அடுத்த நாளே அவளை சென்று பார்க்க வேண்டும் என்று கலைக்கு உறுத்த ஆரம்பித்தது.
மணியை பார்த்தாள். 10.25 என இருந்தது. இப்ப கிளம்பினா கூட நாளைக்கு அவள பார்க்கலாம்னு வேகமாக கிளம்பினாள்.

கலையின் விடுதி இருகே வந்தவள்.. "தமிழ்.. எங்க இருக்க??"

"நான் ரூம்ல படம் பார்த்திட்டு இருக்கேன் கா.. நீ.." என்று அவள் ஆரம்பிக்கும்‌முன்பே, கலை,

"கீழ வாடீ.. வெயிட் பண்றேன்"

தங்கைக்கு தாங்க முடியாத சந்தோஷம். அக்காவை பார்த்து எத்துனை நாட்கள் ஆயிற்று..

பத்து நிமிடத்தில் வெளியே வந்தாள்.

"கா.. சொல்லாம வந்திருக்க.. "

"சரி போயிரவா.‌ " என்றாள் கலை விளையாட்டாக.

"கா.‌ " என்று சினுங்கிக்கொண்டே அவளை கட்டியணைத்தாள் கலை‌. கையில் இருந்த பைகளில் ஒன்றை அவளிடம் கொடுத்தவள்.." இந்தா ஸ்நேக்ஸ்.. ரூம்ல வச்சிட்டு வா.‌ வெளில போலாம்" என்றாள்‌

அடுத்த 10 நிமிடத்தில் அவளது கல்லூரிக்கு வெளியில் இருந்த பூங்கா போன்ற ஒரு இடத்தில் தமிழ் கொண்டு வந்த போர்வையை விரித்து அமர்ந்தனர்..

அக்காவின் மடியில் சவுகர்யமாக படுத்தவள்,
"சென்னைலாம் சுத்தி பார்த்தியா கா??" என்றாள்.

அவளது ஆயிரம் கேள்விக்கும் சலிக்காமல் பதில் கூறி கொண்டிருந்தவள், ஒரு அழைப்பை ஏற்றாள்.

"அந்த ஊஞ்சல் பக்கதுல இருக்கோம் பாரு " என்று யாருக்கோ வழி சொல்லிக்கொண்டிருந்தாள் கலை.

தங்கையும் திரும்பி பார்க்க.. அங்கு தாமரையும் சீலனும் வந்திருந்தனர்..

"அக்கா.. மாமா.. " என்று தமிழ் கத்த.. இருவரும் புன்னகை சிந்தியவாறு வந்தனர்.

"அண்ணி.‌. என் மேல கோவத்துல தான் வர்றத முன்னாடியே சொல்லலையா??" என்றான் சீலன்.

"கோவம் இருக்கு.. ஆனா அதுக்கா இல்லடா.. நைட் 11 மணிக்குத்தான் எனக்கே திடீர்னு தோனுச்சு.. உட்காரு..‌உட்காரு தாமர.. " தாமரையும் முகத்தில் ஒரு புது பொலிவு தெரிந்தது கலைக்கு. தாமரை சந்தோஷமாக இருக்கின்றாள் என்பதைப்பார்த்து கலைக்கு நிம்மதியாக இருந்தது.

இமைWhere stories live. Discover now