சரி, உனக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லைன்னு போய் சொல்லு"

"எனக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இருக்கு. ஆனா உன்னை கல்யாணம் பண்ணிக்க தான் விருப்பமில்லை, புரிஞ்சுதா?"

அவ்வளவு தான் அவனது கோபத்தை சீண்டி பார்க்க அந்த வார்த்தைகள் போதுமானதாய் இருந்தது. அவனுக்கு தெரியும், அவள் அவன் மீது கோபமாய் இருக்கிறாள் என்று. ஆனால் அதற்காக திருமணத்தை நிறுத்த சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர்.

"நான் இதுவரைக்கும் பொம்பளை பசங்களை பத்தி நினைச்சதெல்லாம் சரி தான். எல்லாருமே செல்ஃபிஷ். நீயும் ஒன்னும்  வித்தியாசமானவ இல்ல. உனக்கு உன்னை பத்தி மட்டும் தான் கவலை. உன்னோட குடும்பம் கவலைப்பட்டா உனக்கு என்ன வந்தது? அவங்களோட வருத்தத்தைப் பத்தியெல்லாம் நீ ஏன் கவலைப்பட போற? அன்னைக்கு என்னமோ எல்லா பொண்ணுங்களும் ஒரே மாதிரியான்னு வாய் கிழிய பேசின? இப்போ என்ன ஆச்சு? நீயும் அதைத் தானே நிரூபிக்கிற? இதுக்கப்புறம் நான் பொம்பளைங்களை பத்தி ஏதாவது பேசும்போது நீ வரிஞ்சு கட்டிக்கிட்டு என்கிட்ட சண்டைக்கு வந்த... நான் சும்மா இருக்க மாட்டேன்"

அவளது முகம் அதிர்ச்சியே வடிவாய் காட்சி அளித்தது. அவன் அங்கிருந்து செல்ல நினைத்தபோது அவன் கையை பிடித்தாள் குஷி.

"நீ உண்மையிலேயே இந்த கல்யாணத்தை உங்க அம்மாவுக்காக மட்டும் தான் பண்ணிக்க நினைக்கிறியா?" அவளது குரலில் நடுக்கம் தெரிந்தது.

அவளை நோக்கி திரும்பிய அவன், கலங்கி இருந்த அவளது கண்களை பார்த்து நிலைகுலைந்தான். தன் மனதில் பட்டதை கூறி விட தனக்கு தைரியம் இல்லாததை எண்ணி தன்னைத்தானே கரித்து கொட்டிக் கொண்டான். தனக்கு பிடித்தால் மட்டும் தான் அவன் எந்த ஒரு காரியத்தையும் செய்வான் என்ற உண்மையை ஏன் அவனால் கூற முடியவில்லை? தனக்கு விருப்பமில்லாத எதையும் அவனது மனதில் யாரும் திணிக்க முடியாது என்பதை அவன் கூறி விடலாம் அல்லவா?

கோவிலுக்கு சென்ற ரத்னாவும் அரவிந்தனும் வீட்டிற்குள் நுழைந்தார்கள். தன் கண்ணீரை துடைத்துக் கொண்டாள் குஷி.

"குஷி நீ இங்க தான் இருக்கியா? உனக்கு சாப்பிட ஏதாவது கொடுக்க சொல்லி கரிமா சொன்னா. இரு நான் உனக்கு ஸ்னாக்ஸ் கொடுக்கிறேன்"

"நான் இங்க எதுக்கு வந்தேன்னா..." என்ற அவளது பேச்சை வெட்டி,

"ஆமா மா, குஷி ரொம்ப பசியோட தான் இருக்கா. அவளுக்கு ஏதாவது கொடுங்க" என்று பேச்சை மாற்றினான் அர்னவ்.

அவனை கோபத்துடன் பார்த்தாள் குஷி. அவனோ சமதள பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான்.

"உங்களுக்கு காபி வேணுமா?" என்றார் ரத்னா அரவிந்தனிடம்

"ஆமாம். ஆனா இப்ப வேண்டாம். முதல்ல நம்ம மருமகளுக்கு சாப்பிட ஏதாவது கொடு" என்று அவர் குஷியை பார்த்து புன்னகைக்க, அவளும் பதிலுக்கு புன்னகைத்தாள். தன் அறைக்கு சென்றார் அரவிந்தன்.

வரும் வழியில் தான் வாங்கி வந்த போளிகளை குஷிக்கு சாப்பிட கொடுத்தார் ரத்னா. அப்பொழுது குஷியின் கைபேசிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அது அர்னவ்விடமிருந்து வந்தது. ஆச்சரியத்துடன் அதை திறந்து படித்தாள்.

*நமது குடும்பம் நல்ல நட்பின் பிணைப்பில் இருக்கிறது. என்னுடைய டர்டி ஈகோவை தூண்டிவிட்டு அதை கெடுத்து விடாதே. உதிர்த்து விட்ட வார்த்தையை காப்பாற்ற நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்* என்று ஆங்கிலத்தில் இருந்தது.

அதை படித்த அவள், கோபத்தின் உச்சிக்கு சென்றால் இவன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்? என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்றால் என்ன அர்த்தம்?

அப்பொழுது அவள் கைப்பேசிக்கு மீண்டும் ஒரு குறுந்தகவல் வந்தது.

*நான் சொன்னால் சொன்னதை செய்வேன்*

தன் பல்லை நரநரவென கடித்தாள். அப்பொழுது மீண்டும் ஒரு செய்தி வந்தது.

*நான் மிகவும் நல்லவனாக இருக்க முயற்சி செய்கிறேன். என்னுடைய மோசமான பக்கத்தை வெளிக்காட்ட எனக்கு காரணத்தை வழங்கிவிடாதே*

தான் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதை அவளாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் மனதில் அவளைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்? சிறிது நாட்களுக்கு முன்பு வரை அவளிடம் பேசக்கூட அவன் தயாராக இல்லை. ஆனால் இன்று, அவளை திருமணம் செய்து கொள்ள சொல்லி மிரட்டும் அளவிற்கு செல்கிறான்? இதில் எமோஷனல் பிளாக் மெயில் வேறு...!

அவளைப் பார்த்த ரத்னாவிற்கு ஏதோ தவறாக நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள ஒன்றும் சிரமமாக இல்லை. தனது கைபேசியை எடுத்து அவளுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் அனுப்பினார். எதையோ யோசித்துக் கொண்டிருந்த குஷி அவர் அனுப்பிய செய்தியை கவனிக்கவில்லை. அவளிடம் வந்து அமர்ந்த அவர்,

"நான் உனக்கு ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கேன், பாரு" என்றார்.

"மெசேஜா?" என்று தன் வாட்ஸ் அப்பை திறந்தாள் அவள்.

*நம் வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகள் ஒவ்வொன்றும் நம்மை உருவாக்கத்தான் வருகிறது. அது நம்மை உடைத்துப் போடப் போகிறதா, அல்லது உருவாக்கப் போகிறதா என்பது நம் கையில் தான் இருக்கிறது. நாம் ஜெயிக்கப் போகிறோமா அல்லது துவண்டு விடப் போகிறோமா என்பது, அதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது*

அவரை பொருள் பொதிந்த பார்வை பார்த்தாள் குஷி.

"நீ உன்னோட பழைய அல்லவ்வை எதிர்பார்க்கிறேன்னு எனக்கு புரியுது. உன்னால அவனைப் பார்க்க முடியல அப்படிங்கறதுக்காக அவன் இல்லவே இல்லன்னு அர்த்தம் இல்ல. தன்னோட உண்மையான பக்கத்தை எப்போ தேவைப்படுதோ அப்போ மட்டும் தான் அவன் காட்டுவான். அன்னைக்கு விக்னேஷை போட்டு அடிச்சானே, அந்த மாதிரி"

அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தாள் குஷி.

"சில காரணங்களுக்காக அவன் தன்னோட மனசை பூட்டி வச்சிருக்கான். அதை நீ தான் உன்னோட அன்புங்கற சாவியால திறக்கணும். அப்போ தான் அவன் உனக்காக எவ்வளவு அன்பை மனசுல தேக்கி வச்சிருக்கான்னு உன்னால புரிஞ்சுக்க முடியும்"

"ஆனா என்னை பிடிச்சிருக்குன்னு அவன் ஏன் சொல்ல மாட்டேங்கிறான்?"

"அவன் அப்படித்தான் டா கண்ணா... நான் சமைச்ச சாப்பாடு நல்லா இருக்குன்னு சொல்ல மாட்டான். ஆனா, அவன் சாப்பிடுற அளவை வச்சு அது அவனுக்கு எவ்வளவு பிடிச்சிருக்குன்னு நான் புரிஞ்சுக்குவேன். அது தான் அவன். அதுக்காக நீ வருத்தப்படாத"

தன் முகத்தை உம் என்று வைத்துக் கொண்டாள்.

"ஆனா ஒரே ஒரு விஷயத்தை என்னால் உறுதியாக சொல்ல முடியும். தனக்கு பிடிக்காத எதையும் அவன் செய்ய மாட்டான். ஆனா அதே நேரம் அவனுக்கு பிடிச்சிட்டா அதை செய்யாம அவனை யாராலும் தடுக்க முடியாது... எத்தனை பேர் எதிர்த்தாலும் சரி. அதை நீயே சீக்கிரம் புரிஞ்சுக்குவ"

"ஆனா அவன் என்கிட்ட வாயை திறந்து சொல்ற வரைக்கும் நான் அவனை ஏத்துக்க மாட்டேன்"

"நானும் கரிமாவும் இந்த கல்யாணம் நடக்கணும்னு எந்த அளவுக்கு ஆசைப்படுறோம்னு உனக்கு தெரியாதா? எனக்கு மருமகளா வர போறேன்னு உனக்கு சந்தோஷமா இல்லையா?"

"அந்த ஒரே ஒரு காரணத்துக்காக தான் இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சிருக்கேன். இல்லன்னா இந்த பாவக்காயை யார் கல்யாணம் பண்ணிக்குவா?" என்றாள் தன் பல்லை கடித்தபடி கோபத்துடன்.

"நெஜமாவா.... எனக்காக தான் நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சியா?" என்றார் கிண்டலாய்.

ஆமாம் என்று தலையசைத்தாள் தன் சிரிப்பை அடக்கியபடி.

"லையர்..." என்று அவள் கன்னத்தை கிள்ளினார் ரத்னா.

அவர்கள் இருவரும் வாய்விட்டு சிரித்தார்கள். அவர்களது சிரிப்பொலி, தன் அறையில் இருந்து அர்னவ்வை வெளியே இட்டு வந்தது. அவர்களுக்குள் இருந்த பிணைப்பு, அவனை தன்னை மறந்து அவர்களை ரசிக்கச் செய்தது.

தொடரும்...











Continue Reading

You'll Also Like

51.1K 3.2K 43
This is Tamil translation of my story Voice of Silence
59.1K 4.1K 70
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தன...
45K 1.5K 35
உதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கான ஒற்றை பார்வையாலும் எதிரிகளின் சாம்ராஜ்...
14.7K 631 29
இந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் பறிமாற்றங்கள் மற்றும் குழந்தையில்லா தம்பத...