தூக்கம் விற்று காதல் வாங்கினே...

NiranjanaNepol tarafından

12.7K 1.2K 143

காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவ... Daha Fazla

1 காதல் என்பது...
2 அவள் வருகிறாள்!
3 அம்மாக்களின் விருப்பம்
5 நினைவுகள்
6 பெண்களை வெறுப்பவனா?
7 உண்மை அன்பு
8 பிடித்தவனுக்காக
9 அவன் மாறி விட்டான்...!
10 நான் ஒட்ட வைப்பேன்
11 ஸ்டேட்டஸ் விளையாட்டு
12 சிறிய வயதில் நண்பன்
13 கசப்பான கடந்த காலம்
14 உடைந்த ஜாடி
15 ஊகத்திற்கு அப்பாற்பட்ட...
16 உண்மையில் நீ யார்?
17 காதல் காப்பாளன்...?
18 எதிர்பாராதது...
19 வேண்டுமென்றே...
20 எதிர்பாராத சம்பந்தம்
21 நடக்க விடமாட்டேன்
22 ஒரு வழியாய்...
23 குஷியின் மறுப்பு
24 ஒருவருக்கொருவர்
25 பிடிவாதம்
26 அழகான ராட்சசன்
27 புதியவன்
28 திருமணம்
29 சீண்டல்...
30 தெரியாத அர்னவ்
31 சாக்லேட் கணவன்
32 முடிவுக்கு வந்த சீண்டல்
33 நான் உன்னை காதலிக்கிறேன்

4 வெறுப்பு வேதாந்தி

352 39 3
NiranjanaNepol tarafından

4 வெறுப்பு வேதாந்தி

காலை முதல் கொண்டே மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டான் அர்னவ். இன்று குஷி வர போகிறாள். இன்னும் ஒரு மணி நேரத்தில் அவள் அவன் வீட்டுக்கு வந்துவிடலாம்...! சில நிமிடத்திற்கு முன்பு தான் அரவிந்தன் ரத்னாவுக்கு ஃபோன் செய்து, அவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்து விட்டதாக கூறினார். அவர்கள் வீடு வந்து சேர அதிக நேரம் பிடிக்காது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் போக்குவரத்து நெரிசல் இருக்காது.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு,

கார் ஹாரன் சத்தம் கேட்ட அர்னவ், தனது அறையில் இருந்த சாளரத்தின் திரைசீலையை லேசாய் விலக்கி, வெளியே எட்டிப் பார்த்தான். அரவிந்தன் காரை விட்டு கீழே இறங்கினார். அவரை பின்தொடர்ந்து, ஷஷியும், கரிமாவும் இறங்கினார்கள். அவர்கள் கொஞ்சம் கூட மாறவே இல்லை. மிகவும் ஸ்மார்ட் ஆக இருந்தார் ஷஷி. அவர் இந்திய கடற்படையின் அதிகாரி ஆயிற்றே...! கரிமா முன்பு இருந்ததைவிட ஸ்டைலாக இருந்தார். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வேகமாய் அவனது இதயம் துடித்தது, அரவிந்தன் காரின் பின் கதவை திறந்த போது. "யூ" கட் செய்யப்பட்டு, விரித்து விடப்பட்ட கூந்தலுடன் ஒரு பெண் காரை விட்டு இறங்கினாள். அவ்வளவு நேரம் தாறுமாறாய் துடித்துக் கொண்டிருந்த அவனது இதயம், சில நொடிகள் துடிக்க மறந்தது. அவள் மீதிருந்து விழிகளை அகற்ற முடியாத அளவிற்கு அழகாய் இருந்தாள் குஷி.

அப்பொழுது ரத்னா அவனை கீழே வரச் சொல்லி அழைப்பதை கேட்டான் அர்னவ். நீண்ட மூச்சை இழுத்து விட்டு தரைதளம் சென்றான்.

அவர்களது பேச்சு இயல்பாய் ஹிந்தியில் துவங்கியது.

"என் பொம்மை செல்லம் எப்படி இருக்கு?" என்றார் ரத்னா குஷியை பார்த்து சந்தோஷமாய்.

"உங்களை பார்க்காம பேட்டரி இல்லாத பொம்மையா இருந்தது. இப்போ உங்கள பார்த்த பிறகு சார்ஜ் ஏறிடுச்சு" என்று சிரித்தாள் குஷி.

"ஹாய் குஷி" என்றான் நந்து கிஷோர்.

"ஹாய், ஃபோட்டோஸ்ல இருந்ததைவிட நேர்ல ஸ்மார்ட்டா இருக்க" என்றாள் தன் கையை அவனை நோக்கி நீட்டியபடி.

"ஓஓஓஓ... தேங்க்யூ" என்று அவளுடன் சம்பிரதாயமாய் கை குலுக்கினான் நந்து கிஷோர்.

அவர்களது நெருக்கத்தை பார்த்து அமைதியாய் நின்றான் அர்னவ். அவனை ஒரு முறை கூட குஷி திரும்பி பார்க்காமல் இருந்தது அவனுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

குஷி இங்கும் அங்கும் தேடினாள்.

"நீ என்ன தேடுற குஷி?" என்றார் ரத்னா.

"யாரை தேடுறேன்னு கேளுங்க"

"சரி, யாரை தேடுற?"

"வேற யார? அல்லவை தான்"

உள்ளூர சிரித்தபடி நின்றிருந்த அவனை அனைவரும் திரும்பி பார்த்தார்கள். அவள் இன்னும் கூட அவனை அல்லவ் என்று அழைப்பதை மாற்றவில்லையா?

"குஷி, உனக்கு அர்னவை அடையாளம் தெரியலையா?" என்றான் நந்து கிஷோர்.

"அடையாளமா? அவன் எங்க இருக்கான்" என்றாள் அர்னவைப் பார்க்காமல்.

ரத்னாவும், நந்து கிஷோரும் தங்கள் ஆள்காட்டி விரலை அர்னவை நோக்கி நீட்டினார்கள். அவனைப் பார்த்து விழி விரித்தாள் குஷி.

"இவனா? இவனா அல்லவ்?" என்றபடி அவன் அருகில் வந்த அவள், அவன் முகவாய் கட்டை பற்றி, அவன் முகத்தை இடது புறமும், வலது புறமும் திருப்பிப் பார்த்து,

"என்னால நம்ப முடியல" என்றாள்.

"ஏன் நம்ப முடியல?" என்றார் ரத்னா.

"இவன் அல்லவ் மாதிரி இல்லாம ரொம்ப அமைதியா இருக்கான்...! அதுமட்டுமில்லாம... "

"அதுமட்டுமில்லாம?" என்றான் நந்து கிஷோர்.

"இவன் அல்லவ் மாதிரி இல்லாம, ஹேண்ட்ஸமா வேற இருக்கான்...! இவன் முகம் பழையபடி மங்கூஸ் மாதிரியே இருக்கும்னு நினைச்சேன்" என்று சிரித்தாள்.

அனைவரும் சிரிக்க அர்னவ் மட்டும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் முகத்தை கோபமாய் வைத்துக் கொண்டு அவன் பக்கம் திரும்ப,

"எப்படி இருக்க?" என்றான் அர்னவ் முகபாவம் ஏதுமின்றி.

தன் கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு,

"எப்படி இருக்கேனா? நீ என்னை எப்படி இருக்கேன்னு கேக்குறியா...? என்ன மனுஷன் நீ? என்கிட்ட பேசணும்னு உனக்கு ஒரு தடவை கூட தோணவே இல்ல... ஆனா இப்போ, நான் உன் முன்னாடி வந்து நின்ன பிறகு, நான் எப்படி இருக்கேன்னு கேக்குற...! ஏன் உனக்கு இவ்வளவு அவசரம்...? உன்னை ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத... இன்னும் பொறுமையா பத்து வருஷம் கழிச்சு கேளு"

"அவன் ஹாவார்டுக்கு படிக்க போயிருந்தான் இல்ல..." என்று சமாளிக்க முயன்றார் அரவிந்தன்.

"அங்கிள், ஹாவர்டும் பூமியில் தானே இருக்கு?"

"அவன் படிப்புல பிஸியா இருந்துட்டான்" என்றார் ரத்னா.

"ஓ, அப்படியா...? அப்படின்னா படிப்பு முடிஞ்சதுக்கு பிறகு ஏன் பேசல?"

அர்னவ்வை நோக்கி திரும்பிய அவள்,

"நீ எதுவுமே சொல்ல மாட்டியா? உனக்காக ஆர்க்யூவ் கூட மத்தவங்க தான் பண்ணனுமா? உன் வாயைக் கூட திறக்க மாட்டியா?" என்றாள் கோபமாய்.

"சாரி..."

"சாரியா? அவ்வளவு தானா? உனக்கு அதுக்கு மேல சொல்றதுக்கு எதுவுமே இல்லையா?"

அவ்வளவு தானா? என்ற அவளது வார்த்தை, அவளுக்கு இருந்த எதிர்பார்ப்பை குறித்ததை உணர்ந்தான் அர்னவ்.

குஷி தன் பல்லை நறநறவென கடிக்க, அரவிந்தனும் ரத்னாவும் ஒருவரை ஒருவர் ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டார்கள், அவளிடம் சாரி கூறிய அர்னவை எண்ணி. அவன் அவ்வளவு சுலபமாய் யாரிடமும் மன்னிப்பு கூற மாட்டான் என்பது அவர்களுக்கு தான் தெரியுமே...!

"உன் கூட நேவி ஸ்கூல்ல படிச்ச ஃபிரெண்ட்ஸ் எல்லாம் இன்னும் எப்படித் தான் அவங்க ஃபிரண்ட்ஷிப்பை உன்கூட மெயிண்டேன் பண்றாங்கன்னு எனக்கு புரியவே இல்ல" என்று குஷி கூறியதை கேட்டு அனைவரும் வியப்படைந்தார்கள்.

"அது உனக்கு எப்படி தெரியும் குஷி?" என்றான் நந்து கிஷோர்.

"அது என்ன பெரிய விஷயம்? இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்திலையே ஃபேஸ்புக்ல வெறும் பதினேழு ஃபிரண்ட்ஸ் வச்சிருக்கிற ஒரே ஆத்மா இவன் மட்டும் தானே...!" என்றாள் எகத்தாளமாய்.

அர்னவ் திகைத்துப் போனான். அப்படி என்றால், அவனது ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை அவள் பின் தொடர்கிறாளா? சிறிது நேரத்திற்கு முன்பு,  அவனை தெரியாதது போல நடந்து கொண்டாளே...! அது பாசாங்கா? அவனது முகம் போன போக்கை பார்த்து வெடித்து சிரித்தாள் குஷி.

"நானும் உன்னை மாதிரியே எந்த சென்டிமென்ட்டும் இல்லாம இருப்பேன்னு நினைச்சியா?" என்றாள் அர்னவிடம்.

அவனுக்கு சென்டிமென்ட் இல்லையா? என்று தனக்குத்தானே கேள்வி எழுப்பிக் கொண்டான் அர்னவ்.

அந்த பேச்சை அங்கேயே முடிக்க வேண்டும் என்று எண்ணினார் ரத்னா.

"குஷி, நீ போய் ஃபிரஷ் ஆயிட்டு வா. நம்ம அப்புறமா பேசலாம்" என்றார்.

அர்னவ்வை பார்த்த குஷி,

"நான் உன்னை அவ்வளவு ஈஸியா விட்டுடுவேன்னு நினைக்காதே" என்று அங்கிருந்து சென்றாள், அவனை சங்கடத்தில் ஆழ்த்தி.

.........

முகம் கை கால் அலம்பிய பிறகு, அனைவரும் உணவு மேசையில் கூடினார்கள். அனைவருக்காகவும் சப்பாத்தியும், பட்டாணி உருளைக்கிழங்கு கறியும், அர்னவ்க்கு இட்லி சாம்பார் சட்னியும் சமைத்து இருந்தார் ரத்னா.

குஷிக்கு சப்பாத்தியை ரத்னா பரிமாற போக, அவரை தடுத்தாள் குஷி.

"எனக்கு நீங்க இட்லி கொடுக்க மாட்டீங்களா?" என்றாள் அதிர்ச்சியாக.

"நான் உனக்காக சப்பாத்தி செஞ்சேன்"

"எனக்கு இட்லி பிடிக்கும்னு நீங்க எப்படி மறந்தீங்க?"

"உன்னோட விருப்பங்கள் மாறி இருக்கும் என்று நினைச்சேன்"

"என்னோட விருப்பமாவது மாறி போறதாவது... குஷி எப்பவும் ஒரே மாதிரி தான் இருப்பா"

அதைக் கேட்ட அர்னவ்க்குள் லேசான நடுக்கம் பிறந்தது அவன் பயந்தது அதற்காகத்தான். அவன் தனக்கு சப்பாத்தி எடுப்பதை கண்டார் ரத்னா.

"நீ எதுக்கு சப்பாத்தி எடுக்கிற அரு? நான் உனக்காக தான் இட்லி செஞ்சிருக்கேன்"

"இன்னைக்கி நான் சப்பாத்தி சாப்பிட்டுக்குறேன். நீங்க இட்லியை குஷிக்கு கொடுங்க" என்றான்.

"அப்படி சொல்லு...! எப்படி இருந்தாலும் அதை உன்கிட்ட இருந்து நான் பிடுங்கிக்குவேன்னு உனக்கு தெரியும் தானே...?" என்றாள். பதில் கூறாமல் புன்னகைத்தான் அர்னவ்.

"இப்பவும் சப்பாத்தி உனக்கு பிடிக்கிறது இல்லையா?" என்ற அவள் மீது அவனது பார்வை குத்திட்டு நின்றது.

இப்பவும் என்று அவள் கூறியதன் அர்த்தம், அவனுக்கு சப்பாத்தி பிடிக்காது என்பதை, அவள் இன்னும் மறக்கவில்லை என்பது தானே?

"நல்லவேளை, நீ இன்னும் மாறல. நான் ரொம்ப பயந்து போயிட்டேன்!" என்று சாப்பிட துவங்கினாள்.

"நான் இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?" என்றார் ஷஷி.

"ஆமாம், எனக்கு கூட எங்க அம்மா வீட்டுல இருக்குற மாதிரி இருக்கு" என்றார் கரீமா.

"உன்னை மாதிரி ஒரு ஃபிரண்ட் எனக்கு கிடைக்கவே இல்ல" என்றார் ஷஷி.

"அவர் பொய் சொல்றாரு" என்றாள் குஷி.

"பொய் சொல்றானா?" என்றார் அரவிந்தன்.

"அவருக்கு ஃப்ரெண்ட் கிடைக்காம ஒன்னும் இல்ல...!  ஆனா அவர் தான் உங்க இடத்துல வேற யாரையும் ஏத்துக்க தயாரா இல்ல" என்றாள் கிண்டலாய்.

"நீயும் அப்படித்தானே இருக்க? நீயும் அர்னவ் இடத்தை வேற யாருக்கும் கொடுக்கவே இல்லையே..!"  என்றார் கரிமா.

ஆமாம் என்று தலையசைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினாள் குஷி. சங்கடத்தில் தவித்தான் அர்னவ். அவன் நினைத்ததை விட சூழ்நிலை மிகவும் கடினமாக தென்பட்டது அவனுக்கு.

"நீ என்ன பிளான் வச்சிருக்க குஷி?" என்றார் அரவிந்தன்.

"எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் சேரப் போறேன் அங்கிள்"

"எந்த காலேஜ்?" என்றான் நந்து கிஷோர்.

"செயிண்ட் பிஷப் லியோ காலேஜ்"

கல்லூரியின் பெயரை கேட்டு சாப்பிடுவதை நிறுத்தினான் அர்னவ். ஏனென்றால் அது அவன் பிடித்த கல்லூரி.

"ஆமாம், நான் அல்லவ் காலேஜ்ல தான் சேரப் போறேன்" என்றாள் குதூகலமாய்.

"உனக்கு கமாண்டர் ஆனந்தனை ஞாபகம் இருக்கா?" என்றார் ஷஷி.

"ஓ, நல்லா ஞாபகம் இருக்கு"

"அவரோட தம்பி அந்த காலேஜ்ல தான் வேலை செய்றார். அவர் தான் எனக்கு அங்க அட்மிஷன் கிடைக்க ஹெல்ப் பண்ணாரு"

"தட்ஸ் கிரேட்" என்றார் அரவிந்தன்.

"அல்லவ், என்னை நீ காலேஜுக்கு கூட்டிகிட்டு போறியா? நான் இப்போ உன்னோட ஜூனியர்" என்றாள் பெருமையுடன்.

"உன்னை நந்து கூட்டிட்டு போவான்" என்றார் ரத்னா அவசரமாக.

"ஆனா நீ படிச்சது வேற காலேஜ் தானே?" என்றாள்.

"அதனால என்ன? நான் உன்னை கூட்டிட்டு போக கூடாதா?" என்றான் நந்து கிஷோர்.

"நீ ஏன் எங்க காலேஜ்ல சேரல?" என்றாள் குஷி.

"எனக்கு வேற காலேஜ்ல சீட் கிடைச்சிடுச்சு அதனால தான்" என்ற நந்து கிஷோர், பேச்சை மாற்றச் சொல்லி ரத்னாவுக்கு சைகை காட்டினான்.

அரவிந்தன் கூட சற்று பதற்றமாகத்தான் இருந்தார். அந்த கல்லூரியை பற்றி மேலும் குஷியை பேச விடாமல் தடுக்க நினைத்தார்கள் அவர்கள். அது அவர்களை எங்கு கொண்டு சென்று நிறுத்தும் என்று அவர்களுக்குத் தான் தெரியும். குஷி ஏதோ கேட்க நினைக்க, திசை திருப்பினார் ரத்னா.

"உனக்கு தமிழ் தெரியுமா, குஷி?" என்றார்.

"கொஞ்சம் கொஞ்சம் தெரியும் ஆன்ட்டி.  நான் போன ஊர்ல எல்லாம் எனக்கு தமிழ் ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க. அதனால தமிழ் புரிஞ்சிக்கிறதுல எனக்கு கஷ்டம் இருக்காது"

"ரொம்ப நல்லதா போச்சு. தமிழ்நாட்டில் தமிழ் தெரியாம வாழறது ரொம்ப கஷ்டம்" என்றார் அரவிந்தன்.

"அப்படியா? அப்படின்னா எல்லாரும் என்கிட்ட இன்னையிலிருந்து தமிழ்ல பேசுங்க. அப்போ தான் நான் சீக்கிரம் கத்துக்குவேன்" என்றாள் குஷி.

"கடவுளே... எங்க தமிழை நீ தான் காப்பாத்தணும்" என்றான் நந்துகிஷோர் மேலே பார்த்தபடி.

அவன் தோளில் ஒரு அடி போட்டாள் குஷி.

"நம்ம எப்போ காலேஜுக்கு போறது?"

"நீ எப்ப கேட்டாலும் போகலாம். நான் உனக்காகவே இருப்பேன்" என்றான்.

"சோ ஸ்வீட் ஆஃப் யூ... நீ ஸ்வீட் ஹார்டா இருப்பேன்னு நான் நினைக்கவே இல்ல"

சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, பெருமை தாண்டவம் ஆடும் முகத்துடன் இருந்த நந்து கிஷோரை ஏறிட்டான் அர்னவ்.

"அட்லீஸ்ட், நீயாவது எனக்கு கம்பெனி கொடுக்கிறாயே... மத்தவனை மாதிரி வெறுப்பு வேதாந்தியா இல்லாம..." என்றாள் அர்னவை கோபமாய் பார்த்தபடி.

அவள் வெறுப்பு வேதாந்தி என்று யாரை கூறுகிறாள் என்று புரிந்து கொள்வதில் எந்த சிரமமும் இல்லை அர்னவுக்கு. சந்தேகம் இல்லாமல் அது அவன் தான். தலையை உயர்த்தி அவன் அவளை பார்க்க, தன் பல்லை கடித்துக் கொண்டு கோபமாய் அவனை பார்த்து,

"போடா..." என்றாள் அவள்.

அது அவனுக்கு சிறு வயது குஷியை ஞாபகப்படுத்தியது. இன்னும் அவள் மாறவே இல்லை. அப்படியே தான் இருக்கிறாள், என்று எண்ணியபடி சாப்பிட்டு முடித்துவிட்டு தன் அறைக்கு சென்றான் அர்னவ். சத்தமில்லாமல் அவனை பின்தொடர்ந்து சென்றாள் குஷி.

தொடரும்...

Okumaya devam et

Bunları da Beğeneceksin

12.7K 1.2K 33
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...
14.8K 632 29
இந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் பறிமாற்றங்கள் மற்றும் குழந்தையில்லா தம்பத...
56.1K 3.2K 53
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்...