மாண்புமிகு கொலைகாரா...! (முடி...

By NiranjanaNepol

79.9K 3.8K 488

உலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்த... More

1 முகிலன்
2 பசுத்தோல் போர்த்திய...
3 இலக்கியாவின் நிலைப்பாடு
4 அழையா விருந்தாளி
5 நற்கிள்ளியின் கேள்வி
6 இலக்கியாவின் தேர்வு
7 கூச்சல்
8 தடுமாற்றம்
9 முதல் சந்திப்பு
10 கிள்ளியின் மகள்
11 இலக்கியாவின் பதில்
12 இயலாமை
13 எண்ணச் சூழல்
14 நம்பமுடியாத...
15 நிபந்தனை
16 சரி...
17 முதலடி...
18 நிச்சயம்
19 மனதிற்கு பிடித்தவர்
20 சமாளிப்பு
21 உதவி
22 மதிவாணனின் நடிப்பு
23 டியர்...
24 திருமதி முகிலன்
25 மருதாணியில் பெயர்
26 வழிபாடு
27 நலங்கு
28 திருமணம்
29 முதல் நாள்... முதல் இரவு...
30 ஆரம்பம்
31 அம்மா வீடு
33 முகிலனின் மறுப்பு
34 முகிலனின் கோபம்
35 தனிப்பிறவி
36 காரியம்... காரணம்...
37 முகிலன் விடுத்த அழைப்பு
38 இழந்த தூக்கம்
39 விதியின் விளையாட்டு
40 புதிய அணுகுமுறை
41 வெகு இயல்பாய் முகிலன்...
42 விபத்தல்ல...!
43 முகிலனின் காதல்
44 இனிமையான வார்த்தைகள்
45 இக்கட்டில் முகிலன்
46 விளைவு
47 தெளிவான ஒப்புதல்
48 இலக்கியா பற்றிய உண்மை
49 கானா காதல்
50 இலக்கியாவின் காதல் கதை
51 மாண்புமிகு கொலைகாரன்
52 எதிர்பாராத முத்தம்
53 சுயகட்டுப்பாடு
54 முழுமை
55 அவள் யார்?
56 ஆட்டத்தின் திருப்புமுனை
57 கூட்டு களவாணிகள்
58 காரணம்
59 ஆட்டம் முடிந்தது
60 உண்மை நிறம்
61 கட்டம் கட்டப்பட்ட தேனிசை
62 தன்வினை...
63 வருத்தம்
64 மன்னிப்பு
65 இறுதி பகுதி

32 இலக்கியாவுடன்...

1.1K 59 6
By NiranjanaNepol

32 இலக்கியாவுடன்...

முகிலனை தன்னுடன் இழுத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தாள் இலக்கியா. அவளது அறையில் தன் கண்களை ஓடவிட்டு நின்றான் அவன். அவனது கண்கள், சுவற்றில் மாட்டப்பட்டிருந்த இலக்கியாவின் புகைப்படத்தில் நிலைத்து நின்றது. அதில் அவள் அழகாய் புன்னகைத்துக் கொண்டிருந்தாள். அவளது புன்னகை எப்பொழுதுமே ஒரு மாஸ்டர் பீஸ் என்று நினைத்தான் அவன்.

"சின்னையா, உட்காருங்க" என்று தன் கட்டிலை சுட்டிக்காட்டினாள்.

அவளை நோக்கி அதிர்ச்சியுடன் திரும்பிய அவன்,

"நீ உண்மையிலேயே என்னை சின்னையான்னு கூப்பிடுறியா?" என்றான்.

"ஆமாம்" என்று தன் தோலை லேசாய் குளிக்கினாள் அவள்.

"தேவையில்ல.. நீ என்னை எப்பவும் போல பேர் சொல்லியே கூப்பிடு. நீ என் அக்காவோட பேச்சை பெருசா எடுத்துக்க வேண்டிய அவசியம் இல்ல. அவங்களை மறந்துடு" என்றான்.

"நான் அவங்களை மறந்தாலும், அவங்க என்னை மறக்க மாட்டாங்க" என்று சிரித்தாள் அவள்.

"அவங்க எப்பவுமே அப்படித்தான். மத்தவங்க கிட்ட குறை கண்டுபிடிக்கிறதே அவங்க வேலை.  அவங்களை சீரியஸா எடுத்துக்காதே" என்று அவளை சமாதானப்படுத்த முயன்றான்.

"அவங்களை பெருசா எடுத்துக்காம எப்படி இருக்க முடியும்? ஏற்கனவே என்கிட்ட அவங்க குறை கண்டுபிடிச்சுகிட்டே இருக்காங்க. நீங்க எல்லாரும் என்னை சப்போர்ட் பண்றதை பார்த்தா, அவர்களுக்கு இன்னும் என் மேல கோபம் தானே வரும்?"

"நாங்க உனக்கு தான் சப்போர்ட் பண்ணுவோம்... ஏன்னா, யார் மேல தப்பு இருக்குன்னு எங்களுக்கு தெரியும்"

"இருக்கலாம்... ஆனா அவங்க உங்க மேல கோவப்பட மாட்டாங்க, என் மேல தான் கோபப்படுவாங்க"

"ஆனா..."

"தயவு செய்து புரிஞ்சுக்கங்க, சின்னையா"

"அவங்க ஒன்னும் நம்ம வீட்ல தங்கறது இல்லையே...? எப்பவாவது தானே வராங்க? அப்படின்னா நம்ம தனியா இருக்கும் போது நீ என்னை பேர் சொல்லி கூப்பிடலாமே?"

"நான் அப்படி கூப்பிட்டு பழகிட்டா, உங்க அக்கா வரும் போது என்னால அதை மாத்த முடியாது. வாய் தவறி நான் உங்க பேரை சொல்ல வாய்ப்பு இருக்கு..."

தன் இயலாமையை உணர்ந்தான் முகிலன்.

அப்பொழுது நற்கிள்ளி இலக்கியவை அழைத்தார்.

"இலக்கியா... வா, அம்மா காபி போட்டுட்டாங்க.  எடுத்துக்கிட்டு போ"

"இதோ வந்துட்டேன் பா" என்று வெளியே ஓடினாள் அவள்.

கட்டிலை விட்டு எழுந்த முகிலன், சுவற்றில் மாற்றப்பட்டிருந்த இலக்கியாவின் புகைப்படத்தின் அருகில் சென்றான், அதற்காகவே காத்திருந்தவன் போல. அந்த புகைப்படத்தில் மின்னிக்கொண்டிருந்த அவளது கன்னத்தை மெல்ல வருடினான். இலக்கியா வரும் அரவம் கேட்டு, மீண்டும் கட்டிலுக்கு சென்று அமர்ந்து கொண்டான். காபி குவளையுடன் உள்ளே வந்த இலக்கியா, அதை அவனிடம் கொடுத்தாள்.

"இந்தாங்க காபி"

அதை அவளிடம் இருந்து பெற்று, பருகினான் முகிலன்.

தனது அலமாரியில் இருந்து ஒரு ஆல்பத்தை எடுத்த அவள், அவன் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டு, அதிலிருந்த புகைப்படங்களை ஒவ்வொன்றாய் அவனுக்கு காட்டத் துவங்கினாள்.

"இது நான் தான்"

இரண்டு குதிரைவால் கொண்டையுடனும், புஸ் என்ற கன்னங்களுடனும் அழகாய் இருந்த, ஐந்து வயது குட்டி இலக்கியவை பார்த்து புன்னகைத்தான் முகிலன்.

"இந்த போட்டோ நான் செகண்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும்போது எடுத்தது" அதில் அவள் வெள்ளை நிற கவுன் அணிந்து, அனைத்து பற்களும் தெரியும்படி சிரித்துக் கொண்டிருந்தாள்.

"இது நான் லெவன்த் ஸ்டாண்டர்ட் படிக்கும்போது எடுத்தது. நான் எங்க ஸ்கூல் என்சிசி ல இருந்தேன்"

அதைக் கேட்டு அவன் வியப்புடன் புருவம் உயர்த்தினான்.

"இந்த போட்டோ, நான் எங்க ஸ்கூல் பேச்சு போட்டியில ஃபஸ்ட் பிரைஸ் வின் பண்ணும் போது எடுத்தது. என்னை தவிர வேற யாரு பேச்சுப் போட்டியில ஜெயிச்சிட முடியும்?" என்று சிரித்தாள் அவள்

தன் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டான் முகிலன். ஆம், வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருக்கும் அவளை, யார் பேச்சு போட்டியில் வென்று விட முடியும்?

கல்லூரி படித்து முடிக்கும் வரை எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களையும் ஒவ்வொன்றாய் அதற்குரிய முகபாவத்துடன் அவனுக்கு விளக்கி கூறினாள். அவளது கல்லூரி காலங்களில் மிக இளமையாகவும், அழகாகவும் இருந்தாள் அவள். அவளது புகைப்படங்களுடன் அவளது முக பாவங்களையும் அவன் ரசித்துக் கொண்டிருந்தான். காப்பியை குடித்து முடித்து, பக்கத்தில் இருந்த மேசையின் மீது கோப்பையை வைத்தான். மீண்டும் தனது அலமாரிக்குச் சென்ற அவள், தான் வாங்கிய சான்றிதழ்களை கொண்டு வந்து அதையும் அவனிடம் காட்டிக் கொண்டிருந்தாள். அவன் எந்த வார்த்தையும் பேசாமல் அமைதியாய் அவள் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்தான்.

அப்பொழுது அந்த அறையின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அந்த அறைக்குள் நுழைந்த இளங்கிள்ளியை பார்த்து கட்டிலை விட்டு எழுந்து நின்றான் முகிலன். அவனை பார்த்து புன்னகைத்தாள் இலக்கியா.

தன் திருமணத்தை நிறுத்தும் நோக்குடன், முகிலன் அன்று ஒரு நாள் அவர்கள் வீட்டிற்கு வந்த பொழுது, இலக்கியாவிடம் தன்னை திருமணம் செய்த கொள்ளக் கூடாது என்று இளங்கிள்ளி சண்டையிட்டதை அவனால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இலக்கியாவின் சிரித்த முகத்தை பார்த்து அந்த எண்ணத்தை விட்டு ஒழித்தான்.

"உள்ள வாண்ணா"

"நீங்க வந்து இருக்கீங்கன்னு அப்பா சொன்னாரு" என்றபடி உள்ளே நுழைந்தான் இளங்கிள்ளி.

"எங்க போயிருந்த?"

"அப்பா சர்க்கரை மண்டிக்கு போய் பணம் கொடுத்துட்டு வர சொன்னாரு. அதுக்கு போய் இருந்தேன்"

"ஓ... ஏங்க, இவர் தான் என்னோட ஸ்வீட்டான அண்ணா" என்று அவனை அறிமுகம் செய்து வைத்தாள் இலக்கியா.

கைகுலுக்கலுக்காக தன் கையை அவனை நோக்கி நீட்டினான் முகிலன். அவன் கையைப் பிடித்து சம்பிரதாயமாய் குலுக்கினான் இளங்கிள்ளி.

"நைஸ் டு மீட் யு" என்றான் முகிலன்.

"இதுக்கு முன்னாடி நம்ம அறிமுகப்படுத்திக்கல..."

"ஆமாம், நிறைய சந்தர்ப்பம் கிடைச்ச போதும் பண்ணிக்கல..." என்றான் முகிலன்.

இலக்கியாவின் முகத்தில் பதற்றம் படர்ந்தது. இளங்கிள்ளி, முகிலனிடம் அவன் மனம் காயப்படும்படி ஏதாவது கூறி விடுவானோ என்று பயந்தாள் அவள்.

"நீ ஃப்ரீயா இருந்தா, நீயும் எங்க கூட இரு அண்ணா" என்று பேச்சை மாற்றினாள் அவள்.

"இல்ல, அப்பா வீட்ல இருக்காரு. கடையில யாரும் இல்ல. நான் போகணும்" என்றான்.

சரி என்று தலை அசைத்தாள் இலக்கியா.

"நான் கிளம்புறேன்" என்று முகிலனை பார்த்து கூறினான். முகிலனும் சரி என்று தலையசைத்தான்.

"என் தங்கச்சியை பார்த்துக்கோங்க. யார் பேச்சையும் கேட்காம அவ உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்கா. அது ஏன்னு எனக்கு தெரியல. அவளுக்கு ஏமாற்றத்தை கொடுத்திடாதீங்க" என்றான்.

அவனுக்கு என்ன கூறுவது என்று தெரியாத முகிலன், மென்று விழுங்கினான். அவனது தங்கையின் நல்வாழ்விற்கான உத்திரவாதத்தை எப்படி கொடுப்பது என்று உண்மையிலேயே அவனுக்கு தெரியவில்லை.

சங்கடத்தில் தவித்தாள் இலக்கியா. அவளது அண்ணன், முகிலனிடம் இப்படி பேசுவான் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இலக்கியாவை மென்மையாய் அனைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டு அங்கிருந்து சென்றான் இளங்கிள்ளி.

"அவருக்கு உன் மேல ரொம்ப பாசம், இல்ல?" என்றான் முகிலன்.

ஆமாம் என்று தலையசைத்த அவள்,

"அவரை தப்பா நினைச்சுக்காதீங்க" என்றாள் கெஞ்சலாக.

"நான் எப்போ அவரை தப்பா நினைச்சேன்னு சொன்னேன்?'

அழகாய் புன்னகைத்தாள் இலக்கியா.

"என்னை நினைச்சி அவர் பயப்படுறதுல தப்பு ஒன்னும் இல்ல. என்ன இருந்தாலும் நான் ஒரு கொலை..."

கொலைகாரன் தானே? என்று அவன் கூறுவதற்கு முன்னால், அவன் வாயை பொத்தினாள் இலக்கியா, அவனுக்கு அதிர்ச்சி அளித்து. அவளை மருண்ட பார்வை பார்த்தான் முகிலன். தன் கையை மெல்ல அவன் வாயிலிருந்து இறக்கிய அவள்,

"உங்க கிட்டயிருந்து நான் அந்த வார்த்தையை கேட்க விரும்பல" என்றாள். அவளை அவ்வளவு சீரியஸாய் அவன் பார்த்தது அது தான் முதல் முறை.

"நான் சொன்னாலும் சொல்லலனாலும் அது உண்மை தானே?"

"இருந்துட்டு போகட்டும். ஆனா அதை நீங்க சொல்லாதீங்க. அதே இடத்துல பிடிவாதமா நின்னுகிட்டு இருந்தீங்கன்னா, எப்படி அதை விட்டு வெளியே வருவீங்க?" என்று அவள் பார்த்த பார்வை அவன் நெஞ்சை ஊடுருவியது.

"உங்க கடந்த காலத்தை நீங்க மறக்கணும்னு நினைக்கலையா?" என்றாள் வேதனை நிறைந்த குரலில்.

"ஆமாம்" என்று தலையசைத்தான்.

"அப்படின்னா, அந்த கசப்பான விஷயங்களை எல்லாம் மறந்துடுங்க. மறந்தும் அதை நினைக்காதீங்க" என்றாள் உறுதியான குரலில்.

ஒருவேளை, அதை அவனிடம் கூறியது,  இலக்கியவாக இல்லாமல் இருந்திருந்தால், அவன் அதற்கு வேறு விதத்தில் பதில் அளித்திருப்பான். ஆனால், அவள் இலக்கியவாயிற்றே... அவளுக்கு வித்தியாசமாய் பதிலளிப்பதை விட்டுவிட்டு, சரி என்று புன்னகை புரிந்தான்.

பளிச்சென்று சிரித்த இலக்கியா,

"நல்ல பிள்ளை" என்றாள்.

கண்ணிமைக்கும் நேரத்தில் மாறிவிட்ட அவளது முகபாவம் அவனுக்கு வியப்பை அளித்தது.

"சரி, பாதாம் அல்வாவை தவிர உங்களுக்கு வேற என்ன பிடிக்கும்னு சொல்லுங்க?" என்றாள்.

உன்னைத்தான் பிடிக்கும் என்று கூறவேண்டும் என்று அவனுக்கும் தோன்றியது. ஆனாலும் பதில் அளிக்காமல் அவளை பார்த்துக் கொண்டு நின்றான் முகிலன். தன் கையை அவன் முகத்திற்கு முன்னால் அசைத்த அவள்,

"சொல்லுங்க" என்றாள்.

"நேர்மையா, உண்மையா இருக்கிறது எனக்கு பிடிக்கும்"

"சேம் பின்ச்..." என்று அவன் சட்டையை கிள்ளினாள்.

அப்பொழுது அவளை அழைத்தார் பொன்மொழி,

"இலக்கியா, இங்க வரியா?"

"இதோ வரேன்மா"

"நான் இப்போ வரேன்" என்று வெளியே ஓடிய அவளை, தரையில் போட்டிருந்த கால்மிதி தடுக்கியது.

"பாத்து..." என்று பின்னால் இருந்து கத்தினான் முகிலன்.

அவனை நோக்கி திரும்பிய அவள், சிரித்தபடி தன் கண்களை சிமிட்டிவிட்டு ஓடினாள். பெருமூச்சு விட்டு தலையசைத்தான் முகிலன்

அப்பொழுது இளங்கோவிடமிருந்து முகிலனுக்கு அழைப்பு  வந்தது. அதை ஏற்று,

"சொல்லு இளங்கோ" என்றான்.

"எல்லாம் நார்மல் தானே?"

"ஆமாம்"

"இலக்கியா சொன்னது சரி தான். வெண்ணிலா இன்னும் இந்தியாவை விட்டு போகல. இன்னும் சென்னையில தான் இருக்கா"

"உனக்கு எப்படி தெரியும்?"

"என்னோட ஆளுங்க உன் கல்யாணத்துக்கு வந்திருந்த ஒரு சந்தேகத்துக்கு இடமான ஆளை பிடிச்சாங்க"

"என்னது? என்னோட கல்யாணத்துலயா?"

"ஆமாம்... பிடிச்சி என்னுடைய இடத்துக்கு கூட்டிட்டு வந்தாங்க. எதையாவது செஞ்சு, உங்க கல்யாணத்தை நிறுத்த சொல்லி, அவனை வெண்ணிலா அனுப்புனதா அவன் சொன்னான்"

"நீ அவளைப் பிடிச்சியா, இல்லையா?"

"இல்ல, அந்த ஆள் சொன்ன இடத்துக்கு போனப்போ, அவ அங்க இல்ல. அங்க இருந்து அவ எஸ்கேப் ஆயிட்டா"

"எப்படி?"

"அவ அனுப்புன ஆள் கிட்ட இருந்து எந்த பதிலும் இல்லாம போனதால, அவ அலர்ட் ஆகி இருக்கலாம்"

"இப்போ நீ அந்த ஆளை என்ன செய்யப் போற?"

"அவனை போலீஸ்ல ஒப்படைச்சிடட்டுமா?"

"சரி, ஆனா அதுக்கு முன்னாடி அவனோட ஃபோனை அவன்கிட்ட இருந்து வாங்கிடு"

"சரி"

"வெண்ணிலாவை சீரியஸா தேட ஆரம்பி"

"சரி"

"வேற ஏதாவது?"

"இலக்கியாவை ஜாக்கிரதையா பாத்துக்கோ. அவங்களை தனியா எங்கேயும் போக விடாத"

"சரி, நான் பாத்துக்கிறேன்"

அந்த அழைப்பை துண்டித்தான் முகிலன். அவனுக்குள் இருந்த பதற்றம் அதிகரித்தது அவனிடமிருந்து வெண்ணிலாவுக்கு என்ன தான் வேண்டும்? எதற்காக அவள் இலக்கியாவை குறி வைக்கிறாள்? அவளுக்குத் தான் தெரியுமே, அவன் அவளை எந்த அளவிற்கு வெறுக்கிறான் என்று...! பிறகு எதற்காக அவனை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறாள்? அவள் அடுத்து என்ன செய்யப் போகிறாள் என்று புரியவில்லை அவனுக்கு.

தொடரும்...

Continue Reading

You'll Also Like

30.1M 660K 33
For months Summer is trapped in a cellar with the man who took her - and three other girls: Rose, Poppy, and Violet. His perfect, pure flowers. His f...
35M 1.3M 77
COMPLETED. "Look, if you're-" "Shut up." I was taken back at the sudden manner in which he spoke to me. "Let's get something straight Miss Greene, I...
6.1M 207K 39
The only thing Mia Hope has in common with Jake Carpenter, Artwood High's most popular quarterback, is a love for the coffee served at The Coffee Pod...
44.4M 1.3M 37
"You are mine," He murmured across my skin. He inhaled my scent deeply and kissed the mark he gave me. I shuddered as he lightly nipped it. "Danny, y...