தூக்கம் விற்று காதல் வாங்கினே...

By NiranjanaNepol

12.5K 1.2K 141

காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவ... More

1 காதல் என்பது...
2 அவள் வருகிறாள்!
3 அம்மாக்களின் விருப்பம்
4 வெறுப்பு வேதாந்தி
5 நினைவுகள்
6 பெண்களை வெறுப்பவனா?
7 உண்மை அன்பு
8 பிடித்தவனுக்காக
9 அவன் மாறி விட்டான்...!
10 நான் ஒட்ட வைப்பேன்
11 ஸ்டேட்டஸ் விளையாட்டு
12 சிறிய வயதில் நண்பன்
13 கசப்பான கடந்த காலம்
14 உடைந்த ஜாடி
15 ஊகத்திற்கு அப்பாற்பட்ட...
16 உண்மையில் நீ யார்?
17 காதல் காப்பாளன்...?
19 வேண்டுமென்றே...
20 எதிர்பாராத சம்பந்தம்
21 நடக்க விடமாட்டேன்
22 ஒரு வழியாய்...
23 குஷியின் மறுப்பு
24 ஒருவருக்கொருவர்
25 பிடிவாதம்
26 அழகான ராட்சசன்
27 புதியவன்
28 திருமணம்
29 சீண்டல்...
30 தெரியாத அர்னவ்
31 சாக்லேட் கணவன்
32 முடிவுக்கு வந்த சீண்டல்
33 நான் உன்னை காதலிக்கிறேன்

18 எதிர்பாராதது...

301 36 5
By NiranjanaNepol

18 எதிர்பாராதது...

புதுமண தம்பதியரை ஆலம் சுற்றி வரவேற்றார் ரத்னா. வலது காலை வைத்து தன் மாமியார் வீட்டினுள் நுழைந்தாள் லாவண்யா.

கரிமாவிடம் ஒரு டம்ளர் பாலையும் ஒரு வாழைப்பழத்தையும் கொடுத்து, புதுமண தம்பதியருக்கு கொடுக்கச் செய்தார் ரத்னா. அது, அத்தை முறை உள்ளவர்களால் கொடுக்கப்பட வேண்டும் என்பதால்...! வாழைப்பழத்தையும், பாலையும் இருவரையும் பகிர்ந்து கொள்ள செய்தார் கரிமா, அவர்களது வாழ்க்கையில், இனி அனைத்தையும் அவர்கள் இருவரும் பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை குறிக்கும் வண்ணம்.

ஜோசியரின் வருகைக்காக பெரியவர்கள் காத்திருந்தார்கள். அவர்களுடைய திருமண வரவேற்பு தேதியையும், முதலிரவு தேதியையும் முடிவு செய்வதற்காகவும். அருகில் இருந்த அறையில் மணமக்கள் இருக்கவைக்கப்பட்டார்கள். எல்லாம் அவசர அடியில் நடந்ததால், மிகவும் பரபரப்பாய் காணப்பட்டார் ரத்னா.

"கடவுளே! என்ன செய்யறதுன்னு தெரியலையே...! சாப்பாடு வேற செய்யணும்..."

"ஏன் டென்ஷன் ஆகிற ரத்னா? நான் தான் இருக்கேன் இல்ல?"

"சரி, நானும், கரிமாவும் சாப்பாடு செய்யுறோம். அதுவரைக்கும், நந்து நீ உன்னோட ரூமுக்கு போ... குஷி, நீ லாவண்யா கூட இரு. சரியா?"

"சரிங்க ஆன்ட்டி" என்றாள் தன் சிரிப்பை அடக்கியபடி.

வெட்கத்துடன் தலை சொறிந்தான் நந்தா.

"ஐயோ பாவம்...! கவலைப்படாதே, இதெல்லாம் ராத்திரி வரைக்கும் தான். அதுக்கப்புறம்... அஹம் அஹம்..." லாவண்யாவின் காதில் கூறி இருமினாள் குஷி.

லாவண்யா அதற்கு ரியாக் செய்யாமல் இருந்ததை பார்த்து அவள் குழப்பமுற்றாள். ரத்னாவின் கரத்தைப் பற்றிய லாவண்யா,

"அம்மா..." என்றாள்.

அவள் தன்னை அம்மா என்று அழைத்ததை கேட்டு உணர்ச்சிவசப்பட்ட ரத்னா,

"சொல்லுடா" என்றார்.

"நான் நந்து கிட்ட கொஞ்சம் பேசணும்னு. உங்க பர்மிஷன் கிடைக்குமா?"

சரி என்று புன்னகையுடன் தலையசைத்த ரத்னா, குஷி மற்றும் கரிமாவுடன் அங்கிருந்து சென்றார். குஷியை தன்னுடன் சமையலறைக்கு இழுத்துச் சென்றார் கரிமா.

"நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் நந்து"

"நானும் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றான் நந்தா.

..............

சற்று நேரத்தில் அங்கு வந்தார் ஜோசியர். தன் அறைக்கு சென்றான் அர்னவ். அது பெரியவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால். குஷியும் தன் வீட்டிற்கு சென்றாள்.

"வர்ற ஞாயிற்றுக்கிழமை நாள் நல்லா இருக்கு. அன்னைக்கு ரிசப்ஷனை வச்சுக்கோங்க. சாந்தி முகூர்த்தத்துக்கு இன்னிக்கு நாள் நல்லா இருக்கு. ஆனா ராத்திரி 9:50க்கு மேல..."

"ரொம்ப நன்றி ஜோசியரே!" என்றார் அரவிந்தன்.

"நான் அர்னவ்கிட்ட சொல்லி உங்களை டிரா பண்ண சொல்லட்டுமா?" என்றார் ரத்னா.

"இல்லமா... வேண்டாம்... நான் பைக்ல தான் வந்தேன். நானே போய்டுவேன்"

அவர்கள் ஜோசியரை வழி அனுப்பினார்கள்.

"நான் ஒரு நல்ல மேரேஜ் அசம்பிளரை கூப்பிட்டு, இன்னிக்கி ராத்திரிக்கு செய்ய வேண்டிய அரேஞ்ச்மெண்ட்ஸையும், ரிசப்ஷனையும் செஞ்சிட சொல்றேன்"

சரி என்று தலையசைத்தார் ரத்னா.  அப்போது நந்தாவும் லாவண்யாவும் வெளியே வந்தார்கள்.

"நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்றான் நந்தா.

"சொல்லு நந்து"

"எனக்கு மூத்த அண்ணன் இருக்கும்போது, நான் முதல்ல கல்யாணம் பண்ணியிருக்க கூடாது. ஆனா, சூழ்நிலை அப்படி நடக்கும்படி ஆயிடுச்சு. ஐ அம் சாரிப்பா..."

"நீ எந்த சூழ்நிலையில கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு எங்களுக்கு தெரியாதா? அதைக் கூடவா எங்களால புரிஞ்சுக்க முடியாது?"

"அப்பா சொல்றது சரி தான். நீ அதுக்காக வருத்தப்படாதே. எங்களுக்கு உன்னை பத்தி தெரியும்" என்றார் ரத்னா.

"தேங்க்யூ மா. ஆனா, நாங்க செல்ஃபிஷா இருக்க விரும்பல. அதனால..."

"அதனால?"

"ரிசப்ஷன் சண்டே நடக்கட்டும். ஆனா நாங்க சாந்தி முகூர்த்தத்துக்கு தயார் இல்லை...!"

"என்னடா சொல்ற நீ?" என்றார் ரத்னா அதிர்ச்சியுடன்.

"ஆமா மா. நாங்க அருவுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் வெயிட் பண்றோம்"

அரவிந்தனும் ரத்னாவும் வாயடைத்து போனார்கள். அவர்களுக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை. வார்த்தைகள் அவர்கள் தொண்டையில் இருந்து வெளிவர மறுத்தது.

அப்பொழுது அங்கு வந்த அர்னவ்,

"உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? இது சுத்த பைத்தியக்காரத்தனம்...! நீ உன் புத்தியோடு தான் பேசுறியா? நான் எந்த நிலைமையில இருக்கேன்னு உனக்கு தெரியாதா? எதுக்காக இப்படி பண்ற, நந்து?" என்றான் பல்லை கடித்துக் கொண்டு.

"எனக்கு தெரியும் அரு. உனக்கு முன்னாடி நான் கல்யாணமே பண்ணியிருக்க கூடாது. அதனால நான் இப்போ இதை செய்யணும்னு நினைக்கிறேன்"

"உனக்கு என்ன கிறுக்கா? எனக்கு கல்யாணம் பண்ணிக்கனும்னு எண்ணமே கிடையாது. அது உனக்கு தெரியாதா?"

"தெரியும். அதனால தான் நான் இதை செய்றேன். எனக்காகவாவது நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைப்பல்ல?"

"நீ இவ்வளவு சுயநலவாதியா இருக்காத. உன் ஒய்ஃபை பத்தி யோசிச்சி பாரு"

"என்னோட முடிவும் அது தான் அண்ணா" என்ற லாவண்யாவை பார்த்து முகம் சுருக்கினான் அர்னவ்.

"இதைப்பத்தி நீங்க எல்லாரும் என்ன நினைக்கிறீங்கன்னு எங்களுக்கு கவலை இல்ல. ஆனா, இது தான் எங்களுடைய இறுதியான முடிவு. உங்களுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் நாங்க காத்திருக்க தான் போறோம். என்ன ஆனாலும் சரி... இது எனக்கு ஃபைனல் இயர். நான் முதல்ல அதை முடிக்கிறேன்"

அர்னவ், அரவிந்தன், ரத்னா, கரிமா அனைவரும் மலைத்து நின்றார்கள், லாவண்யாவை அவளது முதல் இரவு குறித்து கிண்டல் செய்வதற்காக அங்கு வந்த குஷியையும் சேர்த்து.

"நீங்க ரெண்டு பேரும் தயவு செய்து இந்த விஷயத்தை எங்ககிட்ட விட்டுடுங்க. அருவோட கல்யாணத்துக்கு நாளாகும். இந்த விஷயத்துல நீங்க ரெண்டு பேரும் தலையிடாதீங்க. உங்களுக்கு கல்யாணம் ஆனதுல எங்களுக்கு எந்த வருத்தமும் இல்ல. தயவு செஞ்சி புரிஞ்சுக்கோங்க" என்றார் ரத்னா.

"அம்மா, தயவு செஞ்சி நீங்க புரிஞ்சுக்கோங்க. நாங்க முடிவு பண்ணிட்டோம். அதுல எங்களுக்கு எந்த வருத்தமும் இல்ல" என்றாள் லாவண்யா உறுதியோடு.

விரக்தி பெருமூச்சுவிட்டு திரும்பிய அர்னவ், அவனையே முறைத்து பார்த்துக் கொண்டு நின்ற குஷியை பார்த்தான். ஏனோ, அவள் மீது தன் கண்களை அகற்ற வேண்டும் என்று அவனுக்கு தோன்றவில்லை. அவனுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில், குஷியும் அவனை ஊன்றி பார்த்த வண்ணம் நின்றாள். நந்தா மற்றும் லாவண்யாவின் முடிவு அவளுக்கு சிறிதும் பிடிக்கவில்லை. அர்னவ்வாவது திருமணம் செய்து கொள்வதாவது...! அப்படி என்றால் இவர்கள் இருவரும் இணைய வாய்ப்பே இல்லை.

"நான் கெஸ்ட் ரூம்ல தங்கிக்குறேன்" என்ற லாவன்யா, மேலும் அங்கு நிற்காமல், விருந்தினர் அறையை நோக்கி நடந்தாள்,  அன்றிலிருந்து அவளது அறையாய் ஆகப் போகும் அந்த அறைக்கு.

"அம்மா, எனக்கு ரொம்ப பசிக்குது. நான் காலையில ஒழுங்கா சாப்பிடலன்னு உங்களுக்கு தெரியும்ல?" என்றான் நந்தா.

அவன் தலையில் கை வைத்து, ஆம் என்று தலையசைத்தார் ரத்னா. சமையல் வேலையை கவனிக்க அவர் சமையலறையை நோக்கி நடக்க, அவரை பின்தொடர்ந்தார் கரிமா.

என்ன செய்வது என்று புரியாமல் அங்கே அமர்ந்தான் அர்னவ். அவனால் நந்தாவை சுலபமாய் சமாளித்துவிட முடியும். ஆனால் தன் முடிவில் உறுதியாக இருக்கும் லாவண்யாவிடம் அவன் இந்த விஷயத்தை பற்றி எப்படி பேசுவது?

விருந்தினர் அறை

லாவண்யாவின் கையை பற்றி, அவளை நகர விடாமல் தடுத்தாள் குஷி.

"என்ன லாவண்யா இதெல்லாம்? என்ன முடிவு பண்ணி வச்சிருக்கீங்க நீங்க ரெண்டு பேரும்? அவனுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் நீங்க காத்திருக்கணும்னா, இந்த ஜென்மத்துல நீங்க ரெண்டு பேரும் ஒன்னா வாழவே முடியாது. உங்களுக்கு தெரியாதா அர்னவ்வை பத்தி?"

"தெரியாது குஷி. நம்ம யாருக்குமே அவரைப் பத்தி தெரியல. இன்னைக்கு நடந்த விஷயம் தான் அதுக்கு உதாரணம். இன்னைக்கு நம்ம பார்த்த அர்னவ், நம்ம யாருக்குமே தெரியாதவர். நந்து மேல அவருக்கு நிறைய அக்கறை இருக்கு. அவன் மேல அவர் ரொம்ப பாசம் வச்சிருக்கார். எங்களுக்காக, எங்க கூட அவர் நின்னாரு. எவ்வளவு சிக்கலான விஷயத்தை எவ்வளவு சாதாரணமாக முடிச்சாரு...! அதனால அவர் சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்குவாருன்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு"

"எனக்கு என்னமோ அது நடக்கும்னு தோணல"

"அவர் தன் மனசுல இருக்கிறத வெளியில காட்டிகிறதில்ல. அதுக்காக அவருக்கு நம்ம மேல அக்கறை இல்லன்னு அர்த்தமில்ல. அதைப்பத்தி உன்னைவிட வேற யாருக்கு அதிகமா தெரிய போகுது?"

"நீ ரொம்ப ஓவர் கான்ஃபிடன்ட்டா இருக்க" என்றாள் எங்கோ பார்த்தபடி.

"அப்படியே இருக்கட்டுமே..."

"நீங்க ரெண்டு பேரும் இடியட்ஸ்" வருத்தத்துடன் அவள் அங்கிருந்து செல்ல முயன்ற போது, அவளது கையைப் பிடித்து நிறுத்தினாள் லாவண்யா.

"தயாராகு குஷி..."

"எதுக்கு?" என்றாள் முகத்தை சுருக்கி.

"அர்னவ் அண்ணனை கல்யாணம் பண்ணிக்க..." என்றாள் ரகசியமாய்.

குஷியின் விழிகள் அகலமாயின.

"என்ன உளர்ற?" என்றாள்.

"நான் உளருறேனா? அப்படியா? நாங்க ஓவர் கான்ஃபிடன்ட்டா இருக்கோம் தான். ஏன்னா, எங்களுக்கு தெரியும், உன்னோட அழகுக்கு முன்னாடி அவரால ரொம்ப நாள் தாக்கு பிடிக்க முடியாது"

அவளது கரங்கள் நடுங்குவதை உணர்ந்தாள் லாவண்யா.

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல" என்றாள் தடுமாற்றத்துடன்.

"அது அப்படித்தான்னு உனக்கே நல்லா தெரியும். ப்ளீஸ் எங்களை ரொம்ப நாள் காக்க வைக்காதே" என்று சிரித்தாள் லாவன்யா.

அவள் கையை உதறிவிட்டு வெளியே ஓடினாள் குஷி. அப்பொழுது அவர்களது அறையை கடந்த அர்னவ் மீது மோதிக்கொண்டாள். அவள் கீழே விழுந்து விடாமல், அவளது இடையே சுற்றி வளைத்து, தன்னை நோக்கி இழுத்துக் கொண்டான் அர்னவ். ஒருவர் கண்களில் மற்றவர் தொலைந்து போனார்கள்.

குஷியை பின் தொடர்ந்து வெளியே வந்த லாவண்யா, அந்த காட்சியை பார்த்து வந்த சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு, அவர்களை தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து சென்றாள்.

தன் சுயநினைவை அடைந்த குஷி, லாவண்யாவின் அறையை ஏறிட்டாள். அவள் அங்கு இல்லாததை பார்த்து நிம்மதி அடைந்தாள். அவன் கையில் இருந்து அவள் வெளிவர முயன்றது நடக்கவில்லை. அவனது பிடி சற்று இறுக்கமாகவே இருந்தது. அவனும் தன்னை மறந்து நின்றான்.

"அர்னவ், என்னை விடு" என்று அவனை அவள் பிடித்து தள்ள, சுயநினைவு பெற்றான் அவன்.

"கேர்ஃபுல்லா இரு" என்று அவளை தன் கையில் இருந்து விடுவித்தான்.

அங்கிருந்து விடுவிடுவென்று சென்றாள் குஷி. சிறிது நேரம் தனியாக இருக்க வேண்டும் என்று எண்ணினாள் அவள். அவளது திருமணத்தைப் பற்றி லாவண்யா பேசியது அவளுக்கு பதற்றத்தை தந்தது. அது போதாதென்று, அர்னவ் அவளைப் பார்த்த விதம் வேறு அவளது மூளையை குடைந்தது. வேகமாய் துடித்த தனது இதயத்தை கட்டுப்படுத்திக் கொள்ள, தன் கண்களை இறுக்கமாய் மூடினாள். எதற்காக அவன் அவளை அப்படி விழுங்குபவன் போல் பார்த்தான்? ஏன் அவன் அவளுக்குள் தொலைந்து போனான்? அவனது மனதில் என்ன தான் இருக்கிறது? லாவண்யா கூறியது போல் அவளை மணக்க அவன் ஒப்புக் கொள்வானா? கட்டிலில் படுத்து போர்வையால் தன்னை போர்த்திக் கொண்டாள்.

........

ரத்னாவும் கரிமாவும் சமையலை முடித்தார்கள்.

"கரிமா, குஷியை சாப்பிட கூப்பிடு. நான் எல்லாத்தையும் டேபிளில் எடுத்து வைக்கிறேன்"

"சரி, நானும் ஒரு பத்து நிமிஷத்துல குளிச்சிட்டு வந்துடுறேன்"

"சீக்கிரம் வா"

சரி என்று தலையசைத்தபடி அங்கிருந்து சென்றார் கரிமா.

சமைத்த உணவை உணவு மேசையில் கொண்டு வந்து வைத்தார் ரத்னா. அனைவரும் உணவு மேசையில் கூடினார்கள். ஆனால் ஒருவரும் எதுவும் பேசவில்லை. அமைதியாய் சாப்பிட்டார்கள். அதை உணர்ந்த கரிமா பேச துவங்கினார்.

"ரத்னா, ரிசப்ஷனுக்கு என்ன பிளான் வச்சிருக்க? நமக்கு நிறைய வேலை இருக்கு. லாவண்யாவுக்கு டிரஸ் எல்லாம் எடுக்கணும்"

"நம்ம நாளைக்கு ஷாப்பிங்கை முடிச்சிடலாம்" என்ற ரத்னா, அரவிந்தனை பார்த்து,

"நாளைக்கு நீங்க ஃப்ரீயா?" என்றார்.

"தேவைப்பட்டா, லீவ் எடுத்துக்கலாம்"

"குஷி, நீ எங்க கூட வருவியா? இல்ல காலேஜுக்கு போவியா?" என்றார் கரிமா.

"அது எப்படி அவ காலேஜுக்கு போவா? அவ என்னோட தான் இருப்பா" என்றாள் லாவண்யா.

"இல்ல லாவண்யா, அஞ்சலி மேடம் நாளைக்கு என்னை காலேஜுக்கு வர சொல்லி இருக்காங்க, என்னோட ப்ராஜெக்ட் பத்தி டிஸ்கஸ் பண்ண"

லாவண்யாவின் முகம் வாடிப்போனது. குஷி தன்னை பார்ப்பதை அறவே தவிர்த்ததை கவனித்தான் அர்னவ்.

"நீங்க எல்லாரும் லாவண்யா, நந்துவோட முடிவை நினச்சு அப்சட்டா இருக்கீங்கன்னு எனக்கு தெரியும். ஆனா அவங்க நம்மகிட்ட அதை பத்தி சொல்லிட்டாங்களே, அதுக்காக நம்ம சந்தோஷப்படணும். ஒருவேளை அதை அவங்க ரகசியமா வச்சிருந்தா என்ன ஆகும்? அவங்க சந்தோஷமா இருக்கிறதா நெனச்சுக்கிட்டு, நம்ம பாட்டுக்கு நம்ம வேலையை பார்த்துகிட்டு இருந்திருப்போம். லாவண்யா படிச்சுக்கிட்டு இருக்கா. இந்த வருஷம் அவளோட படிப்பு முடியுது. அதுவரைக்கும் அவளுக்கு டைம் கொடுங்க. ஏன்னா, எது வேணா, எப்ப வேணா மாறலாம். இன்னைக்கு நந்தாவும், லாவண்யாவும் கல்யாணம் பண்ணிக்குவாங்கன்னு நம்ம யாருமே எதிர்பார்க்கல. சில மணி நேரத்துல நம்ம குடும்பத்தோட ஒட்டுமொத்த அமைப்பும் மாறிப் போயிடுச்சு. நம்ம குடும்பத்துக்கு ஒரு புது உறவு வந்திருக்கு. அதனால சந்தோஷமா இருங்க. கொஞ்சம் டைம் கொடுங்க. எல்லாம் சரியாயிடும்" என்றார் கரிமா.

அப்பொழுதும் எல்லோரும் அமைதியாக தான் இருந்தார்கள் ஆனால் அவர்களது முகபாவங்கள் மாறின... அர்னவ் ஒருவனைத் தவிர...! தனக்காக நந்தாவும் லாவண்யாவும் எடுத்த முடிவை அவனால் சாதாரணமாய் எடுத்துக் கொள்ள முடியவில்லை.

சாப்பிட்டு முடித்த பிறகு ரத்னாவின் அறைக்கு வந்தான் அர்னவ். அவன் மனதில் இருந்த வேதனை அவனது முகத்தில் பிரதிபலித்தது.

"நீ வருத்தப்படாத அரு..."

"எப்படிம்மா வருத்தப்படாம இருக்கிறது?"

"எனக்கு புரியுது. ஆனா இதுல நம்ம என்ன செய்ய முடியும்? இது அவங்களோட முடிவு. கரிமா சொன்னது சரி தான். அட்லீஸ்ட், அவங்க நம்மகிட்ட அவங்க முடிவை சொல்லவாவது செஞ்சாங்களே...!"

"அவங்க எனக்காக இப்படி இருக்காங்கன்னு நினைக்கும் போது என்னால அதை பொறுத்துக்க முடியல, மா"

"ஆனா, அது உன்னை மீறின விஷயம் ஒன்னும் இல்லையே...!"

"என்னம்மா சொல்றீங்க?"

"கல்யாணம் பண்ணிக்கோ..."

"என்னம்மா நீங்க...?" என்றான் சலிப்புடன்.

"இந்த பிரச்சனைக்கு இது ஒன்னு தான் தீர்வு"

இயலாமையுடன் கண்களை மூடினான் அர்னவ். அவனை சோபாவின் அமர வைத்து, தானும் அவன் பக்கத்தில் அமர்ந்தார் ரத்னா.

"வருத்தப்படாத. எல்லாம் சரியாயிடும். கொஞ்சம் டைம் கொடு"

சரி என்று தலையசைத்த அவன்,

"மா..." என்றான்.

"சொல்லு அரு"

"நந்தா லாவண்யாவை காதலிக்கிற விஷயம் உங்களுக்கு ரொம்ப நாளைக்கு முன்னாடியே தெரியும் தானே?"

"ஆமாம், குஷி தான் எனக்கு சொன்னா"

"அப்புறம் எதுக்காக மா குஷியை கல்யாணம் பண்ணிக்க சொல்லி நந்தா கிட்ட சொன்னீங்க?"

சிரித்து விடாமல் இருக்க படாத பாடுபட்டார் ரத்னா.

"அதனால தான் சொன்னேன்...! அவன் என்கிட்ட லாவண்யாவை பத்தி சொல்லுவான்னு நினைச்சேன். ஆனா அவன் என்னை ஏமாத்திட்டான் (என்றார் முகத்தில் ஏமாற்றத்தை காட்டி) பாரு இவ்வளவு ஃபிரண்ட்லியான அம்மாவா இருந்து என்ன பிரயோஜனம்? என் பிள்ளை அவன் மனசுல இருக்கிறதை என்கிட்ட சொல்லவே தயங்குறான் ( என்றபடி அவன் முகத்தை கவனித்தார்) நந்தாவும் உன்னை மாதிரி இருந்திருக்கலாம்... எனக்கு தெரியும், நீயும் குஷியை மாதிரி எதையும் என்கிட்ட மறைக்க மாட்ட"

தன் அம்மாவின் முன் சங்கடத்தில் நெளிந்தான் அர்னவ். அவனது உணர்வுகள் குறித்து அவனுக்கே தெளிவில்லாத பொழுது, அவன் தன் அம்மாவிடம் என்ன கூற முடியும்? போதாத குறைக்கு இந்த குஷி வேறு எப்பொழுது பார்த்தாலும் அவனுடன் சண்டையிடுவதிலேயே குறியாக இருக்கிறாள். பிறகு அவன் என்ன தான் செய்வது? எப்படி செய்வது?

ஆனால் நமக்கு ஒரு விஷயம் தான் புரியவில்லை. இப்பொழுது அவன் எதற்காக குஷியை பற்றி யோசித்தான்? அவனது திருமணத்திற்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்? விரைவிலேயே அதற்க்கான பதில் கிடைக்கும்...!

தொடரும்...

Continue Reading

You'll Also Like

70.8K 2.7K 30
This is the translated version of my story YOU ARE MY EVERYTHING with a few changes, according to Tamil background. I'm doing this for my friends and...
153K 4.9K 87
This Fanfiction was initially posted in my Instagram account under ID : kmfanfic_forfun between 2/10 - 7/12/19.
45K 1.5K 35
உதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கான ஒற்றை பார்வையாலும் எதிரிகளின் சாம்ராஜ்...
8.8K 305 22
ஆயிரம் அறிவுரைகள், ஆதரவு கரங்கள் நீண்டாலும் காதலாய் அவன் பார்க்கும் அந்த ஒரு பார்வைக்காக ஏங்கி தவித்தவள் கண்ணீர் கன்னத்தை தொட, அவள் கணவன் கையை கொஞ்சம...