30🎊

298 17 2
                                    

"இது எப்படி பத்தும்?" தாமரையின் குரல் அந்த புது வீட்டின் சுவர்களில் பட்டு எதிரொலித்தது.

பொருட்கள்‌ இறங்கியதிலிருந்து ஒரே ஆரவாரம் தான். அத கொடு இத கொடு என..‌

அவர்கள் இருந்தது ஒரு மாடி வீட்டில் . ஆயிரதெட்டு நிபந்தனைகள் வேறு‌ . அப்பப்பா! இதெல்லாம் கேட்பதற்கு பதில் புது வீடு கட்டிவிடலாம் போல..

"சீலா நூடுல்ஸ் வாங்கிட்டு வாடா.. அத நைட்டுக்கு சாப்பிட்டுக்கலாம்.‌ இருக்குற‌ அலுப்புக்கு என்னால ஒரு அடி கூட நகர முடியாது சாமி‌ "

இல்லத்தரசியின்‌ ஆணைக்கிணங்கி வாங்கி வந்து கொடுத்தான் சீலன்.

"சீலா.. "

"ம்ம்"

"அக்காட்ட பேசினியா?"

"இல்ல டீ.. விடு அவங்களே பண்ணுவாங்க.. ஏன்?"

" தமிழ் நேத்து அங்க போனால..  தருண் சார் பத்தி நிறைய சொன்னா.. அவருக்கு அக்காவ பிடிச்சிருக்குன்னு  சொல்றா டா.. "

"ம்ஹூம்??? புரில.."

"அக்காவையும் அவளையும் நல்லா பார்த்துக்கிட்டாராம்.. நல்லா பேசுறாராம்.. அது இதுன்னு ஒரு பெரிய லிஸிட்டே சொல்றா.. "

"அண்ணிக்கு சீக்கிரம் நல்லது நடந்தா சரிதான். பார்ப்போம் "



" எல்லாரும் கண்டிப்பா வந்திடனும். " மலர் தன் மகள் அகல்யாவின் பிறந்த நாளுக்கு கடையில் வேலை பார்க்கும் அனைவரையும் அழைத்தாள்.

கலையின்‌‌ காதில் அது விழுந்ததா எனறு தான்‌ தெரியவில்லை.‌அருகில் நின்று கொண்டிருந்த நபரால்.

"கண்டிப்பா வரனும்" என்று வாறு கலையை நோக்கினான். உதடுகள் நடுங்க ஒரு புன்னகை..

ஏதோ அவளை‌ இவ்வளவு நேரம் காணாததுபோல்‌ அவள் தன்னை பார்த்தவுடன்.. புருவங்களை தூக்கியவாறு சிரித்தான்..

"ஹாய்.. "

"ஹாய்.. "‌ இருவரும் கடை வாசலில் வைத்து வணக்கங்களை பறிமாறிக்கொண்டனர்..

"வெளில போலாமா??" தருண் ஆரம்பித்தான் , அவளாக ஒன்றும் கேட்க மாட்டாள்‌ என்று நன்கு உணர்ந்து.

இமைWhere stories live. Discover now