21🎊

485 20 7
                                    

விடுதிக்கு வந்தவுடன், சீலனிற்கு சென்றது முதல் அழைப்பு. அடிக்காத ஒரே குறை மட்டுமே!!!.

"கலை.." மலர் தன் அலுவலகத்தில் இருந்து அழைத்தாள்.

"மேடம்.. " என இரண்டு நிமிடத்தில் வந்து நின்றாள்.

"கீர்த்தனா இன்னில இருந்து லீவ். சோ கல்யாண டிரஸ் வர்க்க ஷக்தி பார்த்துப்பா.. மத்த பென்டிங் இருக்க வர்க்க கொஞ்சம் நீயும் கிரிஸ்டியும் சேர்ந்து பண்ற மாதிரி இருக்கும்.இப்ப இன்னும் எத்தன பென்டிங் இருக்கு.. அத மட்டும் லிஸிட் போட்டு எடுத்திட்டு வா.. ஈவ்னிங் மீட்டிங்க வச்சிப்போம். "

"சரி மேடம்" என்று அவள் கூறியவற்றை மனதில் ஏற்றியவாறு வெளியேறினாள்.
ஏற்கனவே இருந்தவற்றை மற்றவர்கள் தொடங்கியிருக்க, கலையின் கைவசம் கம்மியாகவே ஆர்டர்கள் இருந்தன..

"கலை .. உங்களுக்கு இன்னொரு ஆர்டர் தர்றேன். "என்று கூறி கல்யாணத்திற்கு அகல்யாவிற்கு பட்டு பாவாடை தைத்து தரும்படி கூறினாள்.

"டிசைன் நான் வரைந்து தர்றேன் கலை.. அதுக்கு மேல உங்க ஆரி வர்க் பண்ணி கொடுங்க.‌" என்றாள் மலர்.

அகல்யாவை பார்க்காமல் எந்த கலர்.. எந்த டிசைன் எல்லாம் எப்படி செலக்ட் செய்வது என்ற குழப்பத்திற்கு ஆல் ஆனாள் கலை.‌அதற்கு ஏற்றார் போல் மாதவனை அகல்யாவை அழைத்து வர செய்திருந்தாள் மலர்.

மலரின் கடைக்கு என்றவுடன் கூடவே வால் போல் தருணும் வந்து சேர்ந்தான் .

"இவன எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க???"மலர் , தருணின் விழி வேட்டையை பார்த்தவள் கேட்டாள்.

சற்று நேரத்தில் கலையும் வந்து சேர்ந்தாள்.

ஒரு வேளை அவள் வந்ததும் அவனை பாரத்து சிரித்திருந்தாள் நிலைமை வேறு வகையாக மாறியிருக்கும் போலும். ஆனால் அவனை கவனியாதைப்போல் அவள் மலரின் கைவண்ணத்தில் ஒவ்வொரு கலராக வைத்து அவற்றை செய்வதில் மும்முரமாக இருந்தால்.

உண்மையில் நடுங்கிக்கொண்டிருந்தாள். தருணின் பார்வையில். அவளை எடுத்து விழுங்க காத்திருப்பவன் போல் வச்சக்கண்ணை வாங்காமல் அவளை பார்த்துக்கொண்ணிருந்தான்.

இமைWhere stories live. Discover now