அவனுக்கு தூக்கத்திலிருந்து விழிப்பு வந்துவிட்டது. ஆனாலும் களைப்பில் உடல் ஒத்துழைக்க மறுத்தது. கண்களை திறக்க முடியாமல் படுத்திருந்தான்.

"ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க. நைட் லேட்டாத்தான் தூங்கினன்.."

"ஜாமம் முழுக்க ஊரு சுத்தினா இப்படித்தான் தொழ எழும்புறது கஷ்டமாத்தான் இருக்கும்" நேற்றைய கோபம் இன்னும் மனதில் இருந்தது. அது அவனை எழுப்புவதில் வெளிப்பட்டது.

"இப்ப எழும்ப போறிங்கலா? இல்லையா?"

"எழும்புறன்னு தானே சொல்றன். எதுக்கு கத்துறீங்க?"

"தொழாம இப்படி கவுந்தடிச்சு தூங்குறதை பார்த்துட்டு என்னால சும்மா இருக்கமுடியாது"

"சரி அப்ப கொஞ்ச நேரத்துக்கு அந்த பக்கமா திரும்பி இருங்க" என்று மனைவிக்கு பதில் கொடுத்தபடியே களைப்பை உதறிவிட்டு எழுந்து அமர்ந்தான்.

அவன் பதிலில் கடுப்பான ஹிக்மா அவன் எழுந்ததை பார்க்காமலே

"பாவம்னு கலாவாகிடுமேன்னு எழுப்பினேனே என்னை சொல்லனும். நீங்க அப்படியே ஷைத்தானை கட்டிப்புடிச்சிட்டு தூங்குங்க. எனக்கென்ன வந்திச்சி" என்று பொறிந்து தள்ளிவிட்டு அறையிலிருந்து வெளியேறினாள்.

மாமனார் தொழுகை முடித்து பள்ளியிலிருந்து வந்ததும் தேநீர் தயாரித்து கொடுத்தாள். தேநீர் கோப்பையை வாங்கிக் கொண்டவர்

"நைட் ரெண்டுமணி பிந்தித்தான் ரய்யான் வந்தான். டயர்ட்ல தொழாம தூங்கிருவான். கொஞ்சம் எழுப்பி விட்ருங்க மகள்"

"சரி மாமா" என்றவாறு மீண்டும் மாடி ஏறினாள். ரய்யான் தொழுது முடித்த அடையாளமாக தொழுகை விரிப்பை மடித்து வைப்பதை பார்த்ததும் திருப்தியானாள். ஹிக்மா நிற்பதை கண்டவன்

"நீங்களா ட்ரெஸ்ஸெல்லாம் மடிச்சு வச்சீங்க?" என்றான் லேசாக ஆச்சரியம் கலந்த தொனியில்

"ஆமாம்.. ஏன்?"

"இல்ல நீங்க எப்பவும்போல சும்மா வெச்சிருக்கலாம். நானே மடிச்சிருப்பேன்" என்றதும்

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now