" இரு இனியா... எனக்கு என்னமோ,  அவன் சும்மா கிண்டல் பண்ணதுக்காக  அவ அவனை அடிச்சிருப்பான்னு தோணல. "

இதயாவை குழப்பத்துடன் பார்த்தாள் இனியா.

" இதிமா, அப்பாகிட்ட உண்மைய சொல்லு.  உன் கூட நான் இருக்கேன். எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்,  அப்பா கிட்ட சொல்லு. "

" அவன் என்னை காதலிப்பதா எல்லார்கிட்டயும் சொல்லி வச்சிருக்கான்... " என்றாள் மெல்லிய குரலில்.

அதைக் கேட்டு அதிர்ந்து போனாள் இனியா.  இப்படிப்பட்ட சமாச்சாரங்களை,  அவள் தினம் தினம் பள்ளியில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள். ஆனால்,  அது அவள் வீட்டு வாசலில் வந்து நிற்கும் பொழுது,  அதிர்ச்சியாக இருக்க தானே செய்யும். அவளுடைய கவனம்,  இதைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்த அப்பா,  மகளின் பக்கம் திரும்பியது.

" அவன் அப்படியே செஞ்சிருந்தா கூட,  நீ அவனை இக்நோர் பண்ணி இருக்கலாமே. "

" நான் எத்தனையோ தடவை அவனை வார்ன் பண்ணிட்டேன் பா. ஆனாலும்,  நான் எங்க போனாலும் என் பின்னாடியே சுத்துறான். நான் போற இடத்துல எல்லாம்,  அவனுடைய ஃபிரண்ட்ஸ் அவன் பேர சொல்லி சொல்லி என்னை கிண்டல் பண்ணி,  வெறுப்பேத்தறாங்க.  மத்த ஸ்டூடன்ட்ஸ் எல்லாம் என்ன பத்தி என்ன நினைப்பாங்க? அதான் எல்லார் முன்னாடியும் ஒரு குத்து விட்டேன். இனிமே யாரும் என்னை தப்பா நினைக்கமாட்டாங்க இல்ல"

" மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு நம்ம ஏன்டா நினைக்கணும்? "

" கண்டிப்பா நினைக்கணும் பா...  ஏன்னா அது என்னுடைய செல்ஃப் ரெஸ்பெக்ட்  சம்பந்தப்பட்டது.  நான் எப்படி சும்மா இருக்க முடியும்? "

அவள் பேசியதைக் கேட்டு பெருமைப்பட்டுக் கொண்டான்,  பாரி.

" காதலிக்கிறது ஒன்னும் பெரிய குற்றம் இல்லையே.." என்றான் புன்னகையுடன்.

அதைக் கேட்டு,  மேலும் அதிர்ந்து போனாள் இனியா. *என்ன அப்பா இவர்?* என்பது போல. ஆனால்,  அவளுடைய மகளின் பதில்,  அவளை ஆச்சரியப்படுத்தியது.

மௌனத்தின் குரல் (முடிந்தது)Where stories live. Discover now