காதல் எனும் விந்தை

599 46 4
                                    

காதல், இந்த ஒற்றை வார்த்தையில் தான் எத்தனை அர்த்தங்கள்! எத்தனை உணர்வுகள்! சுகங்களின் உச்சம் காதல்; ரணங்களின் இருப்பிடம் காதல்;

இப்பாதையில் வழி தேடி அலையும் ஜீவன்கள் கோடி. ஆனால் , சிலந்தி வலையை பின்னி சிக்க வைக்கும் காதல். அந்த மூன்று வார்த்தைகளை கேட்க வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் பலர்.

எத்தனை உயரத்தில் உள்ள மனிதனாலும் வெட்கமின்றி ஏங்கி கேட்கப்படும் சுவையான விஷம் காதல். ஆம் ,உயிரினை அருந்துவதில் காதலுக்கு விஷம் கூட இணையில்லை.

தாயின் மடியினை நாடும் குழந்தை போல தன் உறவினை தேடச் செய்யும். உடலோடு முடிந்துடாது உணர்வுகளின் ஒருங்கிணைப்பு காதல். காயம் நிறைந்த இதயங்களுக்கு காதலே சிலநேரம் மருந்தாகும். சில நேரங்களில் அதுவே அந்த காயத்தின் காரணமாகவும் இருக்கும்.

சில மணித்துளிகள் உடன் பயணித்த ஒருவரை இறுதிவரை துணையாய் ஏற்கும் சக்தியை காதலே தரும். தினம் பார்த்து பேசி ரசித்து உறவு கொள்தல் அல்ல காதல்; மனதினால் மரணத்திலும் இணைந்து இருப்பதே காதல்.

உலகத்தின் அதிர்ஷ்டசாலிகளும் காதலர்களே; துரதிஷ்டவாதிகளும் காதலர்களே; சிறு பொருளினில் கூட காதலரின் நினைவுகளை தாங்கும் காதல்.

வெற்றியோடு மட்டும் தொடர்புடையது அல்ல தன் காதலனை வெற்றி பெறச் செய்ய மனமுவந்து தோற்பதிலேயே காதல் சிறக்கிறது. தன் காதலியின் சிரிப்புக்காக ஆயிரம் ஈட்டிகளையும் தாங்கி நிற்பதே காதல்.

ஹரிஷும் இன்று அதே நிலையில்தான் இருந்தான். கேட்ட வார்த்தைகளை நம்பி ஏற்கும் துணிவில்லாது தவித்திருந்தான்.

' நினைவுகளோடு கலந்தவளின் திருமணம் நடக்க வாழ்த்துவதா ? அல்ல இழந்த உயிரினை மீட்க வெட்கமின்றி கெஞ்சுவதா ?' என்று புரியாத புதிர்களை தன் இதயத்திடம் வைத்தான்.

இறுதியில் அவள் இன்பமாய் வாழ மனதோடு வாழ்த்துவதாய்  முடிவெடுத்தான். போலி புன்னகையை கூட முகத்தில் காட்ட இயலாது தன் அறை கதவையே வெறித்து இருந்தான்.

காதல் சுகமானது❣❤❣(முடிவுற்றது)Where stories live. Discover now